சைவ மட்டன் பிரியாணி/ Soya Biryani

சைவ மட்டன் பிரியாணி:
சுவையான பிரியாணியில் பல வகையுண்டு, சைவ மட்டன் பிரியாணி சோயா துண்டுகளால் தயாரிக்க படுகிறது. சோயா உயர் புரத மற்றும் பல வகை உணவுகள் சைவ மற்றும்அசைவ மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

Saiva mutton Biryani
Saiva mutton Biryani

செய்யத்தேவையான  பொருட்கள்:
சோயா- 1/2 கோப்பை,ஊறவைத்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பெரிய வெங்காயம் – 1
தக்காளி -2
பச்சை மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
கறி வேப்பிலை-1 கொத்து
மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
எண்ணெய்- 3 மேஜைக்கரண்டி
நெய்-1 மேஜைக்கரண்டி
பாசுமதி அரிசி-2 கோப்பை
தேங்காய்ப்பால் அல்லது தயிர்-1/2 கோப்பை
தாளிக்க:
முந்திரி-5 ,7
பட்டை-1 அங்குலம் -2
கிராம்பு-2
பிரியாணியிலை-3 அங்குலம்
ஏலக்காய்-2
கல்பாசிப்பூ-1
ஜாதிப்பத்திரி-1 அங்குலம்
மிளகு-1/4 தேக்கரண்டி

img_3756
அரைக்க:
புதினா,மல்லி இலை 1/2 கோப்பை
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம் -1தேக்கரண்டி
பச்சை மிளகாய்-3
செய்முறை:
1அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்
2. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தாளிதம் செய்யவும்.
3. இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. பின்னர், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் ஊறவைத்து நறுக்கிய சோயா சேர்த்து வதக்கவும்.

img_3759நன்கு வதங்கிய பின்னர்,அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.                                                                                                                                             5.தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தண்ணீர் 2 கோப்பை  மற்றும் ஊறவைத்த அரிசி, சேர்த்து கலந்து, கொதித்ததும் குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்.

img_3763img_3764
மல்லி இல்லை தூவி, முந்திரி நெய்யில் வறுத்து அதையும் தூவி பரிமாறவும்.
தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.                                                                                                                                                   6. சுவையான .சைவ மட்டன் பிரியாணி ரெடி.

img_3769

மாங்காய் தொக்கு / Mango Thokku

மாங்காய் தொக்கு :
சத்து நிறைந்த மாங்காய், பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும் அது மாங்காயின் குணம்.”மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்” என்பது பழமொழி. உணவில் பல விதமாக இந்த மாங்காயைப் பயன்படுத்தலாம். மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான். இவ்வகையில் சுவையான மாங்காய் தொக்கு இன்று காண்போம்.

20160429085953
தொக்கு செய்யத்தேவையான பொருட்கள்:
மாங்காய்-2
உப்பு -2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 மேஜைக்கரண்டி
வெந்தயத்தூள்-1 1/2 தேக்கரண்டி,. 1 தேக்கரண்டி வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
சுத்தமான நல்லெண்ணெய் -4 மேஜைக்கரண்டி
பொடித்த வெல்லம் -1 1/2 மேஜைக்கரண்டி
கடுகு-1 தேக்கரண்டி
பெருங்காயம் -1/2 தேக்கரண்டி
செய்முறை:
மாங்காயை நன்கு கழுவி சுத்தமான துணியால் துடைத்து பின்னர் துருவிக்கொள்ளவும்.

20160429083655
வானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளிக்கவும், பெருங்காயம் சேர்க்கவும்.

20160429083933
துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும்.

20160429084217
மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள், உப்பு, வெந்தயப்பொடி மற்றும் வெல்லம் சேர்த்து இளந்தீயில் வதக்கவும்.

20160429084723
மாங்கை நன்கு ஒன்று சேர்ந்து எண்ணெய் விட்டு வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
நன்கு ஆரிய பின்னர் கொள்கலனில் வைத்து பயன்படுத்தவும்.

