மாங்காய் தேங்காய் மண்டி / Mango Coconut Mandi
மாங்காய் தேங்காய் மண்டி :
For English recipe please click link here:
http://wp.me/p1o34t-5u
செட்டிநாட்டின் சுவையில் மாங்காய், தேங்காய் மண்டி. வெண்டக்காய் மண்டி, பலகாய் மண்டி, வத்தல் மண்டி, மிளகாய் மண்டி, கத்திரிக்காய் வெண்டக்காய்மண்டி, இன்னும் மண்டி வகைகள் பல.. இதில் நாம் இங்கு காணவிருப்பது மாங்காய் தேங்காய் மண்டி.
அரிசி கழனியில் செய்யும் ஒரு அருமையான காய் வகைதான் இந்த மண்டி. பொதுவாக நாம் அரிசி கழனியை பயன்படுத்துவது கிடையாது, அனால் அதில் அதிக சத்தும், சுவையும் உண்டு என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் அதை வீணடிக்காமல், இந்த சுவையான மண்டி வகையை செய்து உட்கொண்டனர். மண்டி சூடான சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், தயிர் சாதத்துக்கு துணையாகவும் சாப்பிடலாம். கஞ்சியும் பலகாய் மண்டியும் யானை பலத்தை தந்திடும், என்று என் பாட்டி சொல்வார்கள்.

தேவையான பொருட்கள்:
அரிசி கழனி -2கோப்பை
(இட்லி அரிசி 4 கோப்பை எடுத்து முதல் முறை லேசாக கழுவி வடித்துவிட்டு, மறுமுறை நன்குஉரசி கழுவி மண்டியை வடித்து, வடிகட்டி, தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.)
கத்திரிக்காய்-150 கிராம்
வெண்டைக்காய் 150 கிராம்
உருளைக்கிழங்கு-1
சின்ன வெங்காயம்-50 கிராம்
பச்சை மிளகாய்-10
மாங்காய்-1/2 அல்லது 4 துண்டுகள்
தேங்காய் நறுக்கியது -1/2 கோப்பை தேங்காயை சிறிதாக வெட்டிக்கொள்ளவும் அல்லது நீளவாக்கில் கீறிக்கொள்ளவும், கடித்து சாப்பிடும் பொது மிகவும் சுவையாக இருக்கும் .
காபுல் கடலை- 1/2 கோப்பை ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
புளி -1 எலுமிச்சை அளவு எடுத்து வெது வெதுப்பான நீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
தளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு-1 தே.க
உளுத்தம்பருப்பு-1
பெருங்காயம்-1/4
கறிவேப்பிலை-2 கொத்து
செய்முறை:
வெண்டைக்காய், மாங்காய், உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காயை சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம் தோலுரித்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
காபுல் கடலை- 1/2 கோப்பை ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
வெங்காயம்,பச்சைமிளகாய் கறிவேப்பிலை வெட்டிய காய்கள் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கி வந்ததும், வேகவைத்த கடலை, அரிசிகழனி, உப்பு, புளிச்சாறு சேர்த்து வேகவிடவும்.
காய் வெந்ததும், தேங்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.
கெட்டியாக ஒன்று சேர்ந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
மாங்காய் தேங்காய் மண்டி ரெடி.

குறிப்பு:
1. இட்லிக்கு ஆட்டும் போது இந்த நீரை சேகரித்து செய்யலாம்.
2. அரிசிக்கழனி தண்ணியாக இருந்தால் சிறிது, தேக்கரண்டி இட்லி மாவோ அல்லது அரிசி மாவோ மண்டியில் கரைத்துக்கொள்ளலாம்.
3. தேவைப்பட்டால் தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.
4. மாங்காய் சேர்ப்பதால் புளி குறைவாக சேர்க்கவேண்டும். மாங்காய் கிடைக்காவிட்டால் மாவத்தல் ஊறவைத்தும் சேர்க்கலாம்.
5.தேங்காயை சிறிதாக வெட்டிக்கொள்ளவும் அல்லது நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.கடித்து சாப்பிடும் பொது மிகவும் சுவையாக இருக்கும் .