பொரி கடலை சிற்றுண்டி / Puffed Rice Snack

பொரி கடலை சிற்றுண்டி / Puffed Rice Snack:

For English please click:   http://wp.me/p1o34t-xC
சரஸ்வதி பூஜை பொரி கடலை மீதமாகி விட்டதா? மிக சுலபமான சுவையான மாலை நேரத்தின்பண்டம் இதோ…..
தென் இந்திய பகுதியில் சுவைசேர்க்கப்பட்ட இந்த பொரி பிரபலமானது, ஒருவயது குழந்தை கூட கொரித்து சாப்பிடலாம், எளிதில் ஜீரணிக்ககூடியது.

Puffed rice snack
செய்யத்தேவையான பொருட்கள்:
பொரி -250 கிராம்
பொரி கடலை-50 கிராம்
வேர்கடலை-50 கிராம்
உப்பு-1/4 தே,க
சீனி-1/4 தே .க
மஞ்சள் தூள்-1/4 தே .க
பூண்டு- 3 பல் (தட்டி வைத்துக்கொள்ளவும்)
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி (தேங்காய் எண்ணெய் )
கடுகு-1
வரமிளகாய்-3
கறிவேப்பிலை-2 கொத்து
1. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
2. உடன் பொட்டுக்கடலை, வேர்கடலை சேர்த்து வறுக்கவும் போன்னிரமாகும் போது உப்பு, சீனி,மஞ்சள் தூள், தட்டிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

DSC09149
3. பின்னர் குறைந்த தீயில் பொரியை சேர்த்து 3 நிமிடம் சேர்த்து கிளறவும்.

DSC09150
4. மசாலா பொரி ரெடி இது 10 நாட்கள் வரை காற்றுப்புகாத கொள்கலனில் வைத்து சாப்பிடலாம்.
குறிப்பு:
1.இத்துடன் விருப்பத்திற்கேற்ப கரம் மசாலா போடி அல்லது தனி மிளகாய்ப்பொடி சேர்த்து தாளிக்கலாம்.
2. பச்சை வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி சேர்த்து சிறிது தேங்காய்எண்ணெய் விட்டு கிளறியும் சாப்பிடலாம்.

முட்டைகோஸ் வடை / Cabbage Vadai

முட்டைகோஸ் வடை / Cabbage Vadai:

For English please click:  http://wp.me/p1o34t-r8

முட்டைகோஸ் (கீரை) வடை :
பருப்பு வடை மொரு, மொருப்பான சுவை மிகுந்த ஒன்று, பசியாற நல்ல பலகாரம். பருப்பு புரதச்சத்து சத்து நிறைந்தது, உடன் நாம் சேர்க்கும் கீரை அல்லது பொடிதாக நறுக்கிய காய் இன்னும் சுவையைக்கூட்டச் செய்யும்.

முட்டைகோஸ் வடை / Cabbage Vadai
முட்டைகோஸ் வடை / Cabbage Vadai

தேவையான பொருட்கள் 1 அரைக்க:
வடை பருப்பு அல்லது கடலைப்பருப்பு 1/2 கோப்பை
துவரம் பருப்பு-1/4 கோப்பை
மிளகாய்-4
சோம்பு -1 தே.க
சீரகம்-1தே.க
பொருட்கள்-2
இஞ்சி -1 அங்குலம்
உப்பு -1/2 தே.க
மஞ்சள் தூள் -1/2தே.க
முட்டைகோஸ் -1 கோப்பை, பொடியாக நறுக்கியது
வெங்காயம்-1/4 கோப்பை, பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை-2 கொத்து, பொடியாக நறுக்கியது
எண்ணெய் பொரிக்கத்தேவையான அளவு – 200 மில்லி
செய்முறை:
1.கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
2.மிளகாய், சோம்பு, சீரகம், இஞ்சியை அரைத்து,  உடன் ஊறவைத்த பருப்பை நீர் வடித்து, அதனுடன் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும    3.உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய வெங்காயம் , கறிவேப்பிலை மற்றும் முட்டைகோஸ் சேர்த்து கையினால் நன்கு ஒன்று சேர பிசையவும்.

