பிள்ளையார் பட்டி சிறப்பு மோதகம்:
For English please click: http://wp.me/p1o34t-hI
மோதகம் என்றாலே உடனே நினைவிற்கு வருவது விநாயகர் சதுர்த்திதான். பிள்ளையாருக்கு மோதகப்பிரியன் என்றொரு பெயரும் உண்டு. அதனாலேயே விநாயகர் சதுர்த்தி அன்று இந்த மோதகம் சிறப்பான நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. இது மிகவும் ருசியானதாகவும், எளிமையாக செய்யக்கூடிய ஒரு முக்கியமான ரெசிப்பி, இது மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். இது குறிப்பாக சதுர்த்தி காலத்தில் பிள்ளையார் பட்டியில் செய்யக்கூடிய மோதகம் என்பதால் இது இன்னும் சிறப்பு பெறுகிறது.
செய்யத்தேவையான பொருட்கள் :
பச்சரிசி-1 கோப்பை, தண்ணீர் -2 கோப்பை
பாசிப்பருப்பு- 1/4 கோப்பை
வெல்லம் பொடியாக- 1 கோப்பை
தேங்காய் துருவியது -1/4 கோப்பை
ஏலக்காய் போடி-1/4 தே க
நெய் – 1 மே க
செய்முறை:
1.அரிசியையும், பருப்பையும் ஒன்று சேர்த்து நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும், பிறகு நீரை நன்றாக வடித்து சுத்தமான துணியில் 1 மணி நேரம் உலர்த்தவும்.
2.அரிசி நீரின்றி உலர்ந்ததும் மிக்சியில் போட்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பத்திரத்தில் வெள்ளம் சேர்த்து 1/4 கோப்பை நீர் தெளித்து அடுப்பில் வைத்துக கட்டிகள் இன்றி கரைத்துக்கொள்ளவும். கரைத்த பாகை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
4. வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து, காய்ந்ததும் உடைத்த அரிசியை சேர்த்து வறுக்கவும், கைபொறுக்கும் சூடு வந்ததும் எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
5. அதே பாத்திரத்தில் 2 கோப்பை நீர் விட்டு கொதித்ததும், வறுத்த மாவைப்போட்டு இடைவிடாது கிளறவும்.
6. மாவு நன்றாக வெந்து,கெட்டியானதும், வடிகட்டிய வெல்லப்பாகை சேர்த்து கிளறவும், நன்கு ஒன்று சேர்ந்ததும், ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
6,ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில், ஆவியில் வேகவைக்கவும்.
மோதகம் தயார்.
Thank you so much for your timely guidelines !!!
LikeLike
Hi
Your recipes are really impressive….we would like to see making of these recipes.
Kindly upload the videos in YouTube or In Your own website .
It would be g8 to see the making of recipe and will b helpful tooooo.
Thanks
LikeLike