மீன் குழம்பு :
பக்குவமாய் சமைத்த மீன் குழம்பு நாவில் தேனூறவைக்கும். இரண்டு நாட்களுக்கு நாவில் சுவையும், கையில் மணமும் இதன் தனிச்சிறப்பு .
எந்த மீனாக இருந்தாலும் செய்முறை பக்குவம் ஒன்றுதான். அசத்தலான மீன்குழம்பு சுவைக்கு, பக்குவத்தை முறையாக பின்பற்றுதல் அவசியம் இல்லாவிட்டால் மீன் சுவை குழம்பில் சாராமலும், மீன் குழம்பில் கரைந்து முள் மிதப்பதும் சொதப்பிவிடும்.

செய்யத்தேவையான பொருட்கள்:
மீன் சுத்தம் செய்தது 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 1/2 கோப்பை தோலுரித்துக்கொள்ளவும்
10 பல் -பூண்டு தோலுரித்துக்கொள்ளவும்
தக்காளி -2
கறிவேப்பிலை-1 கொத்து
உப்பு 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
மிளகாய், மல்லிதூள் தனித்தனியாக சேர்க்கலாம் அல்லது செட்டிநாடு மிளகாய் பொடி சேர்க்கலாம்- 4 tsp
https://www.chettinadsnacksonline.com/collections/masala-podi/products/sambar-milagai-podi
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
மல்லித்தூள்-2 தேக்கரண்டி
புளிச்சாறு -3 மேஜைக்கரண்டி
தாளிதம் செய்ய:
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம் -1/4 தேக்கரண்டி
வெந்தயம் -1/4 தேக்கரண்டி
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
செய்முறை:
1. மீனை எலுமிச்சை சாறு, உப்பு சிறிது சேர்த்து நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்.
2.பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
3.வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
4. வெங்காயம் பூண்டு சேர்த்து சிவந்து வரும் வரை வதக்கவும்.
5. பின்னர் தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தோல் விடும் வரை வதக்கவும்.
6.மிளகாய்த்தூள், மல்லித்தூள், புளிச்சாறு, தண்ணீர் 2 கோப்பை,சேர்த்து நன்கு 5 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
7.குழம்பு கெட்டியாக வரும் சமயம், சுத்தம் செய்த மீன் சேர்த்து மிதமான தீயில் 5 கொதிக்க விடவும்.
சுவையான மீன் குழம்பு தயார்.குறைந்தது 2 மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவை அற்புதமாக இருக்கும்.

குறிப்பு:‘சின்ன வெங்காயம் சிறிது சோம்பு, சீரகம், 1 சிறிய தக்காளி அரைத்து சேர்க்கலாம்.