எண்ணை வாழைக்காய் வறுவல் :
Raw banana Garlic fry recipe in English : http://wp.me/p1o34t-o0
வாழைக்காய் பூண்டு வறுவல், மணமும் சுவையும் நிறைந்தது, சமைக்கும்போதே சுவைக்கத்தூண்டும். மீண்டும், மீண்டும் செய்யத் தோன்றும் ஒரு அற்புத குறிப்பு. பூண்டின் மணமும் , சுவையும் இதன் தனிச்சிறப்பு. மருத்துவ குணம் நிறைந்தது பூண்டு என்பது அறிந்ததே, அதோடு மட்டுமல்லாமல் வாழைக்காய் என்றாலே நம் சிந்தையில் தோன்றுவது வாய்வுத்தொல்லை, அதைக்குறைக்கும் வகையில் உணவே மருந்து என்பதற்கு ஏற்ப இந்தக்கலவை சேர்க்கப்பட்டுள்ளது.
செய்முறையும் சுலபமானது.
உப்பு மஞ்சள் மிளகாய் பொடி பிசறி சோம்பு தாளித்து எளிதாக வதக்கி எடுத்து விடலாம் இது நல்ல ரோஸ்டாக செய்யலாம்.
செய்யத்தேவையான பொருட்கள் :
வாழைக்காய் – 3
அரைக்கத்தேவையான பொருட்கள்:
பூண்டு -5 பல் தோலுரித்தது
தக்காளி- 1 சிறியது, சோம்பு-1/2
தனிமிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
குறிப்பு:
இவை அறைக்காமல் சம்பர் மாசல்வேர்தும் வதக்கலம்
தாளிக்க:
எண்ணெய்- 2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2
சீரகம்-1/4
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை:
வாழைக்காயை தோலகற்றி, அரை வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்கும் பொருட்களை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை நறுக்கிய வாழைக்காயுடன் பிரட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
மசாலா பிரட்டியை வாழைக்காயை அதில் சேர்த்து இளந்தீயில் மூடி வைத்து,வறுத்தெடுக்கவும்.
சுவையான வாழைக்காய் பூண்டு வறுவல் ரெடி செய்து மகிழுங்கள் .