செட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல்/Pumpkin Kooti Avithal

செட்டிநாட்டு பரங்கிக்காய் கூட்டி அவித்தல் :
சமையல் சுவையாக, எளிமையாக இருக்க வேண்டும், சில நிமிடங்களில் அற்புதமாக அசத்த வேண்டுமா? சமைப்பதே தெரியாமல் சில நிமிடத்தில் செய்திடலாம் இந்த பரங்கிக்காய் கூட்டி அவித்தல். இதன் பெயரே செய் முறை கூறும், எல்லாவற்றையும் ஒன்றாக கூட்டி அவித்தல் அவ்வளவுதான். இது செட்டிநாட்டில் பல விருந்துகளில் முக்கியமாக பரிமாறப்படும் ஒன்று குறிப்பாக, கோவில் வைபவ விருந்துகளில் இது செய்வதுண்டு பூசைக்கு வடிப்பது ஒரு முக்கிய அம்சம் அதில் இது கண்டிப்பாக இடம்பெறும் அனைவராலும் விரும்பி கேட்டு உண்ணும் கறி வகை

செய்முறை :
பரங்கிக்காய்-250 கிராம் தோல் நீக்காமல் பெரிய துண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
சின்ன வெங்காயம்-15, வெட்டி வைத்துக்கொள்ளவும்
பூண்டு-3, வெட்டி வைத்துக்கொள்ளவும்
தக்காளி-1, வெட்டி வைத்துக்கொள்ளவும்
கறிவேப்பிலை 2 கொத்து

புளி தண்ணீர்- 1 எலுமிச்சை அளவு எடுத்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் பொடி-3 தேக்கரண்டி (சாம்பார் மசாலா பொடி)

https://www.chettinadsnacksonline.com/collections/masala-podi/products/sambar-milagai-podi
சோம்பு, சீரகம் -1 தலா தேக்கரண்டி
வெந்தயம்-சிறிது
எண்ணெய் -3 தேக்கரண்டி
வெல்லம் சிறு துண்டு
செய்முறை:
இது தாளிக்கவோ, எண்ணெயில் வதக்கவோ, தேவையில்லை, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறவும், இது கெட்டியாக இருக்க வேண்டும் அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் பரங்கிக்காய், வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி, உப்பு, புளி தண்ணீர், மிளகாய் தூள் மஞ்சள் தூள், சோம்பு, சீராகம், கறிவேப்பிலை, எண்ணெய் மற்றும், தண்ணீர் 1 கோப்பை எல்லாம் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.(பரங்கிக்காய் சீக்கிரம் வெந்துவிடும் அளவாக தண்ணீர் சேர்த்தால் போதுமானது)
தண்ணீர் அதிகம் தேவியில்லை இது சற்று சேர்ந்தார்ப்போல் இருக்க வேண்டும் நீர்க இருக்க கூடாது.
நன்கு வெந்து குழம்பு சுண்டி வரும்போது வெல்லம் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வைத்து இறக்கி பரிமாறலாம். சுவையும் மனமும் அற்புதமாக இருக்கும் . உடன் வடித்த சத்தம் சேர்த்து அல்லது துணை காயாக கூட பரிமாறலாம். 5 நிமிடத்தில் தயார்!

கேழ்வரகு/ராகி அல்வா/Ragi Halwa

கேழ்வரகு/ராகி அல்வா :


கேழ்வரகு சிறப்பு அறிவோம்

கேழ்வரகு உண்பதால் ஏற்படும் நன்மைகள்


ஊட்ட உணவு கேழ்வரகில் “புரதம், நார்ச்சத்து, மக்னிசியும்” போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. விரைவில் உடல் எடை குறைக்க கேழ்வரகு உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். கேழ்வரகில் இருக்கும் “ட்ரிப்டோபான்” எனப்படும் பொருள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.
உடல் சூடு மனிதர்களின் உடல் எப்போதும் சராசரியான உடல் வெப்பத்தை கொண்டிருக்க வேண்டும். கோடை காலங்களில் எல்லா மனிதர்களுக்கும் உடல் சூடு அதிகரித்து, அதிகம் வியர்த்து உடலின் சில அத்தியாவசிய சத்துக்கள் வியர்வை வழியாக வெளியேறிவிடுகிறது.கேழ்வரகு கூழ், களி போன்றவற்றை சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும்.
பதற்றம், மனஅழுத்தம், நரம்பு கோளாறுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. கேழ்வரகில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்
தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். தோல் பளபளப்பு பெற்று இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது.

