சர்க்கரைவள்ளி கிழங்கு மிளகு வறுவல்

சர்க்கரைவள்ளி கிழங்கு மிளகு வறுவல் :
சத்து மிகுந்த சர்க்கரைவள்ளி கிழங்கு தற்சமயம் அதிகமாக கடைகளில் காண முடிகிறது இதன் மருத்துவ குணங்கள் கருதி நாம் நமது உணவில் சேர்த்து பயன்பெறும் வகையில் சுலபமான சமையல் குறிப்புகளுடன் சுவையான மிளகு வருவல். உண்ண, உண்ண தெவிட்டாத சுவை சமைத்து பாருங்கள்.

சர்க்கரைவள்ளி கிழங்கு மிளகு வறுவல்

செய்முறை:
சர்க்கரை வள்ளி கிழங்கை கழுவி வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
மூன்று நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் காயவைத்து வர மிளகாய்,கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக்கொள்ளவும்.
கறிவேப்பிலை சேர்த்து சர்க்கரைவள்ளி கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும் .
இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்.
சுவையான மொறு மொறு சர்க்கரைவள்ளி கிழங்கு வறுவல் ரெடி .

Advertisements

செட்டிநாட்டு விருந்து / Chettinad feast

வாழையிலை மதிய விருந்து

வந்தாரை கையமர்த்தி, தலை வாழை இலை போட்டு வகையாய் வெஞ்சனம், வயிறு நிறைய சாப்பாடு அன்போடு உபசரித்தல் இது நமது பாரம்பரியம்.

செட்டிநாட்டு விருந்து / Chettinad feast
செட்டிநாட்டு விருந்து / Chettinad feast

 இலையில் இடமிருந்து வலமாக
1.உப்பு

2.வர்கண்டம்:
அப்பளம்
வத்தல்
3. வறுவல்/ சாப்ஸ்
வடை
கோலா உருண்டை
பக்கோடா
வாழைக்காய் வறுவல்
உருளைக்கிழங்கு வறுவல்
4. வெஞ்சனம் :
கூட்டு
மசியல்
துவட்டல்
மண்டி
பொரியல்
பச்சடி
கோலா / உசிலி
5. துணை சாதம் / பிரியாணி :
6.சூப் :
7.பருப்பு, நெய் / மிளகுப்பொடி, நெய் :
8.சாம்பார் :
9.கெட்டிக்குழம்பு / காரக்குழம்பு :
10.தண்ணிகுழம்பு / இளங்குழம்பு :
11. ரசம்: 
12.மோர் / தயிர்
13.பாயசம்:

14. ஊறுகாய் 

கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa

கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa:

செட்டிநாட்டு சிறப்பு மிக்க கவுனிஅரிசி இப்போது அல்வா சுவையோடு உங்கள் விருந்து சிறக்க, நா சுவைக்க.

சத்து நிறைந்த கவுனி அரிசி உடல் சூட்டை தவிர்ப்பதோடு, நார் சத்து மிகுதியானதால் மலசிக்கல் விலகும். கருப்பு அரிசி ஒரு பசையம் இல்லாத தானியமாகும். ஒவ்வாமை மற்றும் செலியக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்ல மாற்றாகும்.
உடலில் உள்ள குளுக்கோஸ் உறிஞ்சுதலில் உதவுகிறது, இந்த அரிசி தவிடு நிறைந்த நார்சத்து கொண்டிருக்கும், நீரிழிவு நோயை சமாளிக்க உதவுகிறது. இது வகை 2 நீரிழிவு ஆபத்தை குறைக்கிறது.

கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa:
கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa:

செய்யத்தேவையான பொருட்கள் :
கவுனி அரிசி -1 கோப்பை
சீனி – 1 1/4 கோப்பை
ஏலக்காய் -3
நெய் – 1/2 கோப்பை
முந்திரி 10
திராட்சை 1 மேஜைக்கரண்டி
கவுனி அரிசியை நன்கு ஊறவைத்து நல்ல விழுதாக அரைத்துக்கொள்ளவும்.


வானலியில் சிறிது நெய் காய வைத்து , முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அதே வானலியில் அரைத்த கவுனிஅரிசி, தண்ணீர் 2 கோப்பை சேர்த்து கிளறவும்

கெட்டியான பிறகு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.


நன்கு திரண்டு, உருண்டு வரும் சமயம் முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.


நெய்விட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம் அடுப்பை விட்டு இறக்கி ஆறவிடவும்.
சூடான கவுனிஅரிசி ஆல்வா தயார்.

