கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
மனிதன் எந்தத் துறையில் இருந்தாலும் அவனது முக்கிய அடிப்படைத் தேவை உணவு. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உணவு தனிச்சிறப்பு வாய்ந்தது, இருப்பினும் கலாச்சாரம் நிறைந்த செட்டிநாட்டு சமையல் உலகளவில் புகழ் பெற்றது அனைவருக்கும் தெரிந்த தகவல், நகரத்தார்கள் நிறுவிய இந்த வீட்டுத் தொழில்நுட்பமான சமைக்கும் கலை நூதனமானது. அவர்களின் விருந்து உபசரிப்பும் குறிப்பிடத்தக்கது. இங்கு அறுசுவையுடன் உணவு பரிமாறப்படும், விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற பெருமைக்குரியவர்கள் இந்த நகரத்தார்கள். செட்டிநாட்டு சமையல் புகழ் பெற்றதர்க்கு காரணம் சுவையுடன் கூடிய ஆரோக்கியமும் தான். நம் முன்னோர்கள் தகுந்த முறையில் கையாண்ட அளவு முறை, காலம். தரம், ஆர்வம், நுணுக்கம், மற்றும் மருத்துவ மதிப்பு ஆகியவை இந்த செட்டிநாட்டு சமையலில் மிகவும் குறிப்பிடத்தக்கது.
நான் என் முன்னோரிடம் கண்டு வியந்த அற்புதமான இந்த சமையல் கலையை என் அனுபவத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து நீங்களும் பயன் பெற விரும்புகிறேன். ஆகவே இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள பல முக்கிய சமையல் முறைகள் மற்றும் சிறப்பு சமையல் குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அஞ்சறைப்பெட்டியும் அறுசுவையும் – செட்டிநாட்டு உணவு வகைகளுக்கு பிரதானமே அதற்குரிய மாவு மற்றும் மசாலா தயாரிப்புகள்தான் .
ஆச்சிமார்கள் கையாண்ட செய்முறை மிகவும் வித்தியாசமானது. அக்காலத்தில் மசாலா அரைக்க அம்மி, மாவைப் பக்குவமாக ஆட்ட ஆட்டுக்கல், இடிக்க உரல் மற்றும் உலக்கை, குருணை திரிக்க திருகை என இவற்றை முறையே கையாண்ட திறமைசாலிகள். மின்சாரம் தேவையில்லை உடற்பயிற்சிக்கு ஜிம்மைத் தேடவேண்டாம். ஆனால் இவற்றின் இடத்தில இப்போது இரண்டே கருவிகள் – மிக்சியும் ,கிரைண்டரும். மின்சாரம் தேவை; உடற்பயிற்சிக்கு நேரம் தேவை; ஜிம்மிற்கு மாதாந்திர கட்டணமும் தேவை.
அம்மி உதவி – துவையல், சட்னி, மிளகாய், மசாலா கலவைகள் போன்ற கெட்டியான பதார்த்தம் அரைக்க பயன்படுத்துவர். அம்மியின்றி செட்டிநாடு கோழி வறுவல் (Chettinad Chicken Fry) எங்கே. வெள்ளைப் பனியாரத்தின் சுவையைக் கூட்டும் மிளகாய்த் துவையல்.
ஆட்டுக்கல் – ஈரமான பல்வேறு மாவுவகைகள் அரைக்க – பூப்போன்ற இட்லி, முறுகலான தோசை, மெது வடை, தித்திக்கும் பணியாரம். இவை அனைத்தின் ருசி ஆட்டுக்கல்லில் ஆரம்பமாகிறது. மேலும் இதற்கு சுவை கூட்டும் சட்னி வகை ஆட்டவும் பயன்படுத்தப்பட்டது.
உரல் – இடிக்க: பல்வேறு பொடி மற்றும் மாவு வகைகள் – புட்டு மாவு, இடியப்ப மாவு, அரிசி மாவு, கொழுக்கட்டை மாவு, பச்சைமாவு போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. Gym செல்ல வேண்டாம் உரலைக் கையாண்டால்.
திருகை-திரிக்க: பொடியுடன் கூடிய இட்லியின் சுவை எல்லாருக்கும் தெரிந்ததே. திருகை மூலம் இட்லிப் பொடி,உப்புமா ரவா, கஞ்சி ரவா போன்ற குருணை வகைகள் திரிக்கப்பட்டது. உடல் நிலை சரியில்லாத சமயத்தில் நமது செரிமான சக்தி மாறுபடும். இவற்றை முறையே பயன்படுத்தி பக்குவமாய் சமைத்து வந்தனர்.
ஒவ்வொன்றும் ஒரு தனிச்சுவை கொண்டுள்ளதை அவர்களின் சமையல் மூலம் தெரிய வருகிறது.
குறிப்பு : உங்களது கருத்துக்களையும் விருப்பங்களையும் தயவு செய்து எங்களுடன் பகிர்ந்து கொண்டு ஊக்குவிக்க வேண்டுகிறோம்.
This is an example of a page. Unlike posts, which are displayed on your blog’s front page in the order they’re published, pages are better suited for more timeless content that you want to be easily accessible, like your About or Contact information. Click the Edit link to make changes to this page or add another page.
can u pls post some crab recipe
LikeLike