காய்கறி பச்சை குழிப்பணியாரம்/Green Vegies Paniyaram

பச்சை காய்கறி குழிப்பணியாரம் :
ஆரோக்கியமான எளிய உணவு வித்தியாசமா என்ன செய்யலாம்? அனைவருக்கும் பிடிக்குமா? செய்வது எளிமையா? நித்தம் ஒரு சுவை படைத்திட விரும்பும் இல்லத்தரசிகள் மனதில் தோன்றும் கேள்விகள் இவை…
மிகவும் எளிமையான, சத்தான, சுவையும் மனமும் நிறைந்த இதை செய்து பாருங்கள், பெயரே அதன் சிறப்பை உணர்த்தும்.
பச்சைபாசிப்பயறு: அதன் நிறத்திற்கு ஆதாரம், அதிகமான நார்சத்து,புரதச்சத்து மற்றும் பிற சத்துக்கள் அடங்கியது.
காய்கறி : உடன் சத்தை அதிகரிக்கும் சுவையைக்கூட்டும்.
வடிவம்: குழிப்பணியாரம், அணைத்து வயதினரும் விரும்பி உண்ணக்கூடியது.

புதியன படைப்போம்,ஆரோக்கியமான வாழ்வமைப்போம்


செய்யத்தேவையான பொருட்கள்:
அரைக்க :
பச்சை பயறு-1/2 கோப்பை
பச்சை மிளகாய்-3
கொத்தமல்லி இலை -1 பிடி
சீரகம்-1/2 தேக்கரண்டி
பூண்டு-4, அல்லது இஞ்சி விருப்பத்திற்கு ஏற்ப
உப்பு சுவைக்கு
காய்கறி – காளான் குடைமிளகாய்,வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

செய்முறை:
பச்சை பயிரை இரவுமுழுவதும் ஊறவைத்து (8-10 மணி நேரம்)
மேலே கூறியுள்ள ‘அரைக்க’ பொருட்களோடுசேர்த்து நல்ல விழுதாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.
மேற்கூறியுள்ள பொடியாக அறிந்த காய்கறிகளை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும் தேங்காய் துண்டுகளும் இதில் சிறிதளவு(1tsp) சேர்க்கலாம் குழந்தைகள் விரும்பி உட்கொள்வர்.


குளிப்பானியார கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் காய் கலந்த மாவை ஊற்றி இருபுறமும் இளம் தீயில் நிதானமாக வேகவைத்து எடுக்கவும்.

இதனுடன் மிளகாய் சட்னி சுவை சேர்க்கும். புதியன படைப்போம் ஆரோக்கியமான வாழ்வமைப்போம்.

குறிப்பு :

1. தீயின் வேகம் அதிகமாயிருந்தால் வெளியில் கருகியும் உள்ளே வேகமலும் இருக்கும் பொறுமையாக வேக வைக்கவும்.

2. காய் கறிகளை கலந்தோ, அல்லது இடையில் தூவி மேலே சிறிது மாவு ஊற்றியும் செய்யலாம்.

மென்மையான இட்லி / Spongy Idly

மென்மையான இட்லி :
தென்னிந்திய  சிறப்பு பெற்ற முக்கிய உணவு இட்லி. பக்குவமாய் அரைத்து, கருத்தாய் ஆவியில் வேகவைத்து பரிமாறும் பாரம்பரிய உணவு இந்த சத்துநிறைந்த இட்லி. இதற்கு ஈடு இணையும் உண்டோ!. இன்றும் இதை நாம் அன்றாட வாழ்வில் உட்கொள்கிறோம் என்பதில் மாற்றமில்லை, ஆனால் இந்த இட்லி மென்மையானதாக  செய்கிறோமா? என்பது இங்கு முக்கிய கேள்வி.
அனுபவத்தை வைத்து பார்க்கும் போது அது இல்லை என்றே சொல்லவேண்டும். நம் முன்னோர்களின் கைப்பக்குவத்தை பின்பற்றி நான் கண்ட  அற்புதமாகும் இந்த மல்லிகை பூப்போன்ற மென்மையான இட்லி.
பூப்போன்ற, மென்மையான இட்லியின் ரகசியம் இதோ!

