செட்டிநாட்டு விருந்து / Chettinad feast

வாழையிலை மதிய விருந்து

வந்தாரை கையமர்த்தி, தலை வாழை இலை போட்டு வகையாய் வெஞ்சனம், வயிறு நிறைய சாப்பாடு அன்போடு உபசரித்தல் இது நமது பாரம்பரியம்.

செட்டிநாட்டு விருந்து / Chettinad feast
செட்டிநாட்டு விருந்து / Chettinad feast

 இலையில் இடமிருந்து வலமாக
1.உப்பு

2.வர்கண்டம்:
அப்பளம்
வத்தல்
3. வறுவல்/ சாப்ஸ்
வடை
கோலா உருண்டை
பக்கோடா
வாழைக்காய் வறுவல்
உருளைக்கிழங்கு வறுவல்
4. வெஞ்சனம் :
கூட்டு
மசியல்
துவட்டல்
மண்டி
பொரியல்
பச்சடி
கோலா / உசிலி
5. துணை சாதம் / பிரியாணி :
6.சூப் :
7.பருப்பு, நெய் / மிளகுப்பொடி, நெய் :
8.சாம்பார் :
9.கெட்டிக்குழம்பு / காரக்குழம்பு :
10.தண்ணிகுழம்பு / இளங்குழம்பு :
11. ரசம்: 
12.மோர் / தயிர்
13.பாயசம்:

14. ஊறுகாய் 

Advertisements

சைவ மட்டன் பிரியாணி/ Soya Biryani

சைவ மட்டன் பிரியாணி:
சுவையான பிரியாணியில் பல வகையுண்டு, சைவ மட்டன் பிரியாணி சோயா துண்டுகளால் தயாரிக்க படுகிறது. சோயா உயர் புரத மற்றும் பல வகை உணவுகள் சைவ மற்றும்அசைவ மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

Saiva mutton Biryani
Saiva mutton Biryani

செய்யத்தேவையான  பொருட்கள்:
சோயா- 1/2 கோப்பை,ஊறவைத்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பெரிய வெங்காயம் – 1
தக்காளி -2
பச்சை மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
கறி வேப்பிலை-1 கொத்து
மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
எண்ணெய்- 3 மேஜைக்கரண்டி
நெய்-1 மேஜைக்கரண்டி
பாசுமதி அரிசி-2 கோப்பை
தேங்காய்ப்பால் அல்லது தயிர்-1/2 கோப்பை
தாளிக்க:
முந்திரி-5 ,7
பட்டை-1 அங்குலம் -2
கிராம்பு-2
பிரியாணியிலை-3 அங்குலம்
ஏலக்காய்-2
கல்பாசிப்பூ-1
ஜாதிப்பத்திரி-1 அங்குலம்
மிளகு-1/4 தேக்கரண்டி

img_3756
அரைக்க:
புதினா,மல்லி இலை 1/2 கோப்பை
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம் -1தேக்கரண்டி
பச்சை மிளகாய்-3
செய்முறை:
1அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்
2. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தாளிதம் செய்யவும்.
3. இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. பின்னர், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் ஊறவைத்து நறுக்கிய சோயா சேர்த்து வதக்கவும்.

img_3759நன்கு வதங்கிய பின்னர்,அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.                                                                                                                                             5.தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தண்ணீர் 2 கோப்பை  மற்றும் ஊறவைத்த அரிசி, சேர்த்து கலந்து, கொதித்ததும் குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்.

img_3763img_3764
மல்லி இல்லை தூவி, முந்திரி நெய்யில் வறுத்து அதையும் தூவி பரிமாறவும்.
தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம்.                                                                                                                                                   6. சுவையான .சைவ மட்டன் பிரியாணி ரெடி.

img_3769

கற்கண்டு பாலண்ணம் / கல்கண்டு பொங்கல்- Sugar candy rice

கற்கண்டு பாலண்ணம் / கல்கண்டு பொங்கல் :

Sugar Candy Pongal, Recipe in English please click link:  http://wp.me/p1o34t-u9
மென்மையான, வெண்ணை போன்ற சுவையும், நிறமும் கொண்ட கல்கண்டு சாதம் பெரும்பாலும் கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுவது நமது வழக்கம். செட்டிநாட்டு விருந்துகளிலும் இது சிறப்பாக பரிமாறப்படும். குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த கல்கண்டுபாலண்ணம் அன்றாடம் செய்து கொடுக்கலாம். இதில் பால், பருப்பு, கல்கண்டு, ஏலக்காய், முந்திரி போன்ற சுவையான, மற்றும் சத்து நிறைந்த பொருட்கள் உள்ளடங்கியதால், இது ஆரோக்கியம் நிறைந்த ஒரு முழு உணவாகும்.

