வத்தல்குழம்பு பொடி / குழம்பு- vathal kuzhambu/podi

வத்தல்குழம்பு பொடி / குழம்பு :
வத்தல் குழம்பின் சுவை அதன் பொடி தயாரிப்பில் அமைந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வத்தல் குழம்பு என்றவுடன் நினைவிற்கு வருவது சுட்ட அப்பளம் பொருத்தமான சுவையாக இன்றும் விரும்பி சாப்பிடுகிறோம். காய்கறி, வெங்காயம் பூண்டு என எதுவும் சேர்க்காமலே எளிதில் சுவையான குழம்பு தயாரித்துவிடலாம். அதற்காக சத்துகுறைவென்று என்ன வேண்டாம் குழம்பில் சேர்க்கும் வத்தல் ஒரு சிறந்த மருத்துவகுணம் கொண்டது, பொடியில் சேர்க்கும் பருப்பு வகை, மிளகு ஜீரண சக்தியை தூண்டும்.
பொடியை தயாரித்துவைத்துக்கொண்டால் குழம்பு நிமிடங்களில் செய்து விடலாம்.எனவே இங்கு முதலில் பொ டி தயாரிக்கும் முறை கூறப்பட்டுள்ளது.

https://www.chettinadsnacksonline.com/collections/masala-podi/products/vathal-kara-kuzhambu-podi

Referrence: https://www.chettinadsnacksonline.com/products/vathal-kara-kuzhambu-podi


பொடி தயாரிக்க :
கடலை பருப்பு -1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு-1 மேஜைக்கரண்டி
வர மல்லி -1 1/2 மேஜைக்கரண்டி
மிளகாய் -10
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
வெந்தயம்-1/2 தேக்கரண்டி
பெருங்காயம்-1/2 தேக்கரண்டி
இவற்றை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

குழம்பு செய்யும்முறை:
நல்லெண்ணெய்- 2 மேஜைக்கரண்டி
கடலை பருப்பு- 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு -2 தேக்கரண்டி
வத்தல் (சுண்ட /மிளகு தக்களி வைத்தல் வத்தல்)
-1 மேஜைக்கரண்டி
உப்பு- 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
புளி சிறிய எலுமிச்சை அளவு எடுத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
வெல்லம் -1 தேக்கரண்டி

வானலியில் எண்ணெய் காயவைத்து பருப்பு வகைகளை போட்டு பொரிந்ததும், மஞ்சள்தூள் மற்றும் அரைத்துவைத்துள்ள குழம்பு பொடி 3 தேக்கரண்டி சேர்த்து மிதமான தீயில் 1/2 நிமிடம் வறுக்கவும், கறிவேப்பிலை சேர்த்து புளிக்கரைசல் நீரை ஊற்றவும், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து வரும் சமயம் உப்பு மற்றும் வெள்ளம் சேர்த்து தீயை குறைத்து வைக்கவும்.
எண்ணெய் மேலே வரும் (3 நிமிடம் ) சமயம் அடுப்பிலிருந்து பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும். இது இரண்டு முதல் 4 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

சத்து மாவு / Sathu Mavu

சத்து மாவு:

15க்கும் மேலானா தானியங்கள் நிறைந்த இந்த சத்து மாவு, கஞ்சி, புட்டு, சத்து உருண்டை, மால்ட் போன்றவை தயாரிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை தினமும் சேர்த்துக்கொள்ளலாம். நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆரோக்கிய உணவாகும். நார்சத்து, புரதசத்து, என எல்லாவகையிலும் சமநிலையான இந்த மாவு சிறந்த உணவாக உட்கொள்ளலாம்.

