அவல் அடை :
சாத்து மிகுந்த அவல் சமையல் முறையில் மிகக்குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது பொது வாக அவல் உப்புமா, மற்றும் இனிப்பு பதார்த்தங்களிலேயே சேர்க்கிறோம் சமையலில் ஒன்றிரண்டு என செய்வதுண்டு. அதுவும் வட மாநிலங்களில் போகா என்ற உப்மா வகை தினசரி உணவாக செய்வதுண்டு. கொஞ்சம் வித்தியாசமாக சமைக்க எண்ணுபவர்களுக்கு இது ஒரு சவாலே!!!
செய்யத்தேவையான பொருட்கள்:
அவல் -1 கோப்பை ஊறியது (1/2 கோப்பை ஊறவைக்காதது)தண்ணீர் வடித்து, நன்றாக பிழிந்து அரைக்க ஏதுவாக எடுத்துவைத்துக்கொள்ளவும்
அரிசி -1 கோப்பை
பூண்டு-4 பல்
சீரகம்-1/2 தேக்கரண்டி
வர மிளகாய்-2/3
உப்பு-1/2 தேக்கரண்டி
பொடிக்க: ஒன்றிரண்டாக பொடித்துக வைத்து கொள்ளவும்)
நிலக்கடலை-1/4 கோப்பை (வருத்தது )
பொட்டு கடலை -1/4 கோப்பை (வரு கடலை)
சிறிதாக வெட்டிவைத்துக்கொள்ளவும் :
வெங்காயம்-1
தக்காளி-1
கொத்தமல்லி இலை -1 மேஜைக்கரண்டி
செய்முறை:
‘சுத்தம் செய்து, ஊறவைத்த பச்சரிசி மற்றும் பூண்டு, சீரகம் உப்பு ஆகியவற்றை முதலில் அரைத்து பின்னர், அவல் சேர்த்து கெட்டியாக சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பொட்டு கடலை மற்றும் வேர்க்கடலையை சற்று கொரகொரப்பாக
அரைத்துக்கொள்ளவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து, வெட்டிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.ஆடை மாவு பதத்திற்கு மாவை தயாராக வைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல்லை காயவைத்து அடை போல ஊற்றி மிதமான தீயில் நிதானமாக இரு புறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்து, தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
நல்ல குறிப்பு. இங்கே போஹாவில் உப்புமா, தோசை போன்றவை செய்ததுண்டு. அடை குறிப்பு செய்து பார்க்கத் தூண்டுகிறது. செய்து பார்க்கிறேன்.
LikeLike
Pls give d youtube link for your all recipes
LikeLike
Pls give d youtube link for your all recipes
Keep rocking
LikeLike
Pl join me in dis group 9994680066
LikeLike