நீர் மோர் :
நீர் மோரின் அதிசயங்களை சிறிது அறிவோம் :
குறிப்பாக கோடையில் வெப்பநிலை அதிகமாக உயரும் போது, உடல் வெப்பம் அதிகரிக்கும், அதை குறைக்க மோர் பருகுவது நன்மை பயக்கும். ஒரு சிறந்த குளிர்விப்பானாக விளங்குகிறது.
மோரில் லாக்டிக் அமிலம் அதிக அளவு இருப்பதால் நோய்களுக்கு எதிராக போராட அது தயாராகி மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது . கால்சியம் சத்தை அதிகரித்து எலும்புகளை வலுவாக்குகிறது, ரத்த அழுத்தம் குறைகிறது,வாய்ப்புண் குணமடைகிறது, மேலும், மோர் அடிக்கடி பருக எடையை குறைக்கலாம். அதே சமயம் , நம் உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்டது. மோரில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிக அளவில் கொண்டிருக்காது.
நீர்மோர் தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

நீர் மோர் செய்யத்தேவையான பொருட்கள்:
தயிர் – 1/4 லிட்டர்
குளிர்ந்த தண்ணீர் – 1 லிட்டர்
பச்சை மிளகாய்-2
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் -1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
மல்லி இலை பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் -1
செய் முறை :
1. மல்லி இலை, உப்பு, தயிர், எலுமிச்சம்பழம் இவை தவிர,மேல்கூரியுள்ள அனைத் பொருட்களையும் ஒன்றிரண்டாக இடித்து அல்லது அரைத்துக்கொள்ளவும்.
2. தயிரை உப்பு சேர்த்துக்கடைந்து கொள்ளவும்.
3. எலுமிச்சை சாறு, அரைத்த / இடித்த பொருட்களை கலந்து, அதோடு குளிர்ந்த தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. வடிகட்டி கொண்டு வடிகட்டவும்.
5. பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி பருகவும்.