மட்டன் ரசம் /Mutton Rasam :
மட்டன் ரசம் காரசாரமான மட்டன் ரசம் மாமிசம் விரும்புவோருக்கு ஒரு அற்புதமான பதார்த்தம். தற்போது மட்டனை விட கோழிக்கறி சமைப்பது அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. முன்பெல்லாம் மாமிச விருந்து என்றாலே அது மட்டன் சப்பாடாகத் தான் கருதப்படும். எளிமையான செய்முறை, குறைவான பொருளடக்கத்தோடு என் அம்மாவின் கைவண்ணம் மட்டன் ரசம் இதோ உங்களுக்காக.

தேவையான பொருட்கள்
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
மட்டன் (எலும்போடு கூடியது சுவை கூட்டும்) -1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 10 தோலுரித்து
தக்காளி-1 பெரியது
வரமிளகாய்-7 – 9
உப்பு-1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை கொத்து
மிளகு-1/2 தேக்கரண்டி
பூண்டு-3 பல்
மல்லி விதை-1/2 தேக்கரண்டி
செய்முறை
1. மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
2. வரமிளகாயை போடியாக பிய்த்துக் கொள்ளவும். மிளகு.
3. சீரகம், மல்லி, மற்றும் பூண்டை பொடி செய்து (முனுக்கி ) வைத்துக்கொள்ளவும்.
4. சுத்தம் செய்த மட்டனை உப்பு, மஞ்சள் சேர்த்து பிசறி 20 நிமிடம் வைக்கவும்.
5. குக்கரில் அல்லது வானலியில் எண்ணெய் காயவைத்து வரமிளகாய் போட்டு அதன் விதை பொன்நிறமாகும் வரை வதக்கவும்.
6. உடன் கறிவேப்பிலை, வெங்காயம், மட்டன் சேர்க்கவும் நன்கு கிளறவும் பிறகு தக்காளி சேர்க்கவும்.
7. தக்காளி தோல் விட்டு வரும் வரை வதக்கவும். வரமிளகயும் தோல் விட்டு வரும், இப்போது தண்ணீர் சேர்கத் தேவையில்லை, மிளகாய், தக்காளி நன்கு வெந்த பின்னர் 2 கோப்பை தண்ணீர் சேர்க்கவும் .
8. குக்கரில் 5 முதல் 8 நிமிடம் வரை வேகவைக்கவும் இளந்தீயில் வைக்கவும்.
9. ஆவி மாறியதும் முனுக்கி வைத்துள்ள மிளகு, சீரகம்,மல்லி, மற்றும் பூண்டு கலவையை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
10. சூடான சாத்தத்துடன் பரிமாறவும்.