 

 கல்கண்டு பொங்கல்- Sugar candy rice
கல்கண்டு பொங்கல்- Sugar candy rice

செய்யத்தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 1 கோப்பை
கல்கண்டு – 1 கோப்பை (பொடித்தது)
பாசிப்பருப்பு -1/4 கோப்பை ( மலர வேகவைத்தது) விருப்பத்திற்கேற்ப பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்.
பால் -1 1/2 கோப்பை
தண்ணீர்-1 1/2 கோப்பை
முந்திரி அல்லது பாதாம்-5 அல்லது 9
ஏலக்காய் பொடி -1/2 தேக்கரண்டி
நெய்-2 மேஜைக்கரண்டி
செய்முறை விளக்கம்:
1. பாசிப்பருப்பை 1 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. அரிசியை நன்கு கழுவி, மேலே குறிப்பிட்டுள்ள பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 அல்லது 5 விசில் குக்கரில் வேகவிடவும்.
3. சூடு தணிந்ததும், பொடித்த கல்கண்டு, வேகவைத்த பருப்பு சேர்த்து கலக்கவும், அடிபிடிக்காமல், இளந்தீயில் வைத்து கிளறிவிடவும்.

13936791_1186791528029122_23500583_n
4. நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து கலவையுடன் சேர்க்கவும், ஏலக்காய் பொடி சேர்த்து ஒன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

14081449_1186791461362462_327875057_n

பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry

பூக்கோசு மிளகு வறுவல் :

Cauliflower pepper fry  recipe in English:  http://wp.me/p1o34t-5Y

பூக்கோசு (காலிபிளவர் ) சுவையான பூக்கோசு மிளகு வறுவல் அனைவருக்கும் ஏற்றது, செய்முறையும் எளிமையானது. காரக்குழம்பு, சாம்பார் போன்றவற்றிற்கு இணையாகும். உடன் தயாரித்த மிளகுத்தூள் இதன் சுவைச்சிறப்பு.

பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry
                                   பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry

 செய்யத்தேவையான பொருட்கள்:
பூக்கோசு -500 கிராம்
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-1
மிளகுத்தூள்-1 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
கடுகு-1/2
கறிவேப்பிலை-1 கொத்து
மிளகுத்தூள்:
மிளகு-1 தேக்கரண்டி
சீரகம் -1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு -1 1/2 தேக்கரண்டி
மேலேகூறிப்பிட்டுள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து, சூடு ஆறியது பொடித்துவைத்துக்கொள்ளவும்.

13900984_1166014326773509_160560941_n
செய்முறை:
பூக்கோசை வெந்நீரில் உப்பு சேர்த்து அதில் போட்டு 3 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் நீரை வடித்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
மேல்கூறியபடி மிளகுத்தூள் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பிறகு பூக்கோசு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில், சிறிது நீர் தெளித்து, மூடிவைத்து வேகவிடவும்.
மிதமான தீயில், பொறுமையாக வேகவைத்தால் நிறம் வெண்மையாக இருக்கும்.

அல்லது பூக்கோசை ஆவியில் வேகவைத்தும் எடுத்துக்கொள்ளவும்.
பூக்கோசு நன்கு வெந்ததும் பொடித்துவைத்துள்ள மிளகு பொடியை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry
                                               பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry

கத்திரிக்காய் வறுவல் / Brinjal fry

கத்திரிக்காய் வறுவல் :
ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த, அதிக அளவில் நாம் பயன்படுத்தும் கத்திரிக்காயில் ஒரு எளிய சுவையான வறுவல். இது ரசம், சாம்பார், தயிர் சாதம் என எல்லாவற்றிற்கும் ஏற்றது.
கத்திரிக்காய் வறுவல்: எண்ணெய் குறைவு, சுவையோ அதிகம், செய்வது எளிது.

கத்திரிக்காய் வறுவல்
கத்திரிக்காய் வறுவல்

செய்யத்தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்-1/2 கிலோ, பிஞ்சாக இருந்தால் நல்லது.
அரைக்க :
சின்ன வெங்காயம்-5-7 உரித்தது
பூண்டு-3 பல் உரித்தது
தக்காளி-1 சிறியது
தனி மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி, அல்லது சிவப்பு மிளகாய் -3, 5
உப்பு-3/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2 தே .க
உ ழுந்து -1/2 தே .க
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை :
கத்திரிக்காயை நீல வாக்கில் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அரைக்கும் பொருட்களை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நிறம் மாறும்வரை நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து, வறுத்து எடுக்கவும். வதங்கும் போதே மணம் பிரமாதமாக இருக்கும்.
சுவையான கத்திரிக்காய் வறுவல் தயார்.