 

கூட்டுக்காய் பிரட்டல்/ Mixed Vegetable Masala

கூட்டுக்காய் பிரட்டல்:

English recipe please click link:  http://wp.me/p1o34t-1gK
மதிய உணவின் ஆர்வத்தை தூண்டுவது அதன் துணை சேர்க்கையான காய்கறிதான். காய்கறியில் தான் எத்துணை வகை! கணக்கிலடங்கா கறிவகையும் அதன் சுவையும் அருமை. பிரட்டல், துவட்டல்,கூட்டு, பொரியல்
பச்சடி, மண்டி, கோலா இன்னும் புதிய கண்டுபிடிப்புகள். நம் நாக்கின் சுவை அரும்புகள் மலரும் வண்ணம் சமைத்து மகிழ்வோம்.
அசத்தும் ருசிச்சிறப்பு இந்த கூட்டுக்காய் பிரட்டலுக்கு உண்டு, சுவை மட்டுமன்றி அனைத்து காய் சேர்க்கையின் சத்தும் கலந்தது இதன் முக்கியச்சிறப்பு. சிறந்த சேர்க்கை ரொட்டி அல்லது சாதம், ரசம்.

கூட்டுக்காய் பிரட்டல்/ Mixed Vegetable Masala
கூட்டுக்காய் பிரட்டல்/ Mixed Vegetable Masala

செய்யத்தேவையான பொருட்கள்:
காய் வகை- 500 கிராம்
காலிஃளார் , பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீட்ரூட்,குடைமிளகாய் மற்றும் காரட்.
வெங்காயம் -1
தக்காளி -1
இஞ்சிபூண்டு விழுது -2 தேக்கரண்டி
மசாலா பொடி-1 தேக்கரண்டி
மிளகாய் பொடி-2 தேக்கரண்டி
உப்பு -1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
சோம்பு -1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
செய்முறை:
காய் வகையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும், இரண்டு நிமிடத்தில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெட்டிய உருளைக்கிழங்கு,பீட்ரூட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்னர் இதர காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அல்லது அனைத்து காய்களையும் பக்குவமாக வேகவைத்தும் சேர்க்கலாம்.
உப்பு, மசாலாபொடி, மிளகாய்ப்பொடி சேர்த்து கிளறவும், 1/2 கோப்பை தண்ணீர் சேர்த்து
மூடி இட்டு பூப்போன்று வேகவிடவும்.
தேவைக்கேற்ப தேங்காய்ப்பால் அல்லது 2 மேஜைக்கரண்டி தேங்காய், சீரகம் அரைத்த விழுது சேர்த்து சுருளவிடவும், இது சுவைகூட்டுவதோடு விருந்துக்கு அளவும் அதிகமாகும்.

சத்து நிறைந்த கூட்டுக்காய் பிரட்டல் தயார்

சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack

சிறுதானிய பொரி உருண்டை:

சிறு தானியம் ஒரு பிரபலமான உணவாக பெருகிவரும் இக்காலத்தில் அதன் பல்வேறு செய்முறைகளும் பகிரக்காண்கிறோம் அந்த வகையில், இது ஒரு வித்யாசமான பயனுள்ள குறிப்பாக இங்கு பதிவிடுகிறேன். சிறு தானியத்தை பொரியாக்கி, பொரியை மாவாக்கி, நெய், சர்க்கரை சேர்த்து உருண்டையாக்கி சத்து நிறைந்த ஒரு தின்பண்டமாக குடும்பத்தோடு சுவைத்து மகிழ்வீர்.

பிள்ளையார் நோம்புக்கு பொரித்த பொரி என்னசெய்வது? வீணாக்காமல் செய்தால் பிரமாதமான சுவையோடு சத்தான பொரி மாவுருண்டை

சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack
சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snackசிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack

செய்முறை:
கம்பு -100கிராம்
சோளம் -100கிராம்
அவல் -100கிராம்
தினை -100கிராம்
வரகு -100கிராம்
நெய்-250 அல்லது 300 மில்லி
வெல்லம் / சர்க்கரை -300 கிராம் மாவாக பொடித்துக்கொள்ளவும்
கம்பு, சோளம் தினை,வரகு, அவல் இவற்றை தனித்தனியாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.


மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும்,
பொடித்த சர்க்கரையை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.


நெய்யை சூடு பண்ணி, கலந்த மாவை சேர்த்து இளம் சூட்டில் கிளறவும்.

