நேந்திரன் புட்டு/பொடிமாஸ்

நேந்திரன் புட்டு/பொடிமாஸ்:
குழந்தைப்பருவம் முதல் உட்கொள்ளும் சத்தான உணவு வகைகளில் ஒன்றாகக் கருதப்படுவது நேந்திரங்காய் அல்லது பழம். இது கேரளா மாநிலத்தில் அதிகமாக விளைச்சல் தரக்கூடிய ஒரு பழ வகை. இதை காயவைத்தோ அல்லது சமைத்த பக்குவத்திலோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ள தகுதியான ஒரு சத்து மிகுந்த உணவு வகையாக பழக்கத்தில் உள்ளது.
இது சிப்ஸ், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் இந்த எளிதான பொடிமாஸ் வகை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம். உணவாகவும் அப்படியே சாப்பிடவும் பரிமாறலாம்.

பொடிமாஸ், இது நாட்டு வாழைக்காய் அல்லது நேந்திரங்காயிலும் செய்யலாம், முறை ஒன்றே

செய்முறை விளக்கம்:
வாழைக்காய்-2
வெங்காயம் பொடியாக நறுக்கியது -1 (பெரியது). இது பொடிமஸுக்கு சுவை கூட்டும்.
இஞ்சி-1 அங்குலம் தோல் சீவி,பொடியாக நறுக்கியது


தேங்காய் துருவல்-1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை-5
பச்சைமிளகாய்-1
மிளகுத்தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு சுவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி,
கடுகு-1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு-1/2 தேக்கரண்டி
சீரகம்-1/4 தேக்கரண்டி
செய்முறை:
வாழைக்காயை ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து (தோல் நிறம் கருப்பாக மாறிவிடும்) எடுத்துக்கொள்ளவும், சூடு ஆறியபின் தோல் உரித்து உதிர்த்தோ, அல்லது துருவியோ வைத்துக்கொள்ளலாம். (இங்கு படத்தில் உதிர்த்து காண்பிக்கப்பட்டுள்ளது).

பிறகு, வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்து, அரிந்து வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். சற்று வெந்ததும், கறிவேப்பிலை சேர்த்து உதிர்த்த வாழைக்காய் சேர்த்து உப்பு தூவி கிளறி விடவும். மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடம் மூடிவைத்து ஒன்றுசேர்ந்து வேகவிடவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம். இது வறுவலாக புட்டு பதத்திற்கு இருக்க வேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைப்பதிற்கு முன்பாக மிளகுத்தூள், துருவிய தேங்காய், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். சுவையும் மனமும் பிரமாதமாக இருக்கும்.

தயிர் அல்லது ரசம் சாதத்துடன் வாழைக்காய் பொடிமாஸ் அசத்தல்

Valaikkai Podimas

சைவ கோலா உருண்டை

சைவ கோலா உருண்டை:
கோலா உருண்டை என்றாலே அது அசைவத்தில் மட்டுமே செய்யமுடியும் என்பதை முற்றிலும் மாற்றும் வகையில் ஒரு அற்புத சுவை கொண்ட சைவ கோலா உருண்டை இது.
சோயா மீல் மேக்கர் கொண்டு சுவையான கோலா உருண்டை எளிதில் செய்துவிடலாம் ஈஸி ரெசிப்பி
இதை சாம்பார் சாதம், தயிர் சாதம் உடன் பரிமாறலாம், இதை தக்காளி சாஸுடன் அப்படியே பரிமாறலாம்.
ஊறவைத்து, அரைக்க, பொரிக்க, என இரண்டு பக்குவத்தை கையாண்டால் போதுமானது.
உங்கள் சுவை அரும்புகளை உற்சாகப்படுத்த இதோ செய்முறை

அரைக்க:
சோயா- மீல்மேக்கர் -1 கோப்பை
பச்சை மிளகாய்-4
தேங்காய்-1/4 கோப்பை
பூண்டு-4 பல்
இஞ்சி-2 அங்குலம்
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
மிளகு-4
பட்டை,கிராம்பு,ஏலக்காய் அல்லாது கரம் மசாலா போடி-1/2 தேக்கரண்டி
பொட்டு கடலை-1/4 கோப்பை
முந்திரி பருப்பு-6
உப்பு-1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை-1 கைப்பிடி
செய்முறை:
மீல் மேக்கரை வெது வெதுப்பான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
முதலில் மசாலா பொருட்களை, மீல் மேக்கர் தவிர்த்து இதர பொருட்களை தண்ணீர் விடாமல் அரைத்து அதில் ஊறவைத்த மீள் மேக்கேரை நன்கு பிழிந்து இந்த மசாலா உடன் சேர்த்து பக்குவமாக அரைத்து கொள்ளவும். உப்பு சரி பார்த்துக்கொள்ளவும். இப்போது கலவை ரெடி.