13515378_1128281927213416_1210247745_n

அன்னாசிப்பழ கேசரி / Pineapple kesari

அன்னாசிப்பழ கேசரி:

For English recipe please click:   http://wp.me/p1o34t-16H
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை இந்தக் கேசரி, சில நிமிடங்களில் தயார் செய்து பரிமாரிவிடலாம். உள்ளடங்கும் பொருட்களும் அன்றாடம் நம் அடுப்பங்கரையில் உபயோகப்படுத்துவது என்பதால் நினைத்ததும் தயங்காது செய்துவிடலாம். கேசரியில் பல வகை உண்டு, முறை ஒன்றே மூலப்பொருள்தான் மாறுபடும். இந்த வகையில் ஒரு சிறிய மாற்றமாகவும், மாறுபட்ட சுவையுடன் இந்த அன்னசிப்பழ கேசரி தயாரிப்போம்.

அன்னாசிப்பழ கேசரி
அன்னாசிப்பழ கேசரி

செய்யத்தேவையான பொருட்கள்:
வெள்ளை ரவை -1 கோப்பை
அன்னாசிப் பழம் நறுக்கியது-1 கோப்பை
சீனி-1 1/4 கோப்பை
ஏலக்காய் பொடி -1/4 தேக்கரண்டி
நெய்-3 மேஜைக்கரண்டி
மஞ்சள் வண்ணப் பொடி ஒரு சிட்டிகை
முந்திரி, திராட்சை 2 மேஜைக்கரண்டி

செய்முறை:
1. வாணலியில் நெய் சூடேற்றி முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
2. அதே நெய்யில் நறுக்கிய அன்னசிபழத்தை 3 நிமிடம் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

images
3. பின்னர் இன்னும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து ரவையை 5 நிமிடம் வரை கருகிவிடாமல் மிதமான தீயில் கவனமாக சற்று நிறம் மாறும் வரை வறுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
4. ஒரு பானில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும், கொதித்ததும் வண்ணப் பொடி, ஒரு மேஜைக்கரண்டி நெய் மற்றும் வறுத்த அன்னாசிப்பழத்தை சேர்க்கவும், பின்னர் வறுத்து ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
5. ரவை வெந்ததும் தீயைக் குறைத்துக்கொள்ளவும், அளந்து வைத்துள்ள சீனியை சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிவிடவும்.
6. நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும்.
7. வறுத்த முந்திரி, திரட்சி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான அன்னாசிப்பழக் கேசரி தயார்.

பால் பாயசம் / Paal / Milk Payasam

பால் பாயசம்:
எளிய சுவையான பால் பாயாசம் செய்வது மிகவும் சுலபம். ஆனால், நம்மில் பலர் இதை பெரிய வேலையாக நினைத்து செய்வதில்லை. குழந்தைகளும் இதை விரும்பி உட்கொள்ளுவார்கள். சத்தான பால், பாதாம், முந்திரி என அனைத்து சிறப்புகளும் உள்ளடங்கியது பால் பாயசம்!!! இன்றே செய்து தாருங்கள்.

 

பால் பாயசம் / Paal / Milk Payasam
பால் பாயசம் / Paal / Milk Payasam

செய்யத்தேவையான பொருட்கள் :
கெட்டியான பால்-1 லிட்டர, மில்க்மைட் 2 மேஜைக்கரண்டி சேர்த்துக்கொள்ளலாம் சுவை கூடுதலாக இருக்கும்.
சர்க்கரை-50கிராம்
பச்சரிசி-1/4 கோப்பை
பாதாம் பருப்பு -5
ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி
முந்திரி திராட்சை -2 மேஜைக்கரண்டி
நெய் -1 மேஜைக்கரண்டி
குங்குமப்பூ சிட்டிகை
செய்முறை:
1. பச்சரிசியையும், பாதாம் பருப்பையும், 1 /2 மணிநேரம் ஊற வைக்கவும் ,பிறகு மிக்சியில் குருணையாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

13275838_1104853019556307_218735044_n
2. முந்திரி திராட்சையை 1 தேக்கரண்டி நெய்யில் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
3. அரைத்த அரிசியை, பாலில் கலந்து அடுப்பில் வைத்து இளம் தீயில் கைவிடாது கிளறவும்.
4.கலவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
5.நன்கு ஒன்று சேர்ந்து கொதிக்கும்போது, மில்க்மைட், வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூமற்றும் ஏலக்காய்தூள் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான நாவூறும் பால் பாயசம் சில நிமிடங்களில் தயார்.