12170213_972755456099398_1252537442_n
4. கடாயில் எண்ணெய் காய வைத்து, வடை கலவையை எலுமிச்சம்பழம் அளவு உருண்டைகளாக்கி லேசாக தட்டி மொரு, மொருப்பாக வேகவைக்கவும்.

முட்டைகோஸ் வடை / Cabbage Vadai
முட்டைகோஸ் வடை / Cabbage Vadai

மிளகு பொடி / Milagu Podi

மிளகு பொடி :

For English please click:      http://wp.me/p1o34t-hV

பசியைத்தூண்டும் மிளகுபொடி தோற்றம்- செட்டிநாடு. மிளகு பொடி, சூடான சாதத்தில் நெய்யுடன்சேர்த்து சாப்பிட நன்று. இது சுவையுடன் ஜீரண சக்தியைத்தூண்டும் குணமுடையது. இது விருந்துகளிலும் அன்றாட உணவிலும் பருப்பு நெய்க்கு மாறுதலாக பரிமாறப்படும். மேலும் இந்த பொடியை சமையலில் பல விதமாக பயன்படுத்தலாம் உதாரணமாக,
கத்திரிக்காய், அவரைக்காய் , போன்ற பொரியலிலும் தேங்காய்க்கு பதிலாக தூவி கிளறிவிடலாம்,சுவைகூடுதலாக இருக்கும்.
கூட்டு வகையிலும் சேர்க்கலாம் இது கெட்டித்தன்மையை அதிகரிக்கும்.
இதன் செய்முறை மிகவும் எளிமையானது.

Mizhagupodi
தேவையான பொருட்கள்:
உளுந்து – 1/2 கோப்பை
பச்சரிசி-1 தே .க
மிளகு -1 தே .க
சீரகம்- 1/2 தே .க
உப்பு-1/2 தே .க
மோர் மிளகாய்- 4
செய்முறை:
மேல் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியே, பொன்னிறமாக வறுத்து ஆறவைக்கவும்.

DSC08009
ஆறியதும் நைசாக அரைத்து போடி செய்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் சமயத்தில் பயன்படுதிக்கொள்ளலாம். இது 3 லிருந்து 4 மாதம் வரை பயன் படுத்தலாம்.

நீர் கொழுக்கட்டை / Neer Kozhukkattai

நீர் கொழுக்கட்டை / Rice Balls:

For English please click:              http://wp.me/p1o34t-pl

நீர் கொழுக்கட்டை  (அரிசி கொழுக்கட்டை)
ஆவியில் வேகவைத்த எந்த உணவும் நம் உடலுக்கு மிகவும் ஏற்றது. சத்துக்கள் குறையாமல் முழுமையாக நமக்கு கிடைக்கும், நாம் ஆவியில் வேகவைத்த இட்லி, புட்டு , கொழுக்கட்டை, இடியாப்பம் போன்ற அற்புதமான உணவுவகைகளை நம் தெனிந்திய உணவில் காணலாம். உதாரணமாக காலையில் தினமும் நாம் உண்ணும் பலகாரம் இட்லி. நீர் கொழுக்கட்டை பலவிதமாக செய்வதுண்டு உடனே அரைத்து செய்யும் இந்த முறை மிகவும் ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும்.

Neer Kozhukkattai
Neer Kozhukkattai

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி- 2 கோப்பை, (தேவைப்பட்டால் 2 மே .க பாசிப்பருப்பு சேர்த்துக்கொள்ளலாம்)
உப்பு-1 தே .க
தேங்காய் துருவியது-1 மூடி
சீரகம்-1 தே .க
கறிவேப்பிலை-2 கொத்து
வர மிளகாய்-4
எண்ணெய் -2 மே .க

செய்முறை :

அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.