13535775_1128436857197923_207708599_n
1.அரிசி, பருப்பின் விகிதம்.
அன்று: நான்கு பங்கு அரிசியும் ஒரு பங்கு உளுந்தும் கணக்கு. 4:1.
வெந்தயம் 1 தேக்கரண்டி
இன்று: அது மாறி 5 பங்கு அரிசியும் 1 பங்கு உளுந்தும் கணக்கயிற்று.
காரணம் உளுந்தின் உபரி அதிகம் 5:1
வெந்தயம் 1 தேக்கரண்டி

விருப்பத்திற்கேற்ப  அரிசி பருப்பின் அளவை மற்றும் போது அதன்  தன்மை மாறி விடுகிறது
இது  மாறும் போது இட்லியின் மென்மை குறைந்து விடும்.
2.ஆட்டும் (மாவு அரைக்கும்) முறை :
மேல்கூறியபடி அரிசி பருப்பை தனித்தனியே கழுவி உளுந்தோடு வெந்தயம் சேர்த்து 2 மணிநேரம் ஊறவைத்து, பிறகு முதலில் உளுந்தை அரைக்க வேண்டும்.
முக்கியமாக ஆட்டும்போது தண்ணீர் உற்றுவதைவிட, இடை இடையே தெளித்து ஆட்டவேண்டும்.
உளுந்து பந்துபோல் அரைப்பது சிறப்பு. உளுந்தை அதிக நேரம் அரைக்கும் போது நீர்த்து விடும், அதனால் 20 முதல்  30 நிமிடம் அரைத்தெடுக்கவும் .
அரைத்த உளுந்து மாவை எடுத்துவிட்டு, அதே கல்லில் அரிசியை அரைக்க வேண்டும்.
அரிசி மாவை மிக மென்மையாக அரைக்கக்கூடாது, சிறிது முன்னரே உப்பு சேர்த்து 1/2 நிமிடம் அரைக்கவிட்டு எடுத்து உளுந்தோடு சேர்த்து நன்கு கையால் அடித்து கலக்க வேண்டும் (காற்று குமிழிகள் உருவாகும்படி) கலக்கவும்.
கரண்டியால் கலக்கக்கூடாது.
3. புளிக்கவைக்கும் நேரம்.
ஆறிலிருந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் புளிக்கவைக்கக்கூடாது.(நொதித்தல்) புளிக்கவைத்த பிறகு ஒரு போதும் கலக்கக்கூடாது.
4. சுட்டெடுக்கவும் முறை பக்குவம்.
முக்கியமாக, குக்கரில் வேகவைக்கும் (எண்ணெய் தடவிய தட்டில் ) இட்லியை விட, தூய ஈரத்துணி போட்டு தட்டில் வேகவைக்கும் (இட்லி பானையில்) வார்க்கும் இட்லிக்கு மென்மை அதிகம்.

13514329_1128436893864586_1176986782_n

 

13521078_1128436867197922_1281706030_n13535775_1128436857197923_207708599_n

 

வரகு அரிசி பொங்கல் / Kodo Millet Pongal

வரகு அரிசி பொங்கல்:வரகு அரிசி பொங்கல்:
சிறுதானியங்களின் மகிமை பரவி வரும் இக்காலத்தில் அதன் பலவிதமான செய்முறைகளும் கையாளப்படுகிறது. அரிசி கொண்டு செய்யப்படும் அனைத்து பதார்த்தங்களுமே அதற்கு பதிலாக இந்த சிறுதானிய வகைகள் கொண்டு செய்யலாம் என்பது எளிமையான ஒரு கருத்து. ஒப்பிடும் போது இதன் சுவையும் கூடுதலாகும். பண்டயகலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் அற்புதமான ஆரோக்கிய செய்முறைகளையே பின்பற்றி பயன்பெறலாம்.
சிறுதானியங்கள் பசையம் அற்றவை.