Halwa:
கேழ்வரகில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
கேழ்வரகு அல்வா மிக்க சுவையான பல சிறப்பு அம்சம் கொண்ட அல்வா அதிக நெய் இல்லாமல் தேங்காய்ப்பாலின் சுவையும் மனமும் கலந்த ஒரு இனிப்பு வகை வெல்லம் சேர்த்து செய்வதால் இன்னும் இரும்புச்சத்து அதிகமாக கொண்டது சுவை தைரியமாக செய்து அசத்துங்கள்.


பொருட்கள்:
கேழ்வரகு மாவு-1 கோப்பை
தேங்காய் பால் -1 கோப்பை கெட்டியாக
தண்ணீர்-2 கோப்பை (இரண்டு பால் ஒரு பங்கு தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்)
வெல்லம்-1 1/4 கோப்பை
நெய்-2 மேஜைக்கரண்டி
முந்திரி- 10
செய்யும் முறை :
கேழ்வரகு மாவை 1 மணி நேரம் இரண்டு கோப்பை தண்ணீரில் ஊறவைத்து, மெல்லிய துணியால் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். (ராகி பால் )


வானலியில் 1 மேஜை கரண்டி நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
கெட்டியான தேங்காய் பால் மற்றும் கேழ்வரகு மாவை ஒன்றாக கலந்து அதே வானலில் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். தீ மிதமானதாக வைத்து கை விடாமல் கிளறவும்.


நல்ல கெட்டியாக வரும் சமயம் வெல்லம் சேர்த்து கிளறவும். (வெல்ல ம் 1/4 கோப்பை நீரில் அடுப்பில் வைத்து கரைத்தும் சேர்க்கலாம்).


இடையில் நெய் சேர்த்து நன்கு கிளறவும் 10 நிமிடம் வரை அப்படியே கிளறவும், கண்ணாடி போல் நன்கு அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, வறுத்த முந்திரிபருப்பு தூவி பரிமாறவும்.


தேங்காய் பாலோடு சேர்த்து கிண்டுவதால் நல்ல தேங்காய் பால் மனம் அசத்தலாக இருக்கும் நெய்யும் குறைவாகவே சேர்க்கலாம்.

 

 

சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack

சிறுதானிய பொரி உருண்டை:

சிறு தானியம் ஒரு பிரபலமான உணவாக பெருகிவரும் இக்காலத்தில் அதன் பல்வேறு செய்முறைகளும் பகிரக்காண்கிறோம் அந்த வகையில், இது ஒரு வித்யாசமான பயனுள்ள குறிப்பாக இங்கு பதிவிடுகிறேன். சிறு தானியத்தை பொரியாக்கி, பொரியை மாவாக்கி, நெய், சர்க்கரை சேர்த்து உருண்டையாக்கி சத்து நிறைந்த ஒரு தின்பண்டமாக குடும்பத்தோடு சுவைத்து மகிழ்வீர்.

பிள்ளையார் நோம்புக்கு பொரித்த பொரி என்னசெய்வது? வீணாக்காமல் செய்தால் பிரமாதமான சுவையோடு சத்தான பொரி மாவுருண்டை

சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack
சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snackசிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack

செய்முறை:
கம்பு -100கிராம்
சோளம் -100கிராம்
அவல் -100கிராம்
தினை -100கிராம்
வரகு -100கிராம்
நெய்-250 அல்லது 300 மில்லி
வெல்லம் / சர்க்கரை -300 கிராம் மாவாக பொடித்துக்கொள்ளவும்
கம்பு, சோளம் தினை,வரகு, அவல் இவற்றை தனித்தனியாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.


மிக்ஸியில் பொடியாக்கிக்கொள்ளவும்,
பொடித்த சர்க்கரையை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.


நெய்யை சூடு பண்ணி, கலந்த மாவை சேர்த்து இளம் சூட்டில் கிளறவும்.

கை பொறுக்கும் சூடு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சிறு உருண்டைகளாக உருட்டவும்
சிறுதானிய பொரி உருண்டை தயார்

சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack
சிறுதானிய பொரி உருண்டை/ Millet Snack

 

கொழுக்கட்டை / Festival special Kozhukkattai

கொழுக்கட்டை/ Kozhukkattai:

A collection of various type of kozhukkattai

Mixed Nuts Kozhukkattai:

http://wp.me/p1o34t-1aJ

Mixed nuts Kozhukkattai

Varagu rice kozhukkattai:

http://wp.me/p1o34t-NL

Varagu rice kozhukkattai

Paal Kozhukkattai:

http://wp.me/p1o34t-KG

Pal Kozhukkattai

Rice balls / Neer Kolukkattai:

http://wp.me/p1o34t-pl

For Recipe in Tamil click this link:  http://wp.me/p6uzdK-4a

Neer Kozhukkattai

Pillayar Patti Mothagam:

http://wp.me/p1o34t-hI

For Recipe in Tamil click this link:  http://wp.me/p6uzdK-4n

Pillayar Patti Mothagam

 