10342841_691561120885501_6434333905082216632_n
அதில் அரைத்த மாவைக்கொட்டி இடை விடாமல் மிதமான தீயில், கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும்.

11992393_953308541377423_1585845696_n
பிறகு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும் அறியாதும் எலுமிச்சம் பழ அளவிற்கு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும். மிளகாய், அல்லது தக்காளி சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

 

12007053_953308504710760_348087434_n

Neer Kozhukkattai
Neer Kozhukkattai

 

சைவ மீன் குழம்ப / vegetarian fish curry

சைவ மீன் குழம்பு / வாழைப்பூ மீன் குழம்பு / Vegetarian fish curry:

For English please click link        http://wp.me/p1o34t-i4

சைவ மீன் குழம்பு / வாழைப்பூ மீன் குழம்பு
மீன் குழம்பின் அரிய சுவையை அனைவரும் உண்டு மகிழ அதே செய்முறையை வாழைப்பூ கொண்டு சமைக்கலாம் . வாழைப்பூ அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. முக்கியமாக இரும்புச்சத்து,  நார்ச்சத்து அதிகம் நிறைந்தது என்பதால் பெண்களுக்கு மாத விளக்கு சமயத்திலும் கர்ப்ப காலத்திலும் இது மிகச் சிறந்த உணவாக உட்கொள்ளுதல் நலம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வாழைப்பூ தொவட்டல், வாழைப்பூ கூட்டு, போரியல் வடை என பல வகையுண்டு.
இங்கு வித்தியாசமான வாழைப்பூ மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு வாழைப்பூவின் உட்பகுதி பூக்களே மிகவும் சிறந்தது , ஒவ்வொரு பூவின் உள்ளும் இருக்கும் நரம்புகளை (பிளாஸ்டிக் போன்ற) அகற்றி, மோர் கலந்த நீரில் போட்டு வைத்துக்கொள்ளவும் நிறம் மாறாமல் இருக்கும்.தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

image courtesy google image

Image   courtesy google

செய்யத்தேவையான பொருட்கள் :
வாழைப்பூ-1 கோப்பை
சின்ன வெங்காயம்-9 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
பூண்டு-7 பல் வெட்டிக்கொள்ளவும்
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை-1 கொத்து
தக்காளி-1 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
உப்பு-1 தே க
மிளகாய்த்தூள் -2 தே க (சாம்பார் மசாலாத்தூள் )
புளி கரைத்தது 1/4 கோப்பை (1 எலுமிச்சை அளவு )
மஞ்சள் த்தூள் -1/4தே க
தாளிக்க :
எண்ணெய் -2 மே .க
சோம்பு-1/4 தே க
வெந்தயம்-சீரகம்-1/4 தே க
அரைக்கத்தேவயான பொருட்கள்:
வெங்காயம்-1
தக்காளி-1
சோம்பு-1
சீரகம்-1/2
இவற்றை விழுதாக அறித்துக்கொள்ளவும். இவற்றை லேசாக வதக்கியும் அரைக்கலாம்
செய்முறை:
கடாயில் எண்ணெய் காய வைத்து “தளிக்க” பொருட்களைத் தாளித்துக்கொள்ளவும்.
வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், வாழைப்பூ, கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, புளித்தண்ணீர், தண்ணீர் 2 கோப்பைசேர்த்து 3 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொக்கவிடவும்.
சைவ மீன் குழம்பு ரெடி .

கடலைக்கறி / Kadalaikkari

கடலைக்கறி :
நம் நாட்டில் சுவையான புட்டு வகை – இனிப்புப்புட்டு, மோர் புட்டு தாளித்தல், புட்டு கொழுக்கட்டை, இன்னும் பலவகைசெய்வதுண்டு. கேரளத்தில் மிகவும் பிரபலமான உணவு இந்த புட்டு கடலைகறி, கேரள மக்களால் விரும்பி உண்ணும் உணவு இந்த புட்டுக்கு இணையாக கடலைக்கறி நம்மில் பலரும் விரும்பி செய்வதுண்டு ஆகையால் இந்த செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளோம்.