images (5)
உரம் இல்லாத மண் பூச்சிகளை ஈர்ப்பதில்லை. உயர் வெப்பநிலை நிலைமைகளின் கீழ் குறுகிய காலத்தில் வளரும் தன்மை உடையது. அரிசியை விட பன்மடங்கு நார்ச்சத்து உள்ளது என்பதால் இது அதிகம் பயன் தரக்கூடியது.

12966339_1076609605713982_336641262_n
வரகு அரிசி பொங்கல் செய்யத்தேவையான பொருட்கள்:
வரகு அரிசி-50 கிராம் அல்லது 1/2 கோப்பை (4-6பேருக்கு பரிமாறலாம்).

LITTLE MILLET
பாசிப்பருப்பு-2 மேஜைக்கரண்டி
வெல்லம் பொடித்தது  -1/2 கோப்பை, பால்- 1/2  கோப்பை
நெய்- 2 மேஜைக்கரண்டி
முந்திரி திராட்சை -2 மேஜைக்கரண்டி
தண்ணீர் -2 கோப்பை
ஏலக்காய் பொடி -1/2 தேக்கரண்டி.
செய்முறை:
1. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
2. பாசிப்பருப்பு மற்றும் வரகு அரிசியை 4 லிருந்து 5 முறை நன்கு கழுவி, குக்கரில்இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வேகவைத்துக்கொள்ளவும்.
3. வெல்லம், சிறிது பால் சேர்த்து இளந்தீயில் வெல்லக்கட்டிகள் கரையும் வரை கிளறவும்.

12966478_1076609722380637_614590640_n
4. நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும், நெய், வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும்.
5. சுவையான வரகு அரிசி பொங்கல் தயார்.

Varagu arisi Pongal
                                                                                                                               Varagu arisi Pongal

 

பால் பணியாரம் / Chettinad special Pal Paniyaram

பால் பணியாரம் :
செட்டிநாடு ஸ்பெஷல் பால் பணியாரம் பெரும்பாலான விருந்துகளிலும் சிறப்பாக பரிமாறப்படும் ஒரு முக்கிய இனிப்பு வகை. அழகான வெள்ளை நிறத்தில், தேங்காய்ப்பால் மற்றும் பசும்பாலில் அளவான இனிப்பு கலந்து ஏலக்காய் அல்லது குங்குமப்பூ வாசனையோடு, பாலில் ஊறிய பூப்போன்று சுவையான பால் பணியாரம். விவரிக்க வார்த்தைகள் குறைவு சுவையோ அலாதி .

பால் பணியாரம் / Chettinad special Pal Paniyaram
பால் பணியாரம் / Chettinad special Pal Paniyaram

செய்முறை:
பச்சரிசி- 1 கோப்பை
உளுந்து – 1 கோப்பை
உப்பு-1/2 தேக்கரண்டி
தேங்காய் பால்- ஒரு மூடி பால்-2 கோப்பை
பசும்பால் காய்ச்சியது – 2 கோப்பை
சீனி -3.4 கோப்பை அல்லது தேவைக்கேற்ப
செய்முறை விளக்கம்:
1. பச்சரிசி உளுந்து இரண்டையும் 2 மணி நேரம் நன்கு கழுவி ஊறவைக்கவும்.
2.நன்கு ஊறிய பின்னர் கிரைண்டரில் நல்ல விழுதாக அரைக்கவும், முழு உளுந்தோ அரிசியோ இல்லாமல் கவனமாக அரைக்கவும்.
3. மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் ஊற்றாமல் சிறிது சிறிதாக தெளித்து வடை மாவு ஆட்டுவது போல் கெட்டியாக ஆட்டவும். பந்து போல் அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும்.