Erukkam Kozhukkzttai:

http://wp.me/p1o34t-hu

For Recipe in Tamil click this link:  http://wp.me/p6uzdK-4x

Erukkam Kozhukkattai

 

Puttu Kozhukkzttai:

http://wp.me/p1o34t-bZ

For Recipe in Tamil click this link: http://wp.me/p6uzdK-6b

Raagi Puttu Kozhukkattai

Pidi Kolukkattai

http://wp.me/p1o34t-1bf

Pidi Kolukkattai
Pidi Kolukkattai

இனிப்பு சீடை / Sweet Seedai

இனிப்பு சீடை:

Krishna jayanthi special Sweet Seedai, for recipe in English please click :  http://wp.me/p1o34t-XO
கிருஷ்ண ஜெயந்தி / கோகுலாஷ்டமி சிறப்பு சீடை. இனிப்பு சீடை வெளிப்பகுதி மொறுமொறுப்பாகவும் உள்பகுதி சிறிது மென்மையானதாகவும், இதமான இனிப்பும், பச்சரிசியின் பால் போன்ற சுவையும் சுவைக்க சுவாரஸ்யமானது.பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை கெடாமல் பயன்படுத்தலாம். குறிப்பிட்டுள்ள முறையை கவனமாக பின்பற்றி பயனடைவீராக.

Sweet Seedai

செய்முறை:
பச்சரிசி மாவு வீட்டில் தயாரித்த பச்சரிசி -1 கோப்பை
வறுத்த உளுந்து மாவு-1 மேஜைக்கரண்டி
வெல்லம் -1/2 கோப்பை பொடித்தவைத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவியது-1 மேஜைக்கரண்டி
எள்ளு-1 தேக்கரண்டி
ஏலப்பொடி -1/4 தேக்கரண்டி
மாவு தயாரிக்க:
பச்சரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு தண்ணீரை சுத்தமாக வடித்துவிடவும், சுத்தமான துணியில் உலர்த்தவும்.
தண்ணீர் முற்றிலும் உலர்ந்ததும், (அரை ஈரப்பதம் ), மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரே மாதிரியான அமைப்புக்கு சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.
சீடை தயாரிக்க:
அரைத்து சலித்த மாவுடன், அரைத்தமாவில் பொடித்த வெல்லத்தை சேர்த்து (10 நொடி) அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில்உளுந்தமாவு, தேங்காய், எள்ளு மற்றும் ஏலப்பொடி சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.

11998206_951038874937723_283712315_n
பின்னர் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி பொறிக்க தயாராக வைத்துக்கொள்ளவும்.

11992418_951038871604390_124041166_n
வாணலியில் எண்ணெய் காயவைத்து (கவனம் அதிகம் காயவிடக்கூடாது) மிதமான தீயில் பொன்னிறமாக  பொறித்து எடுக்கவும்.
சுவையான இனிப்பு சீடை தயார்.
குறிப்பு:
1.வெல்லம் சேர்த்து கவனமாக அரைக்கவும், நன்கு கட்டிகள் இல்லாமல் கலவை ஒன்று சேரும் வண்ணம் பிசைந்துகொள்ள வேண்டும்.

மிதமான தீயில் பொரித்தெடுக்க வேண்டும், இல்லையேல் வெல்லம் சேர்த்தமையால் எளிதில் வெளிப்புறம் கருகி விடும் உள்புறம் வேகாமல் இருக்கும்.

கற்கண்டு பாலண்ணம் / கல்கண்டு பொங்கல்- Sugar candy rice

கற்கண்டு பாலண்ணம் / கல்கண்டு பொங்கல் :

Sugar Candy Pongal, Recipe in English please click link:  http://wp.me/p1o34t-u9
மென்மையான, வெண்ணை போன்ற சுவையும், நிறமும் கொண்ட கல்கண்டு சாதம் பெரும்பாலும் கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுவது நமது வழக்கம். செட்டிநாட்டு விருந்துகளிலும் இது சிறப்பாக பரிமாறப்படும். குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த கல்கண்டுபாலண்ணம் அன்றாடம் செய்து கொடுக்கலாம். இதில் பால், பருப்பு, கல்கண்டு, ஏலக்காய், முந்திரி போன்ற சுவையான, மற்றும் சத்து நிறைந்த பொருட்கள் உள்ளடங்கியதால், இது ஆரோக்கியம் நிறைந்த ஒரு முழு உணவாகும்.