கை பொறுக்கும் சூடு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சிறு உருண்டைகளாக உருட்டவும்
சிறுதானிய பொரி உருண்டை தயார்

சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack
சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack

 

கோதுமை பிரியாணி / Wheat Biryani

கோதுமை பிரியாணி:
நறுமணம் நிறைந்த மசாலாக்கலவை தான் பிரியாணியின் தனிச்சிறப்பு. பொதுவாக பிரியாணி என்றாலே அரிசியில் செய்யும் பிரியாணி தான் நினைவிற்கு வரும், மாறுதலாக நார்ச்சத்து நிறைந்த கோதுமை ரவை அல்லது புல்குர் வைத்து, அதே செய்முறைகொண்டு சுவையான செய்முறையில் செய்யலாம். காய்கறி,காளான் அல்லது கோழிக்கறி, அவரவர் விருப்பத்துக்கேற்ப செய்யலாம்.

கோதுமை பிரியாணி / Wheat Biryani
கோதுமை பிரியாணி / Wheat Biryani

செய்யத்தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை-1 கோப்பை
வெங்காயம்-1
தக்காளி-1
காய் வகைகள் -1 கோப்பை
உப்பு -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் -1 கோப்பை
தண்ணீர்-2 கோப்பை
எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி
அரைக்க:
இஞ்சி-1 அங்குலம் துண்டு
பூண்டு-4 பல்
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் -3
மிளகு-1/4 தேக்கரண்டி
புதினா-1 கைப்பிடி
மல்லி இலை -1 கைப்பிடி
தாளிக்க:
எண்ணெய் -4 மேஜைக்கரண்டி
நெய் -1 மேஜைக்கரண்டி
லவங்கம்-3 அங்குலம்
பட்டை-1 அங்குலம்
கிராம்பு-3
ஏலக்காய்-1
கல்பாசிப்பூ
ஜாதிபத்திரி சிறிது
முந்திரி-5
செய்முறை:
1.”அரைக்க” பொருட்களை ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

2.காய்களை சுத்தம் செய்து வெட்டி வைத்துக்கொள்ளவும்.


3.கோதுமை ரவையை 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கைபொறுக்கும் சூடாக வறுத்துக்கொள்ளவும்.
4, வாயகன்ற பாத்திரத்தில் நெய்விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
5.எண்ணெய் ஊற்றி “தாளிக்க பொருட்களை” தாளிதம் செய்யவும்.
6. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
7. காய், காளான் அல்லது மட்டன் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும், பிறகு அரைத்த கலவை சேர்த்து வதக்கவும்.


8. நன்கு பச்சைவாடை மாறும் சமயம் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
9. தேங்காய்ப்பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
10. வறுத்த கோதுமை ரவை சேர்த்து கலக்கவும், மிதமான தீயில் மூடிவைத்து வேகவைக்கவும் அல்லது, 1 விசில் வரை விடவும்.


11. கொத்தமல்லி, புதினா, வறுத்த முந்திரி, நெய், எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி விட்டு, கிளறி சூடாக பரிமாறவும்.

 

தேங்காய் சாதம் / Coconut fried rice

தேங்காய் சாதம் :
உடனடி தயாரிப்பில் மிக எளிமையாகவும், குறுகிய நேரத்தில் சுவையாக மற்றும் ஆரோக்கியமாகவும் இந்த தேங்காய் சாதம் தயாரித்து விடலாம். தேங்காய் தேகத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியது, தோல் மெருகேற்றவும், வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறவும் உதவுகிறது.

தேங்காய் சாதம் / Coconut fried rice
தேங்காய் சாதம் / Coconut fried rice

செய்யத்தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் 2 கோப்பை
தேங்காய் துருவியது – 1 கோப்பை
உப்பு-1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு-1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு -1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை- 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு- 2 தேக்கரண்டி
வர மிளகாய்-3
கறிவேப்பிலை
செய்முறை:
1. ஒரு கோப்பை அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து, பாதி தேங்காய் பால், பாதி தண்ணீர், உப்பு சேர்த்து சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். விருப்பத்திற்கு ஏற்ப
(தேங்காய்ப்பால் சேர்க்காமல் வெறும் தண்ணீரிலும் வடிக்கலாம்)
2. வடித்த சாதத்தை ஆறவைக்கவும். இது கிளறும்போது சாதம் உடைந்துவிடாமல் இருக்க உதவும்.
3. வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, வரமிளகாய் தாளிதம் செய்யவும்.
4.முதலில் வேர்க்கடலை, பிறகு, கடலைப்பருப்பு, முந்திரி, உளுத்தம்பருப்பு, என ஒன்றொன்றாக சேர்த்து வறுக்கவும்.
5. பிறகு கறிவேப்பிலை, தேங்காய், மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்.(தேங்காய் அதிகநேரம் வதக்கினால் எண்ணெய் வாடை வரும் கவனம் தேவை)
6. வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.


சுவையும் மனமும் நிறைந்த தேங்காய் சாதம்  நொடியில் தயார்