10621974_1051999148175028_1212424320_n
4.பசும்பாலைக்காய்ச்சி, தேங்காய் பால் எடுத்து, இரண்டையும் ஒன்றாக சீனி சேர்த்து கலந்து தயாராக வைக்கவும்.

Coconut Milk
5. வாணலியில் எண்ணெய் காய வைத்து அரைத்த மாவை கையில் எடுத்து விரல்களினால் சிறு சிறு (இலந்தைப்பழம் அளவிற்கு) உருண்டைகளாக காய்ந்த எண்ணெயில் மெதுவாக போடவும்.
6. இரு புறமும் இளம் மஞ்சள் நிறம் வரும் வரை (படத்தில் காண்பது போல்) வேக விடவும்.
கவனம் இளந்தீயில் பொரித்தெடுப்பது உத்தமம்.

12804333_1051999124841697_106308062_n7.பாத்திரத்தில் 2 லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொதிக்க வைத்து தயாராக வைக்கவும்.
8.பொரித்த பணியாரத்தை சுடு நீரில் 3 நிமிடம் வரை போட்டு எடுக்கவும்.

12804199_1051999134841696_592966671_n9. நீரை நன்கு வடித்து பிறகு பணியாரத்தை கலந்த பாலில் சேர்த்து ஊர வைக்கவும்.

12834987_1051999111508365_532057457_n
10. குங்குமப்பூ, அல்லது ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும்.

12825678_1051397504901859_1423180191_n

கல்கண்டு வடை / Sugar Candy Vadai

கல்கண்டு வடை:

Kalkandu Vadai for English recipe please click link below:

http://wp.me/p1o34t-h1
இனிப்பில் பல வகையுண்டு வடையிலும் பல…. கல்கண்டு வடை தோற்றம் நகரத்தார்கள் வாழும் செட்டிநாட்டில். உணவு வகைகளில் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள் பெருமைக்குரியது. அசத்தும் சுவைகொண்ட இந்த கல்கண்டு வடை முக்கிய விருந்துகளில் சிறப்புப்பலகரமாக பரிமாறப்படும்.
முக்கிய பொருட்கள் உளுந்து கல்கண்டு.

Chettinad Kalkandu vada
Chettinad Kalkandu vada

தேவையான பொருட்கள்: 15 வடைகள் பெறலாம்.
உளுந்து-1 கோப்பை- (110 கிராம் அல்லது அரை உலக்கு)
பச்சரிசி 1/4 கோப்பை
கல்கண்டு- 3/4 கோப்பை
உப்பு ஒரு சிட்டிகை
எண்ணெய் – வடை பொரித்தெடுக்க-250 மில்லி                                                   துவரம் பருப்பு 1 தே .க
செய்முறை:
கல்கண்டைத் தட்டி தூளாக்கிகொள்ளவும், அல்லது ஆச்சு கல்கண்டும் பயன்படுத்தலாம்.
உளுந்தையும், அரிசியையும் அளந்து, நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

12285837_991022470939363_433006285_n
பின்னர் தண்ணீரை நன்கு வடித்துவிட்டு ஆட்டுரலில் போட்டு அரைக்கவும், சிறிது கூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. தண்ணீருக்கு பதிலாக பொடித்த கல்கண்டை இடை இடையே சேர்த்து அரைக்கவும்.

12312118_991022477606029_1431785051_n
நல்ல பந்து போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.

12305540_991022460939364_1001260817_n
மாவை சிறு சிறு வடைகளாக தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வேகவுடவும்.

12285768_991022444272699_1644606218_n
கல்கண்டு வடை தயார்.

