கேழ்வரகு/ராகி அல்வா/Ragi Halwa

கேழ்வரகு/ராகி அல்வா :


கேழ்வரகு சிறப்பு அறிவோம்

கேழ்வரகு உண்பதால் ஏற்படும் நன்மைகள்


ஊட்ட உணவு கேழ்வரகில் “புரதம், நார்ச்சத்து, மக்னிசியும்” போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. விரைவில் உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். கேழ்வரகில் இருக்கும் “ட்ரிப்டோபான்” எனப்படும் பொருள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.
உடல் சூடு மனிதர்களின் உடல் எப்போதும் சராசரியான உடல் வெப்பத்தை கொண்டிருக்க வேண்டும். கோடை காலங்களில் எல்லா மனிதர்களுக்கும் உடல் சூடு அதிகரித்து, அதிகம் வியர்த்து உடலின் சில அத்தியாவசிய சத்துக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடுகிறது.கேழ்வரகு கூழ், களி போன்றவற்றை சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும்.
பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. கேழ்வரகில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்
தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். தோல் பளபளப்பு பெற்று இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது.

Halwa:
கேழ்வரகில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
கேழ்வரகு அல்வா மிக்க சுவையான பல சிறப்பு அம்சம் கொண்ட அல்வா அதிக நெய் இல்லாமல் தேங்காய்ப்பாலின் சுவையும் மனமும் கலந்த ஒரு இனிப்பு வகை வெல்லம் சேர்த்து செய்வதால் இன்னும் இரும்புச்சத்து அதிகமாக கொண்டது சுவை தைரியமாக செய்து அசத்துங்கள்.


பொருட்கள்:
கேழ்வரகு மாவு-1 கோப்பை
தேங்காய் பால் -1 கோப்பை கெட்டியாக
தண்ணீர்-2 கோப்பை (இரண்டு பால் ஒரு பங்கு தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்)
வெல்லம்-1 1/4 கோப்பை
நெய்-2 மேஜைக்கரண்டி
முந்திரி- 10
செய்யும் முறை :
கேழ்வரகு மாவை 1 மணி நேரம் இரண்டு கோப்பை தண்ணீரில் ஊறவைத்து, மெல்லிய துணியால் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். (ராகி பால் )


வானலியில் 1 மேஜை கரண்டி நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
கெட்டியான தேங்காய் பால் மற்றும் கேழ்வரகு மாவை ஒன்றாக கலந்து அதே வானலில் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். தீ மிதமானதாக வைத்து கை விடாமல் கிளறவும்.


நல்ல கெட்டியாக வரும் சமயம் வெல்லம் சேர்த்து கிளறவும். (வெல்ல ம் 1/4 கோப்பை நீரில் அடுப்பில் வைத்து கரைத்தும் சேர்க்கலாம்).


இடையில் நெய் சேர்த்து நன்கு கிளறவும் 10 நிமிடம் வரை அப்படியே கிளறவும், கண்ணாடி போல் நன்கு அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, வறுத்த முந்திரிபருப்பு தூவி பரிமாறவும்.


தேங்காய் பாலோடு சேர்த்து கிண்டுவதால் நல்ல தேங்காய் பால் மனம் அசத்தலாக இருக்கும் நெய்யும் குறைவாகவே சேர்க்கலாம்.