வாழைப்பூ மீன் வறுவல்/Banana flower Fritters

வாழைப்பூ மீன் வறுவல் :
வாழையடி வாழையாக தழைத்து வாழ வாழ்த்துவோம்- வாழை ஒரு கன்று போதும் பிறருக்கு தன்னை முழுதுமாக அர்ப்பணிக்கும் மகத்துவம் பொருந்தியது. மரம், பூ, இலை, காய், கனி, தண்டு, அதன் நார் கூட பயன் தரும் சிறப்பு பொருந்தியது. ஒவ்வொன்றிலும் ஒரு தனிச்சிறப்பு என நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவே சொல்லலாம். உணவாகவும், மங்கலப்பொருளாகவும் ,மருத்துவகுணம் பொருந்தியது இவ்வகையில் நாம் இன்று வாழைப்பூவின் சிறப்பு சுவை அறிவோம். துவர்ப்பு குணம் கொண்ட வாழைப்பூவை நாம் குறைவாகவே பயன்படுத்துகிறோம். அனைவரும் விரும்பி ஏற்கும் வகையில் ஒரு செய்முறை காண்போம்

வாழைப்பூ மீன் வறுவல்:

1. வாழைப்பூ -1 கோப்பை (உள் நரம்பு நீக்கி சுத்தம் செய்தது)


2. உப்பு-1/2 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள்-1/4
4. மிளகாய்த்தூள் 1/2
5. அரிசி மாவு-4 மேஜைக்கரண்டி
6. மைதா மாவு அல்லது (கோதுமை மாவும் கடலை மாவும் சம அளவு கலந்து சேர்த்துக்கொள்ளலாம் ) -3 மேஜைக்கரண்டி


7. இஞ்சி பூண்டு விழுது-1/2 தேக்கரண்டி
8. எலுமிச்சை சாறு-2 தேக்கரண்டி
9. பொறிக்க -எண்ணெய் -100மில்லி
செய்முறை:
2 ல், இருந்து 8 வரை உள்ள பொருட்களை ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.


5 நிமிடம் கழித்து
வாழைப்பூவை ஒன்றொன்றாக தோய்த்து காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.


சுவையான வாழைப்பூ வறுவல் தயார்.