தேங்காய் சாதம் :
உடனடி தயாரிப்பில் மிக எளிமையாகவும், குறுகிய நேரத்தில் சுவையாக மற்றும் ஆரோக்கியமாகவும் இந்த தேங்காய் சாதம் தயாரித்து விடலாம். தேங்காய் தேகத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியது, தோல் மெருகேற்றவும், வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறவும் உதவுகிறது.

செய்யத்தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் 2 கோப்பை
தேங்காய் துருவியது – 1 கோப்பை
உப்பு-1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு-1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு -1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை- 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு- 2 தேக்கரண்டி
வர மிளகாய்-3
கறிவேப்பிலை
செய்முறை:
1. ஒரு கோப்பை அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து, பாதி தேங்காய் பால், பாதி தண்ணீர், உப்பு சேர்த்து சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். விருப்பத்திற்கு ஏற்ப
(தேங்காய்ப்பால் சேர்க்காமல் வெறும் தண்ணீரிலும் வடிக்கலாம்)
2. வடித்த சாதத்தை ஆறவைக்கவும். இது கிளறும்போது சாதம் உடைந்துவிடாமல் இருக்க உதவும்.
3. வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, வரமிளகாய் தாளிதம் செய்யவும்.
4.முதலில் வேர்க்கடலை, பிறகு, கடலைப்பருப்பு, முந்திரி, உளுத்தம்பருப்பு, என ஒன்றொன்றாக சேர்த்து வறுக்கவும்.
5. பிறகு கறிவேப்பிலை, தேங்காய், மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்.(தேங்காய் அதிகநேரம் வதக்கினால் எண்ணெய் வாடை வரும் கவனம் தேவை)
6. வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.