Mango ThokkuMango Thokku
Mango ThokkuMango Thokku

வரகு அரிசி பொங்கல் / Kodo Millet Pongal

வரகு அரிசி பொங்கல்:வரகு அரிசி பொங்கல்:
சிறுதானியங்களின் மகிமை பரவி வரும் இக்காலத்தில் அதன் பலவிதமான செய்முறைகளும் கையாளப்படுகிறது. அரிசி கொண்டு செய்யப்படும் அனைத்து பதார்த்தங்களுமே அதற்கு பதிலாக இந்த சிறுதானிய வகைகள் கொண்டு செய்யலாம் என்பது எளிமையான ஒரு கருத்து. ஒப்பிடும் போது இதன் சுவையும் கூடுதலாகும். பண்டயகலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் அற்புதமான ஆரோக்கிய செய்முறைகளையே பின்பற்றி பயன்பெறலாம்.
சிறுதானியங்கள் பசையம் அற்றவை.

images (5)
உரம் இல்லாத மண் பூச்சிகளை ஈர்ப்பதில்லை. உயர் வெப்பநிலை நிலைமைகளின் கீழ் குறுகிய காலத்தில் வளரும் தன்மை உடையது. அரிசியை விட பன்மடங்கு நார்ச்சத்து உள்ளது என்பதால் இது அதிகம் பயன் தரக்கூடியது.

12966339_1076609605713982_336641262_n
வரகு அரிசி பொங்கல் செய்யத்தேவையான பொருட்கள்:
வரகு அரிசி-50 கிராம் அல்லது 1/2 கோப்பை (4-6பேருக்கு பரிமாறலாம்).

LITTLE MILLET
பாசிப்பருப்பு-2 மேஜைக்கரண்டி
வெல்லம் பொடித்தது  -1/2 கோப்பை, பால்- 1/2  கோப்பை
நெய்- 2 மேஜைக்கரண்டி
முந்திரி திராட்சை -2 மேஜைக்கரண்டி
தண்ணீர் -2 கோப்பை
ஏலக்காய் பொடி -1/2 தேக்கரண்டி.
செய்முறை:
1. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
2. பாசிப்பருப்பு மற்றும் வரகு அரிசியை 4 லிருந்து 5 முறை நன்கு கழுவி, குக்கரில்இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வேகவைத்துக்கொள்ளவும்.
3. வெல்லம், சிறிது பால் சேர்த்து இளந்தீயில் வெல்லக்கட்டிகள் கரையும் வரை கிளறவும்.

12966478_1076609722380637_614590640_n
4. நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும், நெய், வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும்.
5. சுவையான வரகு அரிசி பொங்கல் தயார்.

Varagu arisi Pongal
                                                                                                                               Varagu arisi Pongal

 

தெறக்கி கோசுமல்லி / Therakki kosumalli

தெறக்கி கோசுமல்லி:
செட்டிநாடு ஸ்பெஷல் கோசுமல்லி ஒரு இதமான சுவையுடைய  இட்லி, தோசைவகை தொட்டுக்கொள்ளும் பதார்த்தம் என்று சொல்லலாம். உப்பு, புளிப்பு, காரம் என எல்லா சுவையும் மிதமாக இருக்கும். அதில் இரண்டு வகையுண்டு, ஒன்று கத்தரிக்காயை அவித்து தோலுரித்து அல்லது நேரடியாக சுட்டு தோலகற்றி செய்வது மற்றொரு முறை சிறு துண்டுகளாக நறுக்கி தெறக்கி செய்வது. நாம் இங்கு காண இருப்பது இரண்டாவது முறை தெறக்கி கோசுமல்லி. ஒப்பிடும் போது இதில் சுவை கொஞ்சம் கூடுதலாகும் ஏனெனில் நறுக்கிய காய்கள் எண்ணெயில் வதக்குகிறோம் 🙂 . அவித்து செய்யும் முறை முன்பே பதிவு செய்துள்ளோம் . இது இட்லி, தோசைவகை, ஆப்பம் இவற்றிற்கு ஏதுவாகும்.