 

 கல்கண்டு பொங்கல்- Sugar candy rice
கல்கண்டு பொங்கல்- Sugar candy rice

செய்யத்தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 1 கோப்பை
கல்கண்டு – 1 கோப்பை (பொடித்தது)
பாசிப்பருப்பு -1/4 கோப்பை ( மலர வேகவைத்தது) விருப்பத்திற்கேற்ப பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்.
பால் -1 1/2 கோப்பை
தண்ணீர்-1 1/2 கோப்பை
முந்திரி அல்லது பாதாம்-5 அல்லது 9
ஏலக்காய் பொடி -1/2 தேக்கரண்டி
நெய்-2 மேஜைக்கரண்டி
செய்முறை விளக்கம்:
1. பாசிப்பருப்பை 1 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. அரிசியை நன்கு கழுவி, மேலே குறிப்பிட்டுள்ள பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 அல்லது 5 விசில் குக்கரில் வேகவிடவும்.
3. சூடு தணிந்ததும், பொடித்த கல்கண்டு, வேகவைத்த பருப்பு சேர்த்து கலக்கவும், அடிபிடிக்காமல், இளந்தீயில் வைத்து கிளறிவிடவும்.

13936791_1186791528029122_23500583_n
4. நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து கலவையுடன் சேர்க்கவும், ஏலக்காய் பொடி சேர்த்து ஒன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

14081449_1186791461362462_327875057_n

மாங்காய் பச்சடி/ Mango Pachadi

மாங்காய் பச்சடி:
அனைவருக்கும் செட்டிநாடு குக் புக்கின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அறுசுவையுடனும் பெரியோர்களின் நல் ஆசிபெற்று இனிதே துவங்குவோம்.
தமிழ் புத்தாண்டின் சிறப்பு உணவு மாங்காய் பச்சடி, அறுசுவையும் கலந்து சமைக்கப்படும் இந்த பச்சடியின் கருத்து: இதில் சேர்க்கப்படும் ஆறு சுவையும் ஆறு குணங்களாக இனிதே இவ்வருடத்தில் கையாள இறைவனிடம் வேண்டி இந்தப் பச்சடியை உட்கொள்கிறோம். இனிப்பிற்கு வெல்லம்: புளிப்பு, துவர்ப்பிற்கு கொட்டையுடன் சேர்க்கும் மாங்காய்; கசப்பிற்கு வேப்பம்பூ; சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் துளி உப்பு; காரத்திற்கு தாளிதம் செய்யும் வரமிளகாய் என அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கி செய்யப்படுகிறது. சுவையோ அலாதி !

 

மாங்காய் பச்சடி:
                                                             மாங்காய் பச்சடி

செய்முறை விளக்கம்:
தேவையான பொருட்கள் :
மாங்காய்-2
வெல்லம் -1/2 கோப்பை
உப்பு-1 சிட்டிகை
வேப்பம்பூ-1 கொத்து
தளிக்க:
எண்ணெய் அல்லது நெய்-1 தேக்கரண்டி
கடுகு-1/2
வரமிளகாய்-1
கறிவேப்பிலை-1 கொத்து.
செய்முறை:
1. மாங்காய் தோல், கொட்டையுடன் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். (தோல்,கொட்டையுடன் சமைத்தல் முழுமையான சுவைடனும் மற்றும் ஜாம் போலாகிவிடாமல் இருக்கும்)
விருப்பத்திற்கு ஏற்ப, தேவையெனில் தோல் அகற்றியும் செய்யலாம்.


2. 1/2 கோப்பை தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.மாங்காய் சில மணித்துளிகளில் எளிதாக வெந்துவிடும்.
3. நன்கு வெந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
4. நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும் உப்பு,வேப்பம்பூ சேர்த்து கிளறிவிடவும்.
5. மேலே கூறிப்பிட்டுள்ள பொருட்கள் கொண்டு தாளிதம் செய்யவும்.
அறுசுவையுடைய மாங்காய் பச்சடி ரெடி

ஓமப்பொடி / Omamppodi

ஓமப்பொடி :
கரகரப்பான, மிதமான சுவையுடைய ஓமப்பொடி, பச்சிளம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை விரும்பி சுவைக்கக்கூடிய ஒரு எளிய தின்பண்டம். ஓமம் மருத்துவ குணமுடையது என்பதால் அதிகம் ஒட்கொண்டாலும் கெடுதல் விளைவிக்காது. தின்பண்டமாக மட்டுமல்லாது இதை தயரித்த உணவின் மேல் அழகுபடுத்தவும் பயன்படுத்தலாம்.