ராகி- 1/2 கிலோ
கம்பு-1/2 கிலோ
சம்பா கோதுமை-1/2 கிலோ
பாசிப்பயறு-1/2 கிலோ
நிலக்கடலை-1/4 கிலோ
சிகப்பரிசி -1/4 கிலோ

சோளம் -1/4 கிலோ
பொட்டு கடலை-1/4 கிலோ
குதிரைவாலி-1/4 கிலோ
சாமை-1/4 கிலோ
வரகு-1/4 கிலோ
கொள்ளு-1/4 கிலோ
கருப்பு உளுந்து -1/4 கிலோ
பாதாம்100 கிராம்

முந்திரி பருப்பு- 100 கிராம்
சுக்கு-50 கிராம்
மேலே உள்ள பொருட்களை தனி, தனியாக வறுத்து ஒன்றாக சேர்த்து மிஷினில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
தேவை படும் பொது, கஞ்சி,புட்டு, மால்ட் தயாரித்து உட்கொள்ளலாம்.

தேங்காய்ப்பால் மீன் வறுவல்/ Fish Coconut milk Fry

தேங்காய்ப்பால் மீன் வறுவல் :
பழமையில் புதுமை காண்போம். அசைவப்பிரியர்களுக்கு கடல்வாழ் உயிரினம் மீன் வறுவல் அசத்தலான சுவை. வறுவல் என்றால் ஒரே ஒரு குறிப்பைத்தான் நாம் இதுவரை பின்பற்றி வந்தோம் இங்கு மீன் வறுவலில் சிறிய மாற்றுசுவையாக தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் முறை காண்போம். தேங்காய்பால் சேர்ப்பதால் மணம், சுவை ,மற்றும் மிருதுத்தன்மை அதிகமாகும். வறுக்கும்போதே அதன் மணம் நம் பசியை வெகுவாகத்தூண்டும். சும்மா அப்படியே சாப்பிடலாம்.

தேங்காய்ப்பால் மீன் வறுவல்
தேங்காய்ப்பால் மீன் வறுவல்

செய்யத்தேவையான பொருட்கள்:
மீன்- 500 கிராம்
மிளகாய் தூள் அல்லது பேஸ்ட்- 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு -1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது -1/2 தேக்கரண்டி
தேங்காய்ப்பால்- 1/2 கோப்பை
வறுத்தெடுக்க எண்ணெய்
செய்முறை:
மீனை நன்கு கழுவி நீரை நன்கு வடித்து எடுத்துக்கொள்ளவும்.
தேங்காய்ப்பால் மற்றும் வறுத்தெடுக்க எண்ணெய் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் மீனுடன் சேர்த்து நன்கு பிசறிவைக்கவும். பிரிஜில் 30 நிமிடம் வைத்து வெளியில் 1.30 மணி நேரம் வைத்து ஊற விடவும்.
வாயகன்ற கடாயில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் மீனை வறுக்கவும்.


முக்கால் பதம் வெந்ததும், ஓரம் சிவந்து வரும் சமயம் 1 மேஜைக்கரண்டி அளவு தேங்காய்ப்பால் சேர்த்து கவனமாக இருபுறமும் திருப்பி வேகவிடவும்.


தேவைக்கு ஏற்றார் போல் வருவலாகவோ, அல்லது சிறிது பால் சத்துடனோ எடுத்து  மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 

 

திரட்டுப்பால்/ Therattupaal

திரட்டுப்பால் :
பிள்ளையார் நோம்பு ஸ்பெஷல் திரட்டுப்பால், சுண்டிய பாலில் கருப்பட்டி அல்லது வெல்லம், உடன் பொறுமையும் சேர்த்தால் சுவையான திரட்டுப்பால் ரெடி.
நகரத்தார் குடும்ப மக்கள் இந்த பிள்ளையார் நோம்பு கொண்டாடுவது பழக்கம். குடும்ப நன்மைக்காக கொண்டாடும் இந்த நோன்பு கார்த்திகை தீபம் முடிந்த 21 நாள் பிள்ளையார் நோம்பு கொண்டாடுவது பழக்கம். கண்ணுப்பூ , ஆவாரம்பூ கொண்டு விநாயகரை அலங்கரித்து.
திரட்டுப்பால் அல்லது கருப்பட்டி மாவில் பிள்ளையார் பிடித்து, 21 நூல் திரி (வேஷ்டி நூலில் எடுத்து) தீபம் ஏற்றி அப்படியே சாப்பிடுவது சிறப்பு. உடன் ஆலங்காய் அத்திக்காய், வடை, பணியாரம், சுண்டல், ஐந்து வகை பொரி நெய்வேத்தியமாக படைப்பதுண்டு.