கைகளில் எண்ணெய்தொட்டு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
வெடிப்பு இல்லாமல் நல்ல வழு, வழுப்பாக உருட்டவும் இல்லாவிடில் எண்ணெயில் கரைந்து விட வாய்ப்பு உள்ளது.
கடாயில் எண்ணெய் காயவைத்து, காய்ந்த எண்ணெயில் நிதானமான தீயில் பொன்னிறமாக பொறித்தேடுக்கவும்.

சுவையான சைவ கோலா ருண்டை ரெடி

குறிப்பு:
மீல் மேக்கர் தவிர்த்து, மற்ற அணைத்து மசாலா பொருட்களையும் வதக்கி ஆறவைத்தும் அரைக்கலாம். மிக எளிய முறையில் செய்வதற்கான முறையே மேலே கூறப்பட்டுள்ளது

காய்கறி பக்கோடா/Vegetable Pakkoda

காய்கறி பக்கோடா:
சமயம் இது – வீட்டில் செய்து பெருமைகொள்வோம் , கற்று சிறப்படைவோம், வீட்டில் உள்ளோர் பாராட்டும் போது அன்பு பெருகும், சுவைத்து உண்பர், மேலும் நேரம் பயனுள்ளதாக பயன்படுத்தப்படும்.

இதன் சிறப்பு- இதில் கடலை மாவு பேக்கிங் சோடா சேர்ப்பதில்லை.
காய்கறியை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது மிக்க நல்லது என்பது அறிந்ததே, வேகவைத்து, வதக்கி, ஆவியில் வேகவைத்து மற்றும் பச்சயாக சாப்பிடுவது மிகச்சிறந்தது இருப்பினும், குழந்தைகள் சுவை மாறுதலாக விரும்பும் சமயம் கடைகளில் விற்கும் பொருட்களை தேடி செல்வதை விட இப்படி எளிதாக வீட்டிலேயே செய்து அசத்தலாமே!

செய்யத்தேவையான பொருட்கள்
கோதுமை மாவு -1 கோப்பை
ரவை 1 -மேஜைக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
பெருங்காயம் அல்லது (இஞ்சிபூண்டு விழுது )
காய்கறி சிறு துண்டுகளாக நறுக்கியது 1 கோப்பை
வெங்காயம்-1/4 கோப்பை
கறிவேப்பில்லை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சிறிதாக வெட்டியது மிளகாய் தேவையில்லையெனில் தவிர்க்கலாம்.

செய்முறை:
1. கோதுமை மாவை சிறுது வறுத்து வைத்துக்கொள்ளவும் நல்ல மனம் கூட்டும்.
2. வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து விடவும்.

3. இதர காய்கறிகளை சேர்த்து தண்ணீர் கலக்காமல் நன்கு கிளறிக்கொள்ளவும்


4. பின்னர் சிறிதளவு-1/4 கப் தெண்ணீர் சேர்த்து கலந்து விடவும் தேவை பட்டால் இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்.

நன்றாக எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.


5. கெட்டியாக பிசைந்து கொள்ளவும் தண்ணீர் சிறிது, சிறிதாக சேர்க்கவும்,.சப்பாத்தி மாவை விட தளர்த்தியாக இட்லி மாவை விட கெட்டியாக வைத்துக்கொள்ளவும்.


6. வாணலியில் எண்ணெய் காய வைத்து நன்கு காய்ந்ததும், சிறு உருண்டைகளாகவோ அல்லது கிள்ளியோ போட்டு வேகவைக்கவும் .
7. நன்கு பொன்னிறமாக  வெந்ததும் எண்ணெய் வடித்து எடுத்து பரிமாறவும் மிகவும் சுவையாக இருக்கும்.