கடலைக்கறி / Kadalaikkari
கடலைக்கறி / Kadalaikkari

செய்யத் தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை( கருப்பு ) -1 கோப்பை
வெங்காயம்-1
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது-2 தேக்கரண்டி
சிவப்புமிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் -1/2தேக்கரண்டி
அரைக்க :
வர மிளகாய்-5, மிளகு -1/2 தே .க
மல்லி-11/2 தேக்கரண்டி
பட்டை-1 சிறியது
கிராம்பு-2
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
தேங்காய்-2 மேஜைக்கரண்டி
இவற்றை வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய் ந்ததும் வறுத்துக்கொள்ளவும்.
ஆறியதும் விழுதாக அரைத்துவைத்துக்கொள்ளவும்.
வேங்காயம் தக்காளியைப்பொடியாக வெட்டிவைத்துகொள்ளவும்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை-2 கொத்து
வரமிளகாய்-2
செய்முறை:
1. கொண்டைக்கடலை 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 3 விசில் வேகவைத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் காயவைத்து, மேலே தளிக்க பொருட்களை தாளிதம் செய்துகொள்ளவும்.
3. வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பிறகு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நல்லமனம் வரும் வரை வதக்கவும்.
4. தக்காளி, உப்பு சேர்த்து தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.
வேகவைத்த கொண்டைக்கடலை, அரைத்த விழுது, 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள்,சிவப்புமிளகாய்த்தூள் சேர்த்து 10 நிமிடம் இளந்தீயில் கொதிக்கவிடவும்.
5.கொத்தமல்லி இலை தூவி புட்டுடனோ, சப்பாத்தி உடனோ பரிமாறலாம்.

கடலைக்கறி / Kadalaikkari
கடலைக்கறி / Kadalaikkari

குறிப்பு: 

மல்லி, பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் இதற்கு பதிலாக கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்ளலாம் .       http://wp.me/p6uzdK-3P

இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic paste

இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic paste:

For English recipe please click: http://wp.me/p1o34t-7r

இஞ்சி பூண்டு விழுது எளிய முறையில் வீட்டில் தயாரித்து பயன்படுத்துவது மிகச்சிறந்தது, பணமும் மிச்சம் எந்த ஒரு செயற்கை பாதுகாப்பு பொருட்களும் சேர்க்காமல் செய்வதால் உடலுக்கு கெடுதல் விளைவிக்காமல் பாதுகாக்கும். வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை செய்து வைத்துக்கொள்ளவும். விடுமுறை நாட்களில் செய்து வைத்தால் வார நாட்களில் சுலபமாக சமைக்க உதவும்.

இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic paste
இஞ்சி பூண்டு விழுது / Ginger Garlic paste

தேவையான பொருட்களும் செய்முறையும்:
இஞ்சி- 50 கிராம்
பூண்டு- 50 கிராம்
சமையல் எண்ணெய் -2 அலலது 3 தேக்கரண்டி
இஞ்சி தோல் நீக்கி சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
பூண்டு தோலுரித்து இரண்டாக வெட்டிக்கொள்ளவும்
இரண்டையும் மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும், அரைக்கும் பொது தண்ணீர் சேர்க்கக்கூடாது பதிலாக எண்ணெய் சேர்த்து அரைக்கவும்.
சுத்தமான கொள்கலனில் வைத்து பயன் படுத்தவும்.
குறிப்பு:
1. எண்ணெய் சேர்ப்பதால் விழுதின் நிறம் மாறாமல் இருக்கும்.
2. தண்ணீருக்கு பதிலாக எண்ணெய் சேர்த்து அரைப்பதால் கெடாமலும் இருக்கும்.

எண்ணெய் சேர்ப்பதால் வதக்கும் போது அடி பிடித்து கருகாமல் இருக்கஉதவும்.

