காளான் மிளகு வறுவல் / Mushroom Pepper Fry

காளான் மிளகு வறுவல் / Mushroom Pepper Fry :

For recipe in English click here:   http://wp.me/p1o34t-60

சுலபமான சமையல் கலையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி எளிமையான, சத்து நிறைந்த, சமையல் குறிப்புகளை இந்த செட்டிநாடு குக் புக் தேர்ந்தெடுத்து உங்களுக்காக இந்தப்பதிவில் வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று மிக எளிய காளான் மிளகு வறுவல் செய்முறை பார்க்க உள்ளோம் .

மருத்துவ குணம் நிறைந்த இந்தக்காளான் பற்றி அனைவரும் அறிந்ததே, சுவையும், மனமும், கூடவே சத்தும் நிறைந்த இந்த காளான் உடலுக்கு பலத்தையும், தெம்பையும் கொடுக்கவல்லது. இவ்வளவு அறிந்தும் ஏன் காளான் மாத்திரைகள்? நேரடியாக காளான் சமைத்து அதன் லாபத்தை பெறுவோமே!

காளான் மிளகு வறுவல்
காளான் மிளகு வறுவல்

தேவையான பொருட்கள் மிக குறைவு:
காளான் -200 கிராம், சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்

11911448_943838362324441_1558583106_n
உப்பு-1/2 தேக்கரண்டி
மிளகு போடி-1/2 தேக்கரண்டி
எண்ணெய் -2 தேக்கரண்டி
செய்முறை:
கடாயைக்காய வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய காளான் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
உப்பு சேர்த்து கிளறவும்,இப்பது வேகத்தேவையான நீர் அதிலிருந்தே சுரக்கும் ஆகையால் தண்ணீர் சேர்க்கத்தேவையில்லை.

11911788_943838312324446_1916700743_n
சில நொடிகளில் வெந்துவிடும் குணம் உடையது காளான். இப்போது முனுக்கிய மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

11937923_943838315657779_1127008395_n

இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது ப்ரெட்டுடன் சேர்த்தும் பரிமாறலாம்

குறிப்பு : இதனுடன் முட்டை சேர்த்து கிளறலாம் காலை உணவிற்க்கு  ஏற்றது.