கூட்டுக்காய் பிரட்டல்/ Mixed Vegetable Masala

கூட்டுக்காய் பிரட்டல்:

English recipe please click link:  http://wp.me/p1o34t-1gK
மதிய உணவின் ஆர்வத்தை தூண்டுவது அதன் துணை சேர்க்கையான காய்கறிதான். காய்கறியில் தான் எத்துணை வகை! கணக்கிலடங்கா கறிவகையும் அதன் சுவையும் அருமை. பிரட்டல், துவட்டல்,கூட்டு, பொரியல்
பச்சடி, மண்டி, கோலா இன்னும் புதிய கண்டுபிடிப்புகள். நம் நாக்கின் சுவை அரும்புகள் மலரும் வண்ணம் சமைத்து மகிழ்வோம்.
அசத்தும் ருசிச்சிறப்பு இந்த கூட்டுக்காய் பிரட்டலுக்கு உண்டு, சுவை மட்டுமன்றி அனைத்து காய் சேர்க்கையின் சத்தும் கலந்தது இதன் முக்கியச்சிறப்பு. சிறந்த சேர்க்கை ரொட்டி அல்லது சாதம், ரசம்.

கூட்டுக்காய் பிரட்டல்/ Mixed Vegetable Masala
கூட்டுக்காய் பிரட்டல்/ Mixed Vegetable Masala

செய்யத்தேவையான பொருட்கள்:
காய் வகை- 500 கிராம்
காலிஃளார் , பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீட்ரூட்,குடைமிளகாய் மற்றும் காரட்.
வெங்காயம் -1
தக்காளி -1
இஞ்சிபூண்டு விழுது -2 தேக்கரண்டி
மசாலா பொடி-1 தேக்கரண்டி
மிளகாய் பொடி-2 தேக்கரண்டி
உப்பு -1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
சோம்பு -1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
செய்முறை:
காய் வகையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும், இரண்டு நிமிடத்தில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெட்டிய உருளைக்கிழங்கு,பீட்ரூட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்னர் இதர காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அல்லது அனைத்து காய்களையும் பக்குவமாக வேகவைத்தும் சேர்க்கலாம்.
உப்பு, மசாலாபொடி, மிளகாய்ப்பொடி சேர்த்து கிளறவும், 1/2 கோப்பை தண்ணீர் சேர்த்து
மூடி இட்டு பூப்போன்று வேகவிடவும்.
தேவைக்கேற்ப தேங்காய்ப்பால் அல்லது 2 மேஜைக்கரண்டி தேங்காய், சீரகம் அரைத்த விழுது சேர்த்து சுருளவிடவும், இது சுவைகூட்டுவதோடு விருந்துக்கு அளவும் அதிகமாகும்.

சத்து நிறைந்த கூட்டுக்காய் பிரட்டல் தயார்

கற்கண்டு பாலண்ணம் / கல்கண்டு பொங்கல்- Sugar candy rice

கற்கண்டு பாலண்ணம் / கல்கண்டு பொங்கல் :

Sugar Candy Pongal, Recipe in English please click link:  http://wp.me/p1o34t-u9
மென்மையான, வெண்ணை போன்ற சுவையும், நிறமும் கொண்ட கல்கண்டு சாதம் பெரும்பாலும் கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுவது நமது வழக்கம். செட்டிநாட்டு விருந்துகளிலும் இது சிறப்பாக பரிமாறப்படும். குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த கல்கண்டுபாலண்ணம் அன்றாடம் செய்து கொடுக்கலாம். இதில் பால், பருப்பு, கல்கண்டு, ஏலக்காய், முந்திரி போன்ற சுவையான, மற்றும் சத்து நிறைந்த பொருட்கள் உள்ளடங்கியதால், இது ஆரோக்கியம் நிறைந்த ஒரு முழு உணவாகும்.

