கூட்டுக்காய் பிரட்டல்:
English recipe please click link: http://wp.me/p1o34t-1gK
மதிய உணவின் ஆர்வத்தை தூண்டுவது அதன் துணை சேர்க்கையான காய்கறிதான். காய்கறியில் தான் எத்துணை வகை! கணக்கிலடங்கா கறிவகையும் அதன் சுவையும் அருமை. பிரட்டல், துவட்டல்,கூட்டு, பொரியல்
பச்சடி, மண்டி, கோலா இன்னும் புதிய கண்டுபிடிப்புகள். நம் நாக்கின் சுவை அரும்புகள் மலரும் வண்ணம் சமைத்து மகிழ்வோம்.
அசத்தும் ருசிச்சிறப்பு இந்த கூட்டுக்காய் பிரட்டலுக்கு உண்டு, சுவை மட்டுமன்றி அனைத்து காய் சேர்க்கையின் சத்தும் கலந்தது இதன் முக்கியச்சிறப்பு. சிறந்த சேர்க்கை ரொட்டி அல்லது சாதம், ரசம்.

செய்யத்தேவையான பொருட்கள்:
காய் வகை- 500 கிராம்
காலிஃளார் , பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீட்ரூட்,குடைமிளகாய் மற்றும் காரட்.
வெங்காயம் -1
தக்காளி -1
இஞ்சிபூண்டு விழுது -2 தேக்கரண்டி
மசாலா பொடி-1 தேக்கரண்டி
மிளகாய் பொடி-2 தேக்கரண்டி
உப்பு -1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
சோம்பு -1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
செய்முறை:
காய் வகையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும், இரண்டு நிமிடத்தில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெட்டிய உருளைக்கிழங்கு,பீட்ரூட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்னர் இதர காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அல்லது அனைத்து காய்களையும் பக்குவமாக வேகவைத்தும் சேர்க்கலாம்.
உப்பு, மசாலாபொடி, மிளகாய்ப்பொடி சேர்த்து கிளறவும், 1/2 கோப்பை தண்ணீர் சேர்த்து
மூடி இட்டு பூப்போன்று வேகவிடவும்.
தேவைக்கேற்ப தேங்காய்ப்பால் அல்லது 2 மேஜைக்கரண்டி தேங்காய், சீரகம் அரைத்த விழுது சேர்த்து சுருளவிடவும், இது சுவைகூட்டுவதோடு விருந்துக்கு அளவும் அதிகமாகும்.
சத்து நிறைந்த கூட்டுக்காய் பிரட்டல் தயார்