வெஜிடபிள் பாக்களோட தயார் இது , சைடு டிஷ், மெயின் டிஷ் மத்திய உணவுடன் , இடை பலகாரம், சூப்புடனும் பரிமாறலாம். அனைவரும் வரவேற்கும் ஒரு எளிதான சுவை கொண்டது.

மற்றொரு முறை
எண்ணெயில் பொறிப்பது பிடிக்காவிட்டால் சிறுது தளர்த்தியாக்கி இட்லி மாவு போல , குழி பணியார கல்லில் ஊற்றியும் வேகா வைக்கலாம்.

 

வாழைப்பூ மீன் வறுவல்/Banana flower Fritters

வாழைப்பூ மீன் வறுவல் :
வாழையடி வாழையாக தழைத்து வாழ வாழ்த்துவோம்- வாழை ஒரு கன்று போதும் பிறருக்கு தன்னை முழுதுமாக அர்ப்பணிக்கும் மகத்துவம் பொருந்தியது. மரம், பூ, இலை, காய், கனி, தண்டு, அதன் நார் கூட பயன் தரும் சிறப்பு பொருந்தியது. ஒவ்வொன்றிலும் ஒரு தனிச்சிறப்பு என நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவே சொல்லலாம். உணவாகவும், மங்கலப்பொருளாகவும் ,மருத்துவகுணம் பொருந்தியது இவ்வகையில் நாம் இன்று வாழைப்பூவின் சிறப்பு சுவை அறிவோம். துவர்ப்பு குணம் கொண்ட வாழைப்பூவை நாம் குறைவாகவே பயன்படுத்துகிறோம். அனைவரும் விரும்பி ஏற்கும் வகையில் ஒரு செய்முறை காண்போம்

வாழைப்பூ மீன் வறுவல்:

1. வாழைப்பூ -1 கோப்பை (உள் நரம்பு நீக்கி சுத்தம் செய்தது)


2. உப்பு-1/2 தேக்கரண்டி
3. மஞ்சள் தூள்-1/4
4. மிளகாய்த்தூள் 1/2
5. அரிசி மாவு-4 மேஜைக்கரண்டி
6. மைதா மாவு அல்லது (கோதுமை மாவும் கடலை மாவும் சம அளவு கலந்து சேர்த்துக்கொள்ளலாம் ) -3 மேஜைக்கரண்டி


7. இஞ்சி பூண்டு விழுது-1/2 தேக்கரண்டி
8. எலுமிச்சை சாறு-2 தேக்கரண்டி
9. பொறிக்க -எண்ணெய் -100மில்லி
செய்முறை:
2 ல், இருந்து 8 வரை உள்ள பொருட்களை ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.


5 நிமிடம் கழித்து
வாழைப்பூவை ஒன்றொன்றாக தோய்த்து காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.


சுவையான வாழைப்பூ வறுவல் தயார்.

 

மொறு மொறு பக்கோடா / Vengaya Pakkoda

மொறு மொறு பக்கோடா :

மொறு மொறு வெங்காய பக்கோடா நொடியில் தயாராகும் இடை பலகாரம். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், விருந்தாளிகள், என அனைவரையும் உங்கள் கை வண்ணத்தால் அசத்துங்கள்.
இதோ செய்முறை

செய்யத்தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கோப்பை (100 கிராம்)
அரிசி மாவு 1/2 கோப்பை (50 கிராம்)
பெரிய வெங்காயம் – 2 பெரியது
கறிவேப்பிலை -3 கொத்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
பச்சை மிளகாய் – 2 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
உப்பு- 1/4 தேக்கரண்டி
சோம்பு- 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
1. பெரிய வெங்காயம் நீள வாக்கில் வெட்டிவைத்துக்கொள்ளவும்
2. பச்சைமிளகாய், கறிவேப்பிலை பொடியாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
3.ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள், சோம்பு- 1/2 தேக்காரண்டி சேர்த்து நன்கு பிசையவும்.
4. பின்னர், மாவு, எண்ணெய் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசறிக்கொள்ளவும். எண்ணெய், பக்கோடா மொறு மொறுப்பாக வர உதவும்.
5.தேவைப்பட்டால் 1 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து மாவு வெங்காயத்தில் பரவும் படி பிசறி ரெடியாக வைத்துக்கொள்ளவும்.