தெறக்கி கோசுமல்லி / Therakki kosumalli
தெறக்கி கோசுமல்லி / Therakki kosumalli

செய்யத்தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்-1/4 கிலோ
தக்காளி-1
பச்சைமிளகாய்-4 லிருந்து 7 வரை
கறிவேப்பிலை 1 கொத்து
சின்ன வெங்காயம்-10
புளிகரைத்தது – 1 மேஜைக்கரண்டி அளவு
தாளிக்க:
எண்ணெய் -5 தேக்கரண்டி
கடுகு-1/2 தே .க
உளுத்தம்பருப்பு-1/2 1/2 தே .க
செய்முறை:
1. கத்திரிக்காய் சிறு துண்டுகளாக (கூட்டுக்கு நறுக்குவது போல்) நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
2.வெங்காயம் தோலுரித்து, தக்காளி பச்சை மிளகாயையும் வெட்டி தயாராக வைக்கவும்
3.எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்து, வெங்காயம், கத்திரிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.(நறுக்கிய கத்திரிக்கயை நீர் வடித்து, எடுத்து வதக்கவும்).

12939147_1074791755895767_686246781_n
4. நன்கு வதங்கி தோல் நிறம்மாறி வரும்போது கறிவேப்பிலை, வெட்டிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

12939539_1074791749229101_163981261_n
5. தக்காளி வதங்கியதும், உப்பு, கரைத்த புளி சேர்த்து 3 கோப்பை தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
குக்கரில் வைத்தால் தண்ணீரை குறைத்துக்கொள்ளவும் ஒரு விசில் வரும்வரை விட்டு எடுக்கவும்.
6. கத்திரிக்காய் வெந்ததும் கடைந்துவிடவும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்,

தெறக்கி கோசுமல்லி ரெடி

12939374_1074791732562436_1180797678_n

மரவள்ளி கிழங்கு தோசை / Tapioca Roast

மரவள்ளி கிழங்கு தோசை :
மரவள்ளி கிழங்கு எல்லா காலத்திலும் கிடைக்கும் ஒரு எளிமையான வகை கிழங்கு.கேரள மக்கள் அதிகம் பயன்படுத்துவர்.
மரவள்ளி கிழங்கு தோசை மொரு மொருப்பகவும் சுவையாகவும் இருக்கும்.
மிளகாய் சட்னி, சாம்பார் தேங்காய் சட்னி போன்றவை நல்ல பொருத்தம்.

மரவள்ளி கிழங்கு தோசை / Tapioca Roast
மரவள்ளி கிழங்கு தோசை / Tapioca Roast

செய்யத்தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு-250 கிராம்
பச்சரிசி -250 கிராம்
வெந்தயம்-1 தே .க
சீரகம்-1 தே.க
பச்சை மிளகாய்-3
செய்முறை :
பச்சரிசி யை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

12077318_967074766667467_572586459_n

மரவள்ளி கிழங்கு தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவும.                  அரிசி, சீரகம், வெந்தயம், பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். மரவள்ளி கிழங்கையும் அரைத்து மாவுடன் செர்த்துக்கலக்கவும்.

12077052_967074773334133_844261510_n12087547_967074776667466_1674288020_n
அதிக நேரம் புளிக்க வைக்கத்தேவயில்ல 2 லிருந்து 3 மணி நேரம் வைத்து தோசை வார்க்கலாம்.
தோசை மாவு நீர்க்க வைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல் நன்கு சூடான பிறகு ஒரு கரண்டிமாவு எடுத்து மெல்லிய தோசையாக வார்த்தெடுக்கவும்.
விருப்பத்திற்கேற்ப எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

12067305_967074753334135_942300812_n

பொரி கடலை சிற்றுண்டி / Puffed Rice Snack

பொரி கடலை சிற்றுண்டி / Puffed Rice Snack:

For English please click:   http://wp.me/p1o34t-xC
சரஸ்வதி பூஜை பொரி கடலை மீதமாகி விட்டதா? மிக சுலபமான சுவையான மாலை நேரத்தின்பண்டம் இதோ…..
தென் இந்திய பகுதியில் சுவைசேர்க்கப்பட்ட இந்த பொரி பிரபலமானது, ஒருவயது குழந்தை கூட கொரித்து சாப்பிடலாம், எளிதில் ஜீரணிக்ககூடியது.