Chettinad Kalkandu vada
Chettinad Kalkandu vada

கவனம்:

1.இனிப்பு சேர்த்துள்ளதால் தீ குறைவாக வைத்து வேகவிடவும், இல்லையேல் வடை சிவந்து விடும்.
2. வடையை சிறிதாகத் தட்டவும் இந்த வடை உப்பி பெரிதாக வரும்.
3. உப்பை அரைத்து எடுத்த பிறகு சேர்த்துக்கலக்கவும் ஆட்டும் போது சேர்க்க வேண்டாம்.                                                                                                                        4. எண்ணெய் அதிகம் காயக்கூடாது

மரவள்ளி கிழங்கு தோசை / Tapioca Roast

மரவள்ளி கிழங்கு தோசை :
மரவள்ளி கிழங்கு எல்லா காலத்திலும் கிடைக்கும் ஒரு எளிமையான வகை கிழங்கு.கேரள மக்கள் அதிகம் பயன்படுத்துவர்.
மரவள்ளி கிழங்கு தோசை மொரு மொருப்பகவும் சுவையாகவும் இருக்கும்.
மிளகாய் சட்னி, சாம்பார் தேங்காய் சட்னி போன்றவை நல்ல பொருத்தம்.

மரவள்ளி கிழங்கு தோசை / Tapioca Roast
மரவள்ளி கிழங்கு தோசை / Tapioca Roast

செய்யத்தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு-250 கிராம்
பச்சரிசி -250 கிராம்
வெந்தயம்-1 தே .க
சீரகம்-1 தே.க
பச்சை மிளகாய்-3
செய்முறை :
பச்சரிசி யை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

12077318_967074766667467_572586459_n

மரவள்ளி கிழங்கு தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவும.                  அரிசி, சீரகம், வெந்தயம், பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். மரவள்ளி கிழங்கையும் அரைத்து மாவுடன் செர்த்துக்கலக்கவும்.

12077052_967074773334133_844261510_n12087547_967074776667466_1674288020_n
அதிக நேரம் புளிக்க வைக்கத்தேவயில்ல 2 லிருந்து 3 மணி நேரம் வைத்து தோசை வார்க்கலாம்.
தோசை மாவு நீர்க்க வைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல் நன்கு சூடான பிறகு ஒரு கரண்டிமாவு எடுத்து மெல்லிய தோசையாக வார்த்தெடுக்கவும்.
விருப்பத்திற்கேற்ப எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

12067305_967074753334135_942300812_n

பொரி கடலை சிற்றுண்டி / Puffed Rice Snack

பொரி கடலை சிற்றுண்டி / Puffed Rice Snack:

For English please click:   http://wp.me/p1o34t-xC
சரஸ்வதி பூஜை பொரி கடலை மீதமாகி விட்டதா? மிக சுலபமான சுவையான மாலை நேரத்தின்பண்டம் இதோ…..
தென் இந்திய பகுதியில் சுவைசேர்க்கப்பட்ட இந்த பொரி பிரபலமானது, ஒருவயது குழந்தை கூட கொரித்து சாப்பிடலாம், எளிதில் ஜீரணிக்ககூடியது.

Puffed rice snack
செய்யத்தேவையான பொருட்கள்:
பொரி -250 கிராம்
பொரி கடலை-50 கிராம்
வேர்கடலை-50 கிராம்
உப்பு-1/4 தே,க
சீனி-1/4 தே .க
மஞ்சள் தூள்-1/4 தே .க
பூண்டு- 3 பல் (தட்டி வைத்துக்கொள்ளவும்)
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி (தேங்காய் எண்ணெய் )
கடுகு-1
வரமிளகாய்-3
கறிவேப்பிலை-2 கொத்து
1. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
2. உடன் பொட்டுக்கடலை, வேர்கடலை சேர்த்து வறுக்கவும் போன்னிரமாகும் போது உப்பு, சீனி,மஞ்சள் தூள், தட்டிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

DSC09149
3. பின்னர் குறைந்த தீயில் பொரியை சேர்த்து 3 நிமிடம் சேர்த்து கிளறவும்.

