மிளகு பொடி :
For English please click: http://wp.me/p1o34t-hV
பசியைத்தூண்டும் மிளகுபொடி தோற்றம்- செட்டிநாடு. மிளகு பொடி, சூடான சாதத்தில் நெய்யுடன்சேர்த்து சாப்பிட நன்று. இது சுவையுடன் ஜீரண சக்தியைத்தூண்டும் குணமுடையது. இது விருந்துகளிலும் அன்றாட உணவிலும் பருப்பு நெய்க்கு மாறுதலாக பரிமாறப்படும். மேலும் இந்த பொடியை சமையலில் பல விதமாக பயன்படுத்தலாம் உதாரணமாக,
கத்திரிக்காய், அவரைக்காய் , போன்ற பொரியலிலும் தேங்காய்க்கு பதிலாக தூவி கிளறிவிடலாம்,சுவைகூடுதலாக இருக்கும்.
கூட்டு வகையிலும் சேர்க்கலாம் இது கெட்டித்தன்மையை அதிகரிக்கும்.
இதன் செய்முறை மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள்:
உளுந்து – 1/2 கோப்பை
பச்சரிசி-1 தே .க
மிளகு -1 தே .க
சீரகம்- 1/2 தே .க
உப்பு-1/2 தே .க
மோர் மிளகாய்- 4
செய்முறை:
மேல் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியே, பொன்னிறமாக வறுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் நைசாக அரைத்து போடி செய்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் சமயத்தில் பயன்படுதிக்கொள்ளலாம். இது 3 லிருந்து 4 மாதம் வரை பயன் படுத்தலாம்.