 

 கல்கண்டு பொங்கல்- Sugar candy rice
கல்கண்டு பொங்கல்- Sugar candy rice

செய்யத்தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 1 கோப்பை
கல்கண்டு – 1 கோப்பை (பொடித்தது)
பாசிப்பருப்பு -1/4 கோப்பை ( மலர வேகவைத்தது) விருப்பத்திற்கேற்ப பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்.
பால் -1 1/2 கோப்பை
தண்ணீர்-1 1/2 கோப்பை
முந்திரி அல்லது பாதாம்-5 அல்லது 9
ஏலக்காய் பொடி -1/2 தேக்கரண்டி
நெய்-2 மேஜைக்கரண்டி
செய்முறை விளக்கம்:
1. பாசிப்பருப்பை 1 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. அரிசியை நன்கு கழுவி, மேலே குறிப்பிட்டுள்ள பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 அல்லது 5 விசில் குக்கரில் வேகவிடவும்.
3. சூடு தணிந்ததும், பொடித்த கல்கண்டு, வேகவைத்த பருப்பு சேர்த்து கலக்கவும், அடிபிடிக்காமல், இளந்தீயில் வைத்து கிளறிவிடவும்.

13936791_1186791528029122_23500583_n
4. நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து கலவையுடன் சேர்க்கவும், ஏலக்காய் பொடி சேர்த்து ஒன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

14081449_1186791461362462_327875057_n

பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry

பூக்கோசு மிளகு வறுவல் :

Cauliflower pepper fry  recipe in English:  http://wp.me/p1o34t-5Y

பூக்கோசு (காலிபிளவர் ) சுவையான பூக்கோசு மிளகு வறுவல் அனைவருக்கும் ஏற்றது, செய்முறையும் எளிமையானது. காரக்குழம்பு, சாம்பார் போன்றவற்றிற்கு இணையாகும். உடன் தயாரித்த மிளகுத்தூள் இதன் சுவைச்சிறப்பு.

பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry
                                   பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry

 செய்யத்தேவையான பொருட்கள்:
பூக்கோசு -500 கிராம்
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-1
மிளகுத்தூள்-1 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
கடுகு-1/2
கறிவேப்பிலை-1 கொத்து
மிளகுத்தூள்:
மிளகு-1 தேக்கரண்டி
சீரகம் -1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு -1 1/2 தேக்கரண்டி
மேலேகூறிப்பிட்டுள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து, சூடு ஆறியது பொடித்துவைத்துக்கொள்ளவும்.

13900984_1166014326773509_160560941_n
செய்முறை:
பூக்கோசை வெந்நீரில் உப்பு சேர்த்து அதில் போட்டு 3 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் நீரை வடித்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
மேல்கூறியபடி மிளகுத்தூள் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பிறகு பூக்கோசு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில், சிறிது நீர் தெளித்து, மூடிவைத்து வேகவிடவும்.
மிதமான தீயில், பொறுமையாக வேகவைத்தால் நிறம் வெண்மையாக இருக்கும்.

அல்லது பூக்கோசை ஆவியில் வேகவைத்தும் எடுத்துக்கொள்ளவும்.
பூக்கோசு நன்கு வெந்ததும் பொடித்துவைத்துள்ள மிளகு பொடியை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry
                                               பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry

கத்திரிக்காய் வறுவல் / Brinjal fry

கத்திரிக்காய் வறுவல் :
ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த, அதிக அளவில் நாம் பயன்படுத்தும் கத்திரிக்காயில் ஒரு எளிய சுவையான வறுவல். இது ரசம், சாம்பார், தயிர் சாதம் என எல்லாவற்றிற்கும் ஏற்றது.
கத்திரிக்காய் வறுவல்: எண்ணெய் குறைவு, சுவையோ அதிகம், செய்வது எளிது.

கத்திரிக்காய் வறுவல்
கத்திரிக்காய் வறுவல்

செய்யத்தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்-1/2 கிலோ, பிஞ்சாக இருந்தால் நல்லது.
அரைக்க :
சின்ன வெங்காயம்-5-7 உரித்தது
பூண்டு-3 பல் உரித்தது
தக்காளி-1 சிறியது
தனி மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி, அல்லது சிவப்பு மிளகாய் -3, 5
உப்பு-3/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2 தே .க
உ ழுந்து -1/2 தே .க
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை :
கத்திரிக்காயை நீல வாக்கில் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அரைக்கும் பொருட்களை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நிறம் மாறும்வரை நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து, வறுத்து எடுக்கவும். வதங்கும் போதே மணம் பிரமாதமாக இருக்கும்.
சுவையான கத்திரிக்காய் வறுவல் தயார்.