Puffed rice snack
செய்யத்தேவையான பொருட்கள்:
பொரி -250 கிராம்
பொரி கடலை-50 கிராம்
வேர்கடலை-50 கிராம்
உப்பு-1/4 தே,க
சீனி-1/4 தே .க
மஞ்சள் தூள்-1/4 தே .க
பூண்டு- 3 பல் (தட்டி வைத்துக்கொள்ளவும்)
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி (தேங்காய் எண்ணெய் )
கடுகு-1
வரமிளகாய்-3
கறிவேப்பிலை-2 கொத்து
1. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
2. உடன் பொட்டுக்கடலை, வேர்கடலை சேர்த்து வறுக்கவும் போன்னிரமாகும் போது உப்பு, சீனி,மஞ்சள் தூள், தட்டிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

DSC09149
3. பின்னர் குறைந்த தீயில் பொரியை சேர்த்து 3 நிமிடம் சேர்த்து கிளறவும்.

DSC09150
4. மசாலா பொரி ரெடி இது 10 நாட்கள் வரை காற்றுப்புகாத கொள்கலனில் வைத்து சாப்பிடலாம்.
குறிப்பு:
1.இத்துடன் விருப்பத்திற்கேற்ப கரம் மசாலா போடி அல்லது தனி மிளகாய்ப்பொடி சேர்த்து தாளிக்கலாம்.
2. பச்சை வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி சேர்த்து சிறிது தேங்காய்எண்ணெய் விட்டு கிளறியும் சாப்பிடலாம்.

மிளகு பொடி / Milagu Podi

மிளகு பொடி :

For English please click:      http://wp.me/p1o34t-hV

பசியைத்தூண்டும் மிளகுபொடி தோற்றம்- செட்டிநாடு. மிளகு பொடி, சூடான சாதத்தில் நெய்யுடன்சேர்த்து சாப்பிட நன்று. இது சுவையுடன் ஜீரண சக்தியைத்தூண்டும் குணமுடையது. இது விருந்துகளிலும் அன்றாட உணவிலும் பருப்பு நெய்க்கு மாறுதலாக பரிமாறப்படும். மேலும் இந்த பொடியை சமையலில் பல விதமாக பயன்படுத்தலாம் உதாரணமாக,
கத்திரிக்காய், அவரைக்காய் , போன்ற பொரியலிலும் தேங்காய்க்கு பதிலாக தூவி கிளறிவிடலாம்,சுவைகூடுதலாக இருக்கும்.
கூட்டு வகையிலும் சேர்க்கலாம் இது கெட்டித்தன்மையை அதிகரிக்கும்.
இதன் செய்முறை மிகவும் எளிமையானது.

Mizhagupodi
தேவையான பொருட்கள்:
உளுந்து – 1/2 கோப்பை
பச்சரிசி-1 தே .க
மிளகு -1 தே .க
சீரகம்- 1/2 தே .க
உப்பு-1/2 தே .க
மோர் மிளகாய்- 4
செய்முறை:
மேல் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியே, பொன்னிறமாக வறுத்து ஆறவைக்கவும்.

DSC08009
ஆறியதும் நைசாக அரைத்து போடி செய்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் சமயத்தில் பயன்படுதிக்கொள்ளலாம். இது 3 லிருந்து 4 மாதம் வரை பயன் படுத்தலாம்.

நீர் கொழுக்கட்டை / Neer Kozhukkattai

நீர் கொழுக்கட்டை / Rice Balls:

For English please click:              http://wp.me/p1o34t-pl

நீர் கொழுக்கட்டை  (அரிசி கொழுக்கட்டை)
ஆவியில் வேகவைத்த எந்த உணவும் நம் உடலுக்கு மிகவும் ஏற்றது. சத்துக்கள் குறையாமல் முழுமையாக நமக்கு கிடைக்கும், நாம் ஆவியில் வேகவைத்த இட்லி, புட்டு , கொழுக்கட்டை, இடியாப்பம் போன்ற அற்புதமான உணவுவகைகளை நம் தெனிந்திய உணவில் காணலாம். உதாரணமாக காலையில் தினமும் நாம் உண்ணும் பலகாரம் இட்லி. நீர் கொழுக்கட்டை பலவிதமாக செய்வதுண்டு உடனே அரைத்து செய்யும் இந்த முறை மிகவும் ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும்.