DSC09150
4. மசாலா பொரி ரெடி இது 10 நாட்கள் வரை காற்றுப்புகாத கொள்கலனில் வைத்து சாப்பிடலாம்.
குறிப்பு:
1.இத்துடன் விருப்பத்திற்கேற்ப கரம் மசாலா போடி அல்லது தனி மிளகாய்ப்பொடி சேர்த்து தாளிக்கலாம்.
2. பச்சை வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி சேர்த்து சிறிது தேங்காய்எண்ணெய் விட்டு கிளறியும் சாப்பிடலாம்.

கேழ்வரகு, புட்டு கொழுக்கட்டை Raagi Puttu Kozhukkattai

கேழ்வரகு, புட்டு கொழுக்கட்டை:

For English please click:   http://wp.me/p1o34t-bZ
கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் பலன்களை அறிந்த பின், மாதத்தில் ஒருமுறையாவது, உணவில் சேர்க்க முற்படலாம்.கேழ்வரகில், கால்சியம், இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளன. பாலை விட, கேழ்வரகிலே கால்சியம் சத்து நிரம்பியுள்ளன. கேழ்வரகை,

தினசரி உணவில் சேர்த்தால், உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சூட்டை தணிக்கும்.
குழந்தைகளுக்கு, கேழ்வரகுடன், பால், சர்க்கரை சேர்த்து, கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது, வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள், கேழ்வரகு சாப்பிடுவது நல்லது. மேலும், கேழ்வரகு சாப்பிட்டால், உடல் எடை குறையும். இதில் உள்ள, நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கும். கேழ்வரகு ஜூரணமாக, நேரம் எடுத்து கொள்வதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாகும்.

Raagi Puttu Kozhukkattai
Raagi Puttu Kozhukkattai

 

செய்யத்தேவையான பொருட்கள் :
ராகி மாவு- 1 கோப்பை 200 கி ம்
நெய்-2 தே .க
துருவிய தேங்காய்-1/4 கோப்பை
சர்க்கரை-5 தேக்கரண்டி                                                                                               பாசிப்பருப்பு வேக வைத்தது – 1 மேஜைக்கரண்டி

10552610_730114730363473_1828626791761270189_n
செய்முறை:
ஓர் வாயகன்ற பத்திரத்தில் புட்டு மாவை போட்டு, கொஞ்சம், கொஞ்சமாக நீர் தெளித்து பிசரிக்கொள்ளவும்
பிசறிய மாவு உதிராக இருக்க வேண்டும், சேர்த்துப்பிடித்தல் உருண்டையாக பிடிக்க வரும்.
பிசறிய புட்டு மாவை கட்டிகள் இன்றி சலித்துக்கொள்ளவும்.
இட்லி பத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆவியில் பிசறிய புட்டை 10 முதல் 15 நிமிடம் வரை வேக விடவும்.
பின்னர் ஆவியில் இருந்து எடுத்து, சூடாக இருக்கும் பொழுதே துருவிய தேங்காய், நெய், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

10462653_730114827030130_4566985077938035582_n
பிறகு சிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.
உதிராக இருந்தால் புட்டு குழந்தைகளுக்கு (விம்மும்) தொண்டையில் சிக்க வாய்ப்பு உள்ளதால் உருண்டைகளாக உருட்டி கொடுக்கவும்.

12083965_967074716667472_1736668467_n

பொடி / தொக்கு இட்லி Podi Idli

பொடி / தொக்கு இட்லி: Podi Idli

For English please click:   http://wp.me/p1o34t-ER
சுவை மிகுந்த பொடி அல்லது தொக்கு இட்லி செய்வது மிக சுலபம். இது பள்ளிக்குசெல்லும் குழந்தைகள் , அலுவலகம் செல்பவர்கள், பயணத்திற்கும் கூட இதை தயார் செய்து கொடுக்கலாம், கெடாமல் இருக்கும், உட்கொள்வதும் எளிது .