13515378_1128281927213416_1210247745_n

பால் பாயசம் / Paal / Milk Payasam

பால் பாயசம்:
எளிய சுவையான பால் பாயாசம் செய்வது மிகவும் சுலபம். ஆனால், நம்மில் பலர் இதை பெரிய வேலையாக நினைத்து செய்வதில்லை. குழந்தைகளும் இதை விரும்பி உட்கொள்ளுவார்கள். சத்தான பால், பாதாம், முந்திரி என அனைத்து சிறப்புகளும் உள்ளடங்கியது பால் பாயசம்!!! இன்றே செய்து தாருங்கள்.

 

பால் பாயசம் / Paal / Milk Payasam
பால் பாயசம் / Paal / Milk Payasam

செய்யத்தேவையான பொருட்கள் :
கெட்டியான பால்-1 லிட்டர, மில்க்மைட் 2 மேஜைக்கரண்டி சேர்த்துக்கொள்ளலாம் சுவை கூடுதலாக இருக்கும்.
சர்க்கரை-50கிராம்
பச்சரிசி-1/4 கோப்பை
பாதாம் பருப்பு -5
ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி
முந்திரி திராட்சை -2 மேஜைக்கரண்டி
நெய் -1 மேஜைக்கரண்டி
குங்குமப்பூ சிட்டிகை
செய்முறை:
1. பச்சரிசியையும், பாதாம் பருப்பையும், 1 /2 மணிநேரம் ஊற வைக்கவும் ,பிறகு மிக்சியில் குருணையாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

13275838_1104853019556307_218735044_n
2. முந்திரி திராட்சையை 1 தேக்கரண்டி நெய்யில் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
3. அரைத்த அரிசியை, பாலில் கலந்து அடுப்பில் வைத்து இளம் தீயில் கைவிடாது கிளறவும்.
4.கலவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
5.நன்கு ஒன்று சேர்ந்து கொதிக்கும்போது, மில்க்மைட், வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூமற்றும் ஏலக்காய்தூள் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான நாவூறும் பால் பாயசம் சில நிமிடங்களில் தயார்.

கோழி மிளகாய் வறுவல் / Chicken milagai Varuval

 கோழி மிளகாய் வறுவல்:

இது ஒரு வறுவல் வகையைச்சேர்ந்தது 
அசைவப்பிரியர்களுக்கு ஞாயிறு என்றாலே அசைவம் செய்வது ஒரு சிறப்பாயிற்று. இந்த வகையில் இங்கு உங்களுக்காக மிகவும் சுவையான கோழி மிளகாய் வறுவல் செய்வது எப்படி என்று பகிர்ந்துள்ளேன், எனது தாயிரிடம் இருந்து நான் கற்ற எளிதான சமையல் வகையில் இந்த சுவையான கோழி மிளகாய் வறுவல், இது ஆட்டுக்கறி மற்றும் கொழிக்கறியிலும் செய்யலாம். . இதில் நாம் சேர்க்கும் மசாலா பொருட்கள் குறைவு வரமிளகாயுடன் கறியை நன்கு வதக்கி செய்வதால் இதன் சுவை தனிச்சிறப்பு, அற்புத சுவை  மிளகு ரசம்- உப்புக்கறி கலவை.

Uppukkari
Uppukkari

செய்யத்தேவையான பொருட்கள்:
கோழிக்கறி-1/2 கிலோ
வரமிளகாய்-10 அல்லது 15
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
இஞ்சி-பொடியாக நறுக்கியது 1
பூண்டு-5 பல்
சின்ன வெங்காயம்- 10
கறிவேப்பிலை-1 கொத்து
செய்முறை:
1. கறியை சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமாக கழுவவும் .
2. சுத்தம் செய்த கறித்துண்டுகளை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வைக்கவேண்டும் .
3. வரமிளகாயை சிறு துண்டுகளாக கத்தரிகோல் கொண்டு வெட்டி வைத்துக்கொள்ளவும்.
4.வானலியில் எண்ணெய் காயவைத்து, வரமிளகாய் சேர்த்து வதக்கவும், அதன் விதைகள் பொன்னிறமாகும்வரை மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்.
5. நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
6. இப்போது உப்பு மஞ்சள் சேர்த்த கோழிக்கறியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும், பிறகு உடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

13227979_1101422903232652_1668508870_n
7. வரமிளகாய் தக்காளி இரண்டும் தன் தோல் தனித்து வரும்வரை மிதமான தீயில் வதக்க வேண்டும் அதுவே இந்தக்கறியின் தனிச்சிறப்பு. (கவனமாக மிதமான தீயில் வதக்கவும்).
8. மிளகாத்தூள், மல்லித்தூள், ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கறியைமென்மையாக வேக விடவும்.