Neer Kozhukkattai
Neer Kozhukkattai

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி- 2 கோப்பை, (தேவைப்பட்டால் 2 மே .க பாசிப்பருப்பு சேர்த்துக்கொள்ளலாம்)
உப்பு-1 தே .க
தேங்காய் துருவியது-1 மூடி
சீரகம்-1 தே .க
கறிவேப்பிலை-2 கொத்து
வர மிளகாய்-4
எண்ணெய் -2 மே .க

செய்முறை :

அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.

10342841_691561120885501_6434333905082216632_n
அதில் அரைத்த மாவைக்கொட்டி இடை விடாமல் மிதமான தீயில், கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும்.

11992393_953308541377423_1585845696_n
பிறகு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும் அறியாதும் எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும். மிளகாய், அல்லது தக்காளி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

 

12007053_953308504710760_348087434_n

Neer Kozhukkattai
Neer Kozhukkattai

 

மட்டன் ரசம் / Mutton Rasam

மட்டன் ரசம் /Mutton Rasam  :
மட்டன் ரசம் காரசாரமான மட்டன் ரசம் மாமிசம் விரும்புவோருக்கு ஒரு அற்புதமான பதார்த்தம். தற்போது மட்டனை விட கோழிக்கறி சமைப்பது அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. முன்பெல்லாம் மாமிச விருந்து என்றாலே அது மட்டன் சப்பாடாகத் தான் கருதப்படும். எளிமையான செய்முறை, குறைவான பொருளடக்கத்தோடு என் அம்மாவின் கைவண்ணம் மட்டன் ரசம் இதோ உங்களுக்காக.

மட்டன் ரசம்
மட்டன் ரசம்

11798509_933386106703000_1201916041_n

தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
மட்டன் (எலும்போடு கூடியது சுவை கூட்டும்) -1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 10 தோலுரித்து
தக்காளி-1 பெரியது
வரமிளகாய்-7 – 9
உப்பு-1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை கொத்து
மிளகு-1/2 தேக்கரண்டி
பூண்டு-3 பல்
மல்லி விதை-1/2 தேக்கரண்டி

11798546_933386256702985_1307409270_n (1)

செய்முறை
1. மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
2. வரமிளகாயை போடியாக பிய்த்துக் கொள்ளவும். மிளகு.
3. சீரகம், மல்லி, மற்றும் பூண்டை பொடி செய்து (முனுக்கி ) வைத்துக்கொள்ளவும்.
4. சுத்தம் செய்த மட்டனை உப்பு, மஞ்சள் சேர்த்து பிசறி 20 நிமிடம் வைக்கவும்.
5. குக்கரில் அல்லது வானலியில் எண்ணெய் காயவைத்து வரமிளகாய் போட்டு அதன் விதை பொன்நிறமாகும் வரை வதக்கவும்.
6. உடன் கறிவேப்பிலை, வெங்காயம், மட்டன் சேர்க்கவும் நன்கு கிளறவும் பிறகு தக்காளி சேர்க்கவும்.
7. தக்காளி தோல் விட்டு வரும் வரை வதக்கவும். வரமிளகயும் தோல் விட்டு வரும், இப்போது தண்ணீர் சேர்கத் தேவையில்லை, மிளகாய், தக்காளி நன்கு வெந்த பின்னர் 2 கோப்பை தண்ணீர் சேர்க்கவும் .
8. குக்கரில் 5 முதல் 8 நிமிடம் வரை வேகவைக்கவும் இளந்தீயில் வைக்கவும்.
9. ஆவி மாறியதும் முனுக்கி வைத்துள்ள மிளகு, சீரகம்,மல்லி, மற்றும் பூண்டு கலவையை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
10. சூடான சாத்தத்துடன் பரிமாறவும்.