சைவ ஆம்லேட் / Vegetarian omelette

சைவ ஆம்லேட் – Vegetarian omelette :

For recipe in English click,   http://wp.me/p1o34t-be

முட்டையில்லாத ஆம்லெட் !!! ஆச்சரியமாக உள்ளதா? உண்மை, சுவையோ மாற்றமில்லை.
விருந்தாளி சுத்த சைவம், என்ன சிறப்பாக செய்வது என்று குழப்பமா? இதோ உங்களை மகிழ்விக்க ஒரு அற்புதமான, நொடியில் தயாரிக்க கூடிய செய்முறை சைவ ஆம்லேட். ஆரோக்கியமானது, கீரையின் சத்து நிறைந்தது, சுவை மிகுந்தது செய்து பாருங்கள்.

சைவ ஆம்லெட்
சைவ ஆம்லெட்

தேவையான பொருட்கள்:
கீரை முளைக்கீரை-1/2 கட்டு (அல்லது 1 கோப்பை இறுக்கமாக அளந்துகொள்ளவும்)
சின்ன வெங்காயம்-15, அல்லது ஒரு பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்-4
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
கடலை மாவு – 5- 7 மேசைக்கரண்டி
பால்-2 தேக்கரண்டி
மிளகாய்ப்போடி-1/4 தேக்கரண்டி
செய்முறை:

1. ஒரு வாயகன்ற பத்திரத்தில் கடலை மாவு, உப்பு, பால், மஞ்சள்தூள், மிளகாய்ப்பொடி, சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
2. சின்ன வெங்காயம் தோல் உரித்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும். (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ).
3. முளைக்கீரை நன்கு கழுவி நீர் வடித்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.( 1கோப்பை இறுக்கமாக அளந்துகொள்ளவும்)
4. பச்சை மிளகாய், சின்னவெங்காயம், கீரை எல்லாவற்றையும் கரைத்த மாவில் சேர்த்துக்கலக்கவும்.
5. தோசைக்கல்லை காய வைத்து சிறிய அம்லேட்டாக ஒரு கரண்டி அளவு மாவெடுத்து வட்டமாக ஊத்தி, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சுற்றிலும் விடவும்.
6. திருப்பி மறுபக்கம் வேக வைத்து எடுக்கவும், சைவ ஆம்லேட் தயார் சூடாக பரிமாறி மகிழவும்.

குறிப்பு:
1. வெங்காயம், கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மாவை சிறிது நீர்க்க கரைத்துக்கொள்ளவும் இல்லாவிட்டால் அடை போல் ஆகிவிடும்

அடித்த முட்டைக்குழம்பு / Beaten Egg cube curry

அடித்த முட்டைக்குழம்பு:

For English recipe click  –       http://wp.me/p1o34t-iX

நாம் சாதாரணமாக செய்யும் முட்டைக்குழம்பு முழு முட்டையை அவித்து, காரக்குழம்பு செய்வது போல் அல்லாமல், இது அடித்தமுட்டையில், பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வேகவைத்து, சதுரமாக வெட்டி குழம்பில் சேர்க்கிறோம். இதனால் முட்டையின் வாடை குறைந்து குழம்பை நன்கு உறுஞ்சி அந்த முட்டை உண்ணும் பொழுது சுவை அதிகரித்துள்ளதை உணரலாம்.

அடித்த முட்டைக்குழம்பு:
அடித்த முட்டைக்குழம்பு

தேவையான பொருட்கள் -1 :
முட்டை-3
வெங்காயம்-1
குடைமிளகாய் -1 தேவைப்பட்டால்
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
உப்பு-1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள் -1/4 தேக்கரண்டி

தேவையான பொருட்கள் -2
சின்ன வெங்காயம் -9
பூண்டு-7
தக்காளி-1 பெரியது
கறிவேப்பிலை,
புளிச்சாறு-2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் (சாம்பார் மிளகைய்த்தூள் ) -2  1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி

 

11902372_941852649189679_1647508677_o (1)
தளிக்க:
எண்ணெய் -5 தேக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/4 தேக்கரண்டி

செய்முறை:
1. ஒரு பத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக்கொள்ளவும், பொடியாக வெட்டியா வெங்காயம் , குடைமிளகாய், உப்பு, மஞ்சள் தூள் மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும் .தேவைப்பட்டால் முட்டை அடிக்கும் போது 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம்.
2. அகலமான ஒரு பானில் எண்ணெய் தடவி அடித்த முட்டைக்கலவையை ஊற்றவும்.