therattupaal
திரட்டுப்பால் செய்யத்தேவையான பொருட்கள்:
பால்-1 லிட்டர்
கருப்பட்டி அல்லது வெல்லம் பொடித்து 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
1.பாலை காய்ச்சி பொங்கி வரும்போது மிதமான தீயில் சுண்டக்காய்ச்சவும்.
2. நான்கில் ஒரு பங்காக சுண்டியதும் பொடித்த வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து பால்கோவா பதம் வரும் வரை கிண்டிக்கொண்டே இருக்கவும்.
3. நன்கு திரண்டு வந்ததும் கிணத்தில் நெய்தடவி, அதில் மாற்றி பயன்படுத்தவும்.
திரட்டுப்பால் ரெடி.

blog-229

சைவ மட்டன் பிரியாணி/ Soya Biryani

சைவ மட்டன் பிரியாணி:
சுவையான பிரியாணியில் பல வகையுண்டு, சைவ மட்டன் பிரியாணி சோயா துண்டுகளால் தயாரிக்க படுகிறது. சோயா உயர் புரத மற்றும் பல வகை உணவுகள் சைவ மற்றும்அசைவ மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

Saiva mutton Biryani
Saiva mutton Biryani

செய்யத்தேவையான  பொருட்கள்:
சோயா- 1/2 கோப்பை,ஊறவைத்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பெரிய வெங்காயம் – 1
தக்காளி -2
பச்சை மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
கறி வேப்பிலை-1 கொத்து
மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
எண்ணெய்- 3 மேஜைக்கரண்டி
நெய்-1 மேஜைக்கரண்டி
பாசுமதி அரிசி-2 கோப்பை
தேங்காய்ப்பால் அல்லது தயிர்-1/2 கோப்பை
தாளிக்க:
முந்திரி-5 ,7
பட்டை-1 அங்குலம் -2
கிராம்பு-2
பிரியாணியிலை-3 அங்குலம்
ஏலக்காய்-2
கல்பாசிப்பூ-1
ஜாதிப்பத்திரி-1 அங்குலம்
மிளகு-1/4 தேக்கரண்டி

img_3756
அரைக்க:
புதினா,மல்லி இலை 1/2 கோப்பை
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம் -1தேக்கரண்டி
பச்சை மிளகாய்-3
செய்முறை:
1அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்
2. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தாளிதம் செய்யவும்.
3. இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. பின்னர், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் ஊறவைத்து நறுக்கிய சோயா சேர்த்து வதக்கவும்.

img_3759நன்கு வதங்கிய பின்னர்,அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.                                                                                                                                             5.தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தண்ணீர் 2 கோப்பை  மற்றும் ஊறவைத்த அரிசி, சேர்த்து கலந்து, கொதித்ததும் குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்.

img_3763img_3764
மல்லி இல்லை தூவி, முந்திரி நெய்யில் வறுத்து அதையும் தூவி பரிமாறவும்.
தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.                                                                                                                                                   6. சுவையான .சைவ மட்டன் பிரியாணி ரெடி.

