கருணைக்கிழங்கு மசியல் / karunaikkizhangu masiyal

கருணைக்கிழங்கு மசியல் :

For English please click         http://wp.me/p1o34t-yc
கருணைக்கிழங்கு மசியல் மற்றுமொரு செட்டிநாட்டின் அற்புதத்தயாரிப்பு என்று சொல்லலாம். பொதுவாக கருணைக்கிழங்கு அதிக மருத்துவ குணம் நிறைந்தது, குறிப்பிட்ட சில சுகாதார நலன்கள் கருதி இந்த கிழங்கு வகை பெரும்பாலானோர் வீட்டிலும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பசியின்மை குணப்படுத்தும், அது மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது.மூல நோய் தொடர்பான பிரச்சினை, இரத்தப்போக்கு போன்றவற்றையும் குறைக்க இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.இதை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுதல் மிகவும் நன்று.
முக்கியமாக இந்தக்கிழங்கு மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும். 11880256826_6d22e31e57_z (1)

அற்புத சுவையுடைய இந்த மசியல் ரசம் சாதம், சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

DSC09349
தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு -1/2 கிலோ
மிளகாய்ப்பொடி-1 தே .க
புளி -1 மேஜைக்கரண்டி
உப்பு- 1 தே .க
மஞ்சள் தூள்-1/4தே .க
பூண்டு -3 பல், தட்டி வைத்துக்கொள்ளவும்.
கறிவேப்பிலை-1 கொத்து
வெங்காயம்-1
தக்காளி-1 சிறியது
பச்சை மிளகாய்-2 கீறிக்கொள்ளவும்

DSC09336DSC09343
தளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2 தே .க
சீரகம்-1/2தே .க
செய்முறை:
1. கருணைக்கிழங்கை நன்கு வேகவைத்து தோல் உரித்துக்கொள்ளவும்.
2.தோல் உரித்த கிழங்கை கையால் மசித்து, உப்பு, புளிச்சாறு மிளகாய்ப்போடி சேர்த்து கலந்து
வைத்துக்கொள்ளவும்.
3. அடி கனமான பத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,தாளிதம் செய்யவும்.
4. கறிவேப்பிலை, வெட்டிய வெங்காயம் தக்காளியை சேர்க்கவும். சேர்த்து நன்கு வதக்கவும்.
5. மஞ்சள் தூள், கலந்த கிழங்கு கலவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வரை வேகவிடவும் .

DSC09344
6.மசியல் வெந்ததும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும், அதுவே தயாரான பக்குவம்.இப்போது கருணைக்கிழங்கு மசியல் தயார்.

DSC09349