பாதம் பர்பி :
பர்பி பொதுவாக தேங்காய் அல்லது கடலை வகை கொண்டு செய்வதுண்டு. பாதாம் பார்பி சிறப்பாக அரைத்த பாதாம் மற்றும் பால் சுவையுடன் வாயில் இதமாக கரையக்கூடிய வகையில் இது அசத்தும் சுவையுடையது.கடையில் அதிக விலை கொடுத்து வாங்குவதை விட சிறு முயற்சியில் ஒரு மன மகிழ்ச்சி காணலாம்.

செய்யத்தேவையான பொருட்கள்:
பாதாம்-1 கோப்பை
சீனி-1 கோப்பை
பால்-1/4 கோப்பை
நெய்-2 தேக்கரண்டி
செய்முறை:
1.பாதாம் 6 மணி நேரம் அல்லது இரவு நேரத்தில் ஊற வைத்து, காலையில் தோல் உரித்துக்கொள்ளவும்.
2.பாதாம் நன்கு விழுதாக, பால் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
3. வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, சீனி சேர்த்து நன்கு கலக்கி பின் அடுப்பில் ஏற்றவும்.
4. கைவிடாமல் கிளறவும், இது விரைவில் தயாராகக்கூடிய பதார்த்தம் அதலால் இடைவிடாமல் கிளறவும்.
5. படிப்படியாக வெந்து, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம் நெய் சேர்த்து கிளறவும்.
6. பின்னர் நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.
சூடு சிறிது ஆறியதும் தேவையான வடிவத்தில் வெட்டி கொள்கலனில் அடுக்கி வைக்கவும .
7. இது 10 நாட்கள் வரை சுவை மாறாமல் இருக்கும்.
பாதாம் பர்பி ரெடி.
குறிப்பு:
நெய் சேர்த்தால் பர்பி ஒரு மினுமினுப்புடன் பார்க்க அழகாக இருக்கும்.
சர்க்கரை அதிகம் விரும்பினால் 1/4 கோப்பை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்