13219683_1101422883232654_1172750759_n
9 பிறகு நீர் வற்றி வரும் வரை வறுத்து மேலே சிறிது கறிவேப்பிலை தூவி மணக்க, மணக்க சூடாக பரிமாறவும்.

13231124_1101422876565988_572468931_n

கோழி மிளகாய் வறுவல்
கோழி மிளகாய் வறுவல்

சீம்பால் / Seempaal

சீம்பால் :

For English please click link:    http://wp.me/s1o34t-seempal

சீம்பால் :
சுவையான நேர்த்தியான ஒரு இனிப்பு வகை சீம்பால். மாடு கன்று ஈன்ற உடன் சுரக்கும் பால் சீம்பால், இந்தப்பால் கொண்டு செய்யப்படும் இனிப்பு சீம்பாலாகும். சுரக்கும் அனைத்து பாலும் இளங்கன்றால் உட்கொள்ள இயலாது, அச்சமயம் எஞ்சிய பாலை இவ்வாறு பயன்படுத்தலாம்.

சீம்பால்
சீம்பால்

செய்யத்தேவையான பொருட்கள்:
சீம்பால்-1 லிட்டர்
வெல்லம் – 1 ஆச்சு அல்லது 2 மேஜைக்கரண்டி
ஏலக்காய் பொடி -1/4 தேக்கரண்டி
செய்முறை:
பாலை நன்கு காய்ச்சவும். இடைவிடாது கிளறவும் பால் தானாக திரிந்து வரும்,
பிறகு நீர் வற்றி முக்கால் பாகமாக வரும் சமயம் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறவும்.
ஏலக்காய் போடி சேர்த்து, சிறிது நீர்த்தன்மை இருக்கும் பொது அடுப்பிலிருந்து அகற்றி விடவும்.
அதிகம் வேகும் போது மிருதுவாக இருக்காது.
சுவையான சீம்பால் ரெடி.

13180886_1099591830082426_164429397_n

மாங்காய் தொக்கு / Mango Thokku

மாங்காய் தொக்கு :
சத்து நிறைந்த மாங்காய், பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும் அது மாங்காயின் குணம்.”மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்” என்பது பழமொழி. உணவில் பல விதமாக இந்த மாங்காயைப் பயன்படுத்தலாம். மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான். இவ்வகையில் சுவையான மாங்காய் தொக்கு இன்று காண்போம்.

20160429085953
தொக்கு செய்யத்தேவையான பொருட்கள்:
மாங்காய்-2
உப்பு -2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 மேஜைக்கரண்டி
வெந்தயத்தூள்-1 1/2 தேக்கரண்டி,. 1 தேக்கரண்டி வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
சுத்தமான நல்லெண்ணெய் -4 மேஜைக்கரண்டி
பொடித்த வெல்லம் -1 1/2 மேஜைக்கரண்டி
கடுகு-1 தேக்கரண்டி
பெருங்காயம் -1/2 தேக்கரண்டி
செய்முறை:
மாங்காயை நன்கு கழுவி சுத்தமான துணியால் துடைத்து பின்னர் துருவிக்கொள்ளவும்.

20160429083655
வானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளிக்கவும், பெருங்காயம் சேர்க்கவும்.

20160429083933
துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும்.

20160429084217
மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள், உப்பு, வெந்தயப்பொடி மற்றும் வெல்லம் சேர்த்து இளந்தீயில் வதக்கவும்.

20160429084723
மாங்கை நன்கு ஒன்று சேர்ந்து எண்ணெய் விட்டு வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
நன்கு ஆரிய பின்னர் கொள்கலனில் வைத்து பயன்படுத்தவும்.

Mango ThokkuMango Thokku
Mango ThokkuMango Thokku

சைவ ஆம்லேட் / Vegetarian omelette

சைவ ஆம்லேட் – Vegetarian omelette :

For recipe in English click,   http://wp.me/p1o34t-be

முட்டையில்லாத ஆம்லெட் !!! ஆச்சரியமாக உள்ளதா? உண்மை, சுவையோ மாற்றமில்லை.
விருந்தாளி சுத்த சைவம், என்ன சிறப்பாக செய்வது என்று குழப்பமா? இதோ உங்களை மகிழ்விக்க ஒரு அற்புதமான, நொடியில் தயாரிக்க கூடிய செய்முறை சைவ ஆம்லேட். ஆரோக்கியமானது, கீரையின் சத்து நிறைந்தது, சுவை மிகுந்தது செய்து பாருங்கள்.