img_3769

மென்மையான இட்லி / Spongy Idly

மென்மையான இட்லி :
தென்னிந்திய  சிறப்பு பெற்ற முக்கிய உணவு இட்லி. பக்குவமாய் அரைத்து, கருத்தாய் ஆவியில் வேகவைத்து பரிமாறும் பாரம்பரிய உணவு இந்த சத்துநிறைந்த இட்லி. இதற்கு ஈடு இணையும் உண்டோ!. இன்றும் இதை நாம் அன்றாட வாழ்வில் உட்கொள்கிறோம் என்பதில் மாற்றமில்லை, ஆனால் இந்த இட்லி மென்மையானதாக  செய்கிறோமா? என்பது இங்கு முக்கிய கேள்வி.
அனுபவத்தை வைத்து பார்க்கும் போது அது இல்லை என்றே சொல்லவேண்டும். நம் முன்னோர்களின் கைப்பக்குவத்தை பின்பற்றி நான் கண்ட  அற்புதமாகும் இந்த மல்லிகை பூப்போன்ற மென்மையான இட்லி.
பூப்போன்ற, மென்மையான இட்லியின் ரகசியம் இதோ!

13535775_1128436857197923_207708599_n
1.அரிசி, பருப்பின் விகிதம்.
அன்று: நான்கு பங்கு அரிசியும் ஒரு பங்கு உளுந்தும் கணக்கு. 4:1.
வெந்தயம் 1 தேக்கரண்டி
இன்று: அது மாறி 5 பங்கு அரிசியும் 1 பங்கு உளுந்தும் கணக்கயிற்று.
காரணம் உளுந்தின் உபரி அதிகம் 5:1
வெந்தயம் 1 தேக்கரண்டி

விருப்பத்திற்கேற்ப  அரிசி பருப்பின் அளவை மற்றும் போது அதன்  தன்மை மாறி விடுகிறது
இது  மாறும் போது இட்லியின் மென்மை குறைந்து விடும்.
2.ஆட்டும் (மாவு அரைக்கும்) முறை :
மேல்கூறியபடி அரிசி பருப்பை தனித்தனியே கழுவி உளுந்தோடு வெந்தயம் சேர்த்து 2 மணிநேரம் ஊறவைத்து, பிறகு முதலில் உளுந்தை அரைக்க வேண்டும்.
முக்கியமாக ஆட்டும்போது தண்ணீர் உற்றுவதைவிட, இடை இடையே தெளித்து ஆட்டவேண்டும்.
உளுந்து பந்துபோல் அரைப்பது சிறப்பு. உளுந்தை அதிக நேரம் அரைக்கும் போது நீர்த்து விடும், அதனால் 20 முதல்  30 நிமிடம் அரைத்தெடுக்கவும் .
அரைத்த உளுந்து மாவை எடுத்துவிட்டு, அதே கல்லில் அரிசியை அரைக்க வேண்டும்.
அரிசி மாவை மிக மென்மையாக அரைக்கக்கூடாது, சிறிது முன்னரே உப்பு சேர்த்து 1/2 நிமிடம் அரைக்கவிட்டு எடுத்து உளுந்தோடு சேர்த்து நன்கு கையால் அடித்து கலக்க வேண்டும் (காற்று குமிழிகள் உருவாகும்படி) கலக்கவும்.
கரண்டியால் கலக்கக்கூடாது.
3. புளிக்கவைக்கும் நேரம்.
ஆறிலிருந்து எட்டு மணி நேரத்திற்கு மேல் புளிக்கவைக்கக்கூடாது.(நொதித்தல்) புளிக்கவைத்த பிறகு ஒரு போதும் கலக்கக்கூடாது.
4. சுட்டெடுக்கவும் முறை பக்குவம்.
முக்கியமாக, குக்கரில் வேகவைக்கும் (எண்ணெய் தடவிய தட்டில் ) இட்லியை விட, தூய ஈரத்துணி போட்டு தட்டில் வேகவைக்கும் (இட்லி பானையில்) வார்க்கும் இட்லிக்கு மென்மை அதிகம்.

13514329_1128436893864586_1176986782_n

 

13521078_1128436867197922_1281706030_n13535775_1128436857197923_207708599_n