11872729_941852739189670_1316172343_n
3. இட்லி பத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

11911455_941852702523007_2028394596_n
4. ஆறியதும் சதுரமாக வெட்டிவைதுக்கொள்ளவும்.

dsc08040 (1)
5.  மற்றொரு கடாயில் எண்ணெய் காய வைத்து தாளிதம் சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
6. வெட்டிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பொன்னிறமாகவதக்கவும்.
7. மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள் உப்பு,கரைத்த புளிச்சாறு சேர்க்கவும், 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொதிக்க விடவும்,

11872600_941852645856346_1959221129_n
8.  5 நிமிடம் கொதித்த பின்னர் வேகவைத்து வெட்டிய முட்டையை சேர்த்து இன்னும் 3 நிமிடம் கொதிக்க விடவும்.

11924721_941852619189682_1616603713_nசுவையான அடித்த முட்டைக்குழம்பு ரெடி

குறிப்பு: தேவைப்பட்டால் முட்டை அடிக்கும் போது 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம்.

குழி பணியாரக்கல்லில் கூட அடித்த முட்டையை ஊற்றி எடுத்து குழம்பில் சேர்க்கலாம்.

 

வெங்கயக்கோசு / vengayakosu

வெங்கயக்கோசு / Vengaya kosu :

வெங்கயக்கோசு பிறப்பிடம் செட்டிநாடு இட்லி ,தோசை, ஆப்பம் போன்ற பலகரங்களுக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது . நம் தெனிந்தியாவில் அன்றாட உணவான இட்லி, தோசையோடு தொடங்கும் நட்டகளே அதிகம், தொட்டுக்கொள்ள சுவையான பதார்த்தம் இல்லாவிட்டால் காலை பலகாரம் போர், எனவே வித விதமாய் செய்து அசத்துங்கள்.வெங்கயக்கோசு உடன் அரைக்கப்பட்ட மசாலா சேர்ப்பதால் சுவையோடு மனமும்நிரைந்த அனைவராலும் விரும்பி உணப்படும் ஒரு சைட் டிஷ் என்று சொல்லலாம் .

 

வெங்கயக்கோசு :
வெங்கயக்கோசு :

செய்யத்தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம் -3
தக்காளி -1 பெரியது
உருளைக்கிழங்கு -1 அல்லது மாங்காய் இஞ்சி 50 கிம்

images-75

அரைக்க :
மிளகாய் -5 , 7
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம்-1தேக்கரண்டி
தேங்காய் -2 அல்லது 3 மேஜைக்கரண்டி
பொட்டுக்கடலை -1 1/2
தக்காளி-1

download-5

தாளிக்க:
எண்ணெய் -4 தேக்கரண்டி
சோம்பு -1 தேக்கரண்டி
கருவேப்பிலை-1 கொத்து
உளுந்தம்பருப்பு-1தேக்கரண்டி

செய்முறை
1. வெங்காயம்,  தக்காளி, உருளைக்கிழங்கு அல்லது மாங்காய் இஞ்சியை நருக்கிக் கொள்ளவும் .
2. வானலியில் எண்ணெய் காயவைத்து தளிக்கும் பொருட்களைத் போட்டுத்தாளிக்கவும்.
3. கருவேப்பிலை , உருளைக்கிழங்கு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் .
4. 2 நிமிடம் வதக்கியதும் தக்காளியைப் போட்டு வதக்கவும், தக்காளி தோல் விட்டதும் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
5. நன்கு( 10) நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
வேங்கயக்கொசு ரெடி.