பொடி / தொக்கு இட்லி
பொடி / தொக்கு இட்லி

செய்யத்தேவை :
மினி இட்லி-1 கோப்பை அல்லது 4 இட்லி சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்
நல்லெண்ணெய் -1 மேஜைக்கரண்டி
பொடி -1 மேஜைக்கரண்டி அல்லது தொக்கு-1 தேக்கரண்டி                        http://wp.me/p6uzdK-3D
கறிவேப்பிலை-1 கொத்து

Podi Idly
செய்முறை:
வாணலியில் எண்ணெய் காய வைத்து கறிவேப்பிலை சேர்க்கவும் உடனே மிதமான தீயில் இட்லி பொடி அல்லது தொக்கு சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்.

11021485_858383387536606_8243610442548687637_o
உடன் இட்லியை சேர்த்து பொடி அல்லது தொக்கு, இட்லியில் நன்கு ஓட்டும் வரை கிளறவும்.
தேவைப்பட்டால் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

பொடி / தொக்கு இட்லி
பொடி / தொக்கு இட்லி

அவல் பொங்கல்

அவல் காரப்பொங்கல்:

தினமும் தொடர்ந்து காலையில் இட்லி, சட்னி செய்து சலித்துவிட்டதா? அடுத்த படியாக சுலபமாக செய்யும் பலகாரம் உப்புமா, பொங்கல் தான். சாதாரணமாக பொங்கல் பச்சரிசியைய் வேகவைத்து செய்வோம். இங்கு இன்னும் சுலபமாக குறைவான நேரத்தில் மிக வேகமாகவும், சுவையாகவும், செய்யக்கூடிய அவல் பொங்கல் செய்முறையைக்காண்போம்.தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் ஏதுவாகும்.

அவல் காரப்பொங்கல்
அவல் காரப்பொங்கல்

செய்யத்தேவையான பொருட்கள் :

அவல் -1 கோப்பை
பாசிப்பருப்பு- 1/4 கோப்பை
நெய்-2 மேஜைக்கரண்டி 1+1 அல்லது 1 மேஜைக்கரண்டி நெய் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்
இஞ்சி துருவியது-2 தே .க 1+1 (பத்தி வேகவைக்க பாதி தளிக்க).
சீரகம்-1/4 இரண்டும் பங்காக்கிக்கொள்ளவும் (பத்தி வேகவைக்க பாதி தளிக்க).
மிளகுதூள்-1/4 தே .க
தளிக்க:
மிளகு-1/4 தே .க
சீரகம் -மேற் கூறியதில் பாதி அளவு
முந்திரிப்பருப்பு-1 மேஜைக்கரண்டி
பச்சைமிளகாய்-2 கீரியது
கறிவேப்பிலை-1 கொத்து

12071496_963808973660713_640400087_n
செய்முறை:
1.பாசிப்பருப்பை வானலியில் ஒரு நிமிடம் வரை வறுத்து, தண்ணீர் விட்டு,பாதி அளவு துருவிய இஞ்சியையும், ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து பூப்போன்று வேகவைத்துக்கொள்ளவும்.

12087361_963808930327384_964171546_n
2.அவலை நன்கு அலசி 5 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.

12077333_963808886994055_1723434226_n
வானலியில் நெய் விட்டுமேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வறுத்துக்கொள்ளவும்.
பா தி துருவிய இஞ்சி, கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

12067091_963808946994049_813899453_n
3.இப்போது ஊறவைத்த அவல், உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு அதன் தண்ணியோடு சேர்த்து நன்கு கிளறவும்.

12041942_963808900327387_1096563663_n
4.மிதமான தீயில் பொங்கல் பதம் வரும்வரை சமைத்து,சிறிது மிளகுத்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து இறக்கவும். சுவையான அவல் பொங்கல் தயார்.

12071785_963808863660724_1156882785_n

12084079_963808876994056_52492168_n