6. வாணலியில் எண்ணெய் காயவைத்து பக்கோடாவை சிறிது சிறிதாக பரவலாக போட்டு பொறித்தெடுக்கவும்.

சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா தயார். சூடான டீ, காப்பியுடன் பரிமாறவும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு மிளகு வறுவல்

சர்க்கரைவள்ளி கிழங்கு மிளகு வறுவல் :
சத்து மிகுந்த சர்க்கரைவள்ளி கிழங்கு தற்சமயம் அதிகமாக கடைகளில் காண முடிகிறது இதன் மருத்துவ குணங்கள் கருதி நாம் நமது உணவில் சேர்த்து பயன்பெறும் வகையில் சுலபமான சமையல் குறிப்புகளுடன் சுவையான மிளகு வருவல். உண்ண, உண்ண தெவிட்டாத சுவை சமைத்து பாருங்கள்.

சர்க்கரைவள்ளி கிழங்கு மிளகு வறுவல்

செய்முறை:
சர்க்கரை வள்ளி கிழங்கை கழுவி வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
மூன்று நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் காயவைத்து வர மிளகாய்,கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக்கொள்ளவும்.
கறிவேப்பிலை சேர்த்து சர்க்கரைவள்ளி கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும் .
இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை மிதமான தீயில் வறுத்தெடுக்கவும்.
சுவையான மொறு மொறு சர்க்கரைவள்ளி கிழங்கு வறுவல் ரெடி .

பலாக்காய் கோலா உருண்ட / Raw jack fruit kola urundai

பலாக்காய் கோலா உருண்ட:
சைவத்தில் ஓர் அசைவ உணவின் செய்முறை கொண்டு அனைவரும் விரும்பும் அற்புத சுவை படைத்திடுவீர்.
பலாக்காய் கோலா உருண்டை எளிய முறையில் சிரமமின்றி தயாரிக்கலாம் சுவையும், மனமும் பசியைத்தூண்டும்.

Baby jack fruit balls
செய்யத்தேவையான பொருட்கள் :
பலாக்காய் துண்டுகள் -2 கோப்பை
பலாக்காய் தோலகற்றி, துண்டுகளாக வெட்டி, மஞ்சள், உப்பு சேர்த்து ஒரு விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
வருக்கத்தேவையான எண்ணெய்
பொட்டுக்கடலை 2 மேஜைக்கரண்டி
அரைக்க :
பச்சை மிளகாய் -4
பூண்டு- 5 பல்
இஞ்சி-1 சிறு துண்டு
சோம்பு -1 தேக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு -5
மிளகு-5
பட்டை, கிராம்பு -சில

11713303_921103484597929_1069520784_o
1.மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெய்யில் வருத்து   விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

11720330_921103454597932_1455281386_o
2.பொட்டுக்கடலை 2 மேஜைக்கரண்டி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்,
3.வேகவைத்த பலாக்காயை ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும்அல்லது மசித்துக்கொள்ளவும்,
4.வேகவைத்த பலாக்காய் , அரைத்த விழுது, பொட்டுக்கடலை மாவு, உப்பு சிறிது சேர்த்து நன்றாக கலந்து ,சிறு,சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

11720826_921103461264598_2030406835_o 11720831_921103381264606_149847307_o
5.வாணலியில் எண்ணெய் காயவைத்து பொன்நிறமாக வருத்தெடுக்கவும் .
சுவையான பலாக்காய் கோலா உருண்டை தயார்.

மீன் வறுவல்/ Fish fry

மீன் வறுவல் :

மீன் வறுவல் செய்வது சுலபம், செய்முறையும் எளிமையானது, கடைகளில் விற்கும் மசாலா பொடிகளை விட வீட்டிலேயே நொடியில் கலந்து மீனில் பிசறிவிடலாம். சில நிமிட கவனம், கலப்படமில்லாத மசாலா செய்து விடலாம்.