ஓமப்பொடி / Omamppodi
ஓமப்பொடி / Omamppodi

தேவையான பொருட்கள்:
கடலை மாவு- 2 கோப்பை
அரிசி மாவு – 1/4 கோப்பை
ஓமம் -1 மேஜைக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி -1/2 தேக்கரண்டி (தேவைப்பட்டால் )
பொரித்தெடுக்க எண்ணெய் -200 மில்லி

செய்முறை:
ஓமம் அரைத்து தண்ணீர் விட்டு வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து,

ஓமம் அரைத்து வடிகட்டிய தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காய வைக்கவும்,  காய்ந்ததும் இடியப்பம் பிழிவது போல் வட்டமாக பிழிந்து இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

12202176_980877718620505_1006718924_n
ஓமப்பொடி ரெடி.

12200710_980878361953774_1891979152_n

குறிப்பு:
ஓமம தண்ணீரில் வேகவைத்து வடிகட்டிய சாறும் பயன்படுத்தலாம்.

 

Navarathri Sundal / நவ வகை சுண்டல்

Navarathri Sundal / நவ வகை சுண்டல்:

For English please click:      http://wp.me/p1o34t-YT

நவ வகை சுண்டல் :
தசரா 10 நாட்கள் கொண்டாடப்படும் ஒரு சிறப்புப்பண்டிகை ஆகும். இந்த நாட்களில், நாம் நம்மை சுற்றி தெய்வீகம் மற்றும் நற்சிந்தனை ஆற்றலைக் கொண்டு வர, துர்கா, லட்சுமி, சரஸ்வதி மந்திரங்களை பாராயணம் செய்து தெய்வத்திற்கு நெய்வேத்யம் செய்து வழிபடுவோம். இந்த ஒன்பது நாட்களும் பல வகை சுண்டல் செய்வது வழக்கம், அதை கருத்தில் வைத்து இந்த அற்புதமான நவராத்திரியைக் கொண்டாட, சில சுவாரசியமான கருத்துக்களை இங்கு பகிர்கிறோம்.
நித்தம் சுண்டல் அலுப்பு தட்டாமல் இருக்க மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்க சில குறிப்புகள்:
1.சுண்டலில் சுக்குப்பொடி அல்லது இடித்த இஞ்சி சேர்க்கவும்.
2.மிளகு, சீரகத்தூள் தூவி பரிமாறலாம்.
3. பச்சை மிளகாய் அல்லது வர மிளகாய் தாளிக்கவும்.
4. துருவிய காராட், தேங்காய் சேர்க்கலாம்.
5. கொத்தமல்லி, கறிவேப்பிலைசேர்த்தால் மனம் அதிகரிகும்.
6.சில துளிகள் எலுமிச்சைச்சாறு சுவையைக் கூட்டும், அதிக மணி நேரம் வரை கெடாமலும் இருக்கும்

ஒன்பது வகை சுண்டல்:

அனைத்து சுண்டல் வகையும் வேகவைத்து, சுவையாக தளித்து படைக்க :
6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்த சுண்டலை குக்கரில் 3 விசில் வேகவிட்டுஆறியதும், வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் காய வைத்து,கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வேகவைத்த சுண்டலை சேர்த்துக்கிளறவும்.
துருவிய தேங்காய், உப்பு,சேர்க்கவும்.
சுண்டல் ரெடி

1.கருபுக்கொண்டைக்கடலை சுண்டல், 4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்

DSC08183
2.காபுல் கடலை சுண்டல்,  4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.

images (3)
3.பாசிப்பயறு சுண்டல்,  4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.

12041762_957979740910303_1853936383_n (1)
4.வேர்கடலை சுண்டல்,  4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.

images (1)
5.பட்டாணி சுண்டல்,  4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்

DSC04817_thumb[4]
6.கடலைப்பருப்பு சுண்டல்,1 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.

kadalai_paruppu_sundal
7.முளை கட்டிய பயறு சுண்டல்,   6-8  மணி நேரம் ஊற வைத்து, முளை கட்டி பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.

Moong-300x267
8.நவதானிய சுண்டல், 4 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வேகவிட்டு தாளிக்கவும்.

image101
9.உளுத்தம் பருப்பு சுண்டல் பொன்னிரமாக வறுத்து வேகவைத்து தாளிக்கவும்.

DSC08183