சைவ ஆம்லெட்
சைவ ஆம்லெட்

தேவையான பொருட்கள்:
கீரை முளைக்கீரை-1/2 கட்டு (அல்லது 1 கோப்பை இறுக்கமாக அளந்துகொள்ளவும்)
சின்ன வெங்காயம்-15, அல்லது ஒரு பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்-4
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
கடலை மாவு – 5- 7 மேசைக்கரண்டி
பால்-2 தேக்கரண்டி
மிளகாய்ப்போடி-1/4 தேக்கரண்டி
செய்முறை:

1. ஒரு வாயகன்ற பத்திரத்தில் கடலை மாவு, உப்பு, பால், மஞ்சள்தூள், மிளகாய்ப்பொடி, சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
2. சின்ன வெங்காயம் தோல் உரித்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும். (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ).
3. முளைக்கீரை நன்கு கழுவி நீர் வடித்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.( 1கோப்பை இறுக்கமாக அளந்துகொள்ளவும்)
4. பச்சை மிளகாய், சின்னவெங்காயம், கீரை எல்லாவற்றையும் கரைத்த மாவில் சேர்த்துக்கலக்கவும்.
5. தோசைக்கல்லை காய வைத்து சிறிய அம்லேட்டாக ஒரு கரண்டி அளவு மாவெடுத்து வட்டமாக ஊத்தி, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சுற்றிலும் விடவும்.
6. திருப்பி மறுபக்கம் வேக வைத்து எடுக்கவும், சைவ ஆம்லேட் தயார் சூடாக பரிமாறி மகிழவும்.

குறிப்பு:
1. வெங்காயம், கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மாவை சிறிது நீர்க்க கரைத்துக்கொள்ளவும் இல்லாவிட்டால் அடை போல் ஆகிவிடும்

கவுணி அரிசி

கவுணி அரிசி:

கவுணி அரிசி இனிப்பு வகையைச்சேர்ந்தது, பெயர் இதன் மூலப் பொருளைக்கொண்டுள்ளது.தனித்துவம் வாய்ந்த இந்த கவுணி அரிசி மிகவும் சுவையானது, செய்முறையும் மிகவும் எளிதானது. ஒரு சமயம் நகரத்தார்கள் சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கு கொண்டு விற்கச்சென்றனர் , சிலர் தனது தொழில் துறை சம்பந்தமாக அங்கு தங்கி வந்தனர் அச்சமயம் சுவை கண்ட அங்குள்ள சிறப்பு உணவு  முறைகளை தனது குடும்பத்தினருக்காக கொண்டு வந்தனர் இவ்வாறு கடல்கடந்து வந்த சிறப்பு உணவு தான் இந்த கவுணி அரிசி.

தென்கிழக்கு ஆசியாவில் சாகுபடி செய்யப்படும் இந்த அரிசி மலேசியா மற்றும் சிங்கபூரில் தரமானதாக கிடைக்கப்பெறலாம். வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த உணவுகளில் இதுவும் குறிப்பிடத்தக்கது. இந்த அரிசி பெருமபாலும் செட்டிநாட்டு பகுதிகளில் பயிரிடப்பட்டடு விற்கப்படுகிறது. இந்த அரிசி ஓட்டும் தன்மை கொண்டது. சுவை மிகுந்த இந்த அரிசியின் ஊதா நிறம் இயற்கையானது .

கவுணி அரிசி
கவுணி அரிசி

செய்யத்தேவையான பொருட்கள் :
கவுணி அரிசி-1 கோப்பை
சர்க்கரை-1 கோப்பை
தேங்காய் துருவியது-3 மேஜைக்கரண்டி
நெய்-1 மேஜைக்கரண்டி

11823909_932415956800015_190802851_n

செய்முறை :
1. அரிசியை கல் குருணை நீக்கி நன்கு கழுவி 6 முதல் 8 மணிநேரம் ஊர வைக்கவும் .
2. மறுநாள் குக்கரில் 4 அலல்து 5 விசில் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.
3. சூடு குறைந்ததும் நன்கு மசித்துவிட்டு இளம் சூட்டில் சர்க்கரை கலந்து ,தேங்காய்,நெய் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.