மாங்காய் பச்சடி/ Mango Pachadi

மாங்காய் பச்சடி:
அனைவருக்கும் செட்டிநாடு குக் புக்கின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அறுசுவையுடனும் பெரியோர்களின் நல் ஆசிபெற்று இனிதே துவங்குவோம்.
தமிழ் புத்தாண்டின் சிறப்பு உணவு மாங்காய் பச்சடி, அறுசுவையும் கலந்து சமைக்கப்படும் இந்த பச்சடியின் கருத்து: இதில் சேர்க்கப்படும் ஆறு சுவையும் ஆறு குணங்களாக இனிதே இவ்வருடத்தில் கையாள இறைவனிடம் வேண்டி இந்தப் பச்சடியை உட்கொள்கிறோம். இனிப்பிற்கு வெல்லம்: புளிப்பு, துவர்ப்பிற்கு கொட்டையுடன் சேர்க்கும் மாங்காய்; கசப்பிற்கு வேப்பம்பூ; சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் துளி உப்பு; காரத்திற்கு தாளிதம் செய்யும் வரமிளகாய் என அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கி செய்யப்படுகிறது. சுவையோ அலாதி !

 

மாங்காய் பச்சடி:
                                                             மாங்காய் பச்சடி

செய்முறை விளக்கம்:
தேவையான பொருட்கள் :
மாங்காய்-2
வெல்லம் -1/2 கோப்பை
உப்பு-1 சிட்டிகை
வேப்பம்பூ-1 கொத்து
தளிக்க:
எண்ணெய் அல்லது நெய்-1 தேக்கரண்டி
கடுகு-1/2
வரமிளகாய்-1
கறிவேப்பிலை-1 கொத்து.
செய்முறை:
1. மாங்காய் தோல், கொட்டையுடன் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். (தோல்,கொட்டையுடன் சமைத்தல் முழுமையான சுவைடனும் மற்றும் ஜாம் போலாகிவிடாமல் இருக்கும்)
விருப்பத்திற்கு ஏற்ப, தேவையெனில் தோல் அகற்றியும் செய்யலாம்.


2. 1/2 கோப்பை தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.மாங்காய் சில மணித்துளிகளில் எளிதாக வெந்துவிடும்.
3. நன்கு வெந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
4. நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும் உப்பு,வேப்பம்பூ சேர்த்து கிளறிவிடவும்.
5. மேலே கூறிப்பிட்டுள்ள பொருட்கள் கொண்டு தாளிதம் செய்யவும்.
அறுசுவையுடைய மாங்காய் பச்சடி ரெடி