Meen varuval/Fish fry
Meen varuval/Fish fry

துண்டு மீன் 1/2 கிலோ, வறுவல் செய்ய தேவையான மசாலா பொடி இதோ,
தனி மிளகாய்ப்பொடி -3 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
மைதா -1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி
மேலே கூறியுள்ள அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன்,இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி,மற்றும் மசாலாவை கலந்து, மீனில் பிசறி வைக்கவும். 1/2 மணி நேரம்  பிரிட்ஜில் வைத்து, 1 1/2 மணி நேரம் வெளியில் எடுத்துவைத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் வறுத்தெடுக்கவும்.

img_3832

 

எண்ண வாழைக்காய் பூண்டு வறுவல் / Raw banana Garlic fry

எண்ணை வாழைக்காய் வறுவல் :

Raw banana Garlic fry recipe in English : http://wp.me/p1o34t-o0
வாழைக்காய் பூண்டு வறுவல், மணமும் சுவையும் நிறைந்தது, சமைக்கும்போதே சுவைக்கத்தூண்டும். மீண்டும், மீண்டும் செய்யத் தோன்றும் ஒரு அற்புத குறிப்பு. பூண்டின் மணமும் , சுவையும் இதன் தனிச்சிறப்பு. மருத்துவ குணம் நிறைந்தது பூண்டு என்பது அறிந்ததே, அதோடு மட்டுமல்லாமல் வாழைக்காய் என்றாலே நம் சிந்தையில் தோன்றுவது வாய்வுத்தொல்லை, அதைக்குறைக்கும் வகையில் உணவே மருந்து என்பதற்கு ஏற்ப இந்தக்கலவை சேர்க்கப்பட்டுள்ளது.
செய்முறையும் சுலபமானது.

உப்பு மஞ்சள் மிளகாய் பொடி பிசறி சோம்பு தாளித்து எளிதாக வதக்கி எடுத்து விடலாம் இது நல்ல ரோஸ்டாக செய்யலாம்.

IMG_3356

செய்யத்தேவையான பொருட்கள் :
வாழைக்காய் – 3

அரைக்கத்தேவையான பொருட்கள்:
பூண்டு -5 பல் தோலுரித்தது
தக்காளி- 1 சிறியது, சோம்பு-1/2

தனிமிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி

மஞ்சள்தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி

குறிப்பு:

இவை அறைக்காமல் சம்பர் மாசல்வேர்தும் வதக்கலம்

தாளிக்க:
எண்ணெய்- 2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2
சீரகம்-1/4
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை:
வாழைக்காயை தோலகற்றி, அரை வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்கும் பொருட்களை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை நறுக்கிய வாழைக்காயுடன் பிரட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
மசாலா பிரட்டியை வாழைக்காயை அதில் சேர்த்து இளந்தீயில் மூடி வைத்து,வறுத்தெடுக்கவும்.
சுவையான வாழைக்காய் பூண்டு வறுவல் ரெடி செய்து மகிழுங்கள் .

கத்திரிக்காய் வறுவல் / Brinjal fry

கத்திரிக்காய் வறுவல் :
ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த, அதிக அளவில் நாம் பயன்படுத்தும் கத்திரிக்காயில் ஒரு எளிய சுவையான வறுவல். இது ரசம், சாம்பார், தயிர் சாதம் என எல்லாவற்றிற்கும் ஏற்றது.
கத்திரிக்காய் வறுவல்: எண்ணெய் குறைவு, சுவையோ அதிகம், செய்வது எளிது.

கத்திரிக்காய் வறுவல்
கத்திரிக்காய் வறுவல்

செய்யத்தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்-1/2 கிலோ, பிஞ்சாக இருந்தால் நல்லது.
அரைக்க :
சின்ன வெங்காயம்-5-7 உரித்தது
பூண்டு-3 பல் உரித்தது
தக்காளி-1 சிறியது
தனி மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி, அல்லது சிவப்பு மிளகாய் -3, 5
உப்பு-3/4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2 தே .க
உ ழுந்து -1/2 தே .க
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை :
கத்திரிக்காயை நீல வாக்கில் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அரைக்கும் பொருட்களை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நிறம் மாறும்வரை நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து, வறுத்து எடுக்கவும். வதங்கும் போதே மணம் பிரமாதமாக இருக்கும்.
சுவையான கத்திரிக்காய் வறுவல் தயார்.

13515378_1128281927213416_1210247745_n