நேந்திரன் புட்டு/பொடிமாஸ்

நேந்திரன் புட்டு/பொடிமாஸ்:
குழந்தைப்பருவம் முதல் உட்கொள்ளும் சத்தான உணவு வகைகளில் ஒன்றாகக் கருதப்படுவது நேந்திரங்காய் அல்லது பழம். இது கேரளா மாநிலத்தில் அதிகமாக விளைச்சல் தரக்கூடிய ஒரு பழ வகை. இதை காயவைத்தோ அல்லது சமைத்த பக்குவத்திலோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ள தகுதியான ஒரு சத்து மிகுந்த உணவு வகையாக பழக்கத்தில் உள்ளது.
இது சிப்ஸ், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் இந்த எளிதான பொடிமாஸ் வகை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம். உணவாகவும் அப்படியே சாப்பிடவும் பரிமாறலாம்.

பொடிமாஸ், இது நாட்டு வாழைக்காய் அல்லது நேந்திரங்காயிலும் செய்யலாம், முறை ஒன்றே

செய்முறை விளக்கம்:
வாழைக்காய்-2
வெங்காயம் பொடியாக நறுக்கியது -1 (பெரியது). இது பொடிமஸுக்கு சுவை கூட்டும்.
இஞ்சி-1 அங்குலம் தோல் சீவி,பொடியாக நறுக்கியது


தேங்காய் துருவல்-1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை-5
பச்சைமிளகாய்-1
மிளகுத்தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு சுவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி,
கடுகு-1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு-1/2 தேக்கரண்டி
சீரகம்-1/4 தேக்கரண்டி
செய்முறை:
வாழைக்காயை ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து (தோல் நிறம் கருப்பாக மாறிவிடும்) எடுத்துக்கொள்ளவும், சூடு ஆறியபின் தோல் உரித்து உதிர்த்தோ, அல்லது துருவியோ வைத்துக்கொள்ளலாம். (இங்கு படத்தில் உதிர்த்து காண்பிக்கப்பட்டுள்ளது).

பிறகு, வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்து, அரிந்து வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். சற்று வெந்ததும், கறிவேப்பிலை சேர்த்து உதிர்த்த வாழைக்காய் சேர்த்து உப்பு தூவி கிளறி விடவும். மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடம் மூடிவைத்து ஒன்றுசேர்ந்து வேகவிடவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம். இது வறுவலாக புட்டு பதத்திற்கு இருக்க வேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைப்பதிற்கு முன்பாக மிளகுத்தூள், துருவிய தேங்காய், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். சுவையும் மனமும் பிரமாதமாக இருக்கும்.

தயிர் அல்லது ரசம் சாதத்துடன் வாழைக்காய் பொடிமாஸ் அசத்தல்

Valaikkai Podimas

கூட்டுக்காய் பிரட்டல்/ Mixed Vegetable Masala

கூட்டுக்காய் பிரட்டல்:

English recipe please click link:  http://wp.me/p1o34t-1gK
மதிய உணவின் ஆர்வத்தை தூண்டுவது அதன் துணை சேர்க்கையான காய்கறிதான். காய்கறியில் தான் எத்துணை வகை! கணக்கிலடங்கா கறிவகையும் அதன் சுவையும் அருமை. பிரட்டல், துவட்டல்,கூட்டு, பொரியல்
பச்சடி, மண்டி, கோலா இன்னும் புதிய கண்டுபிடிப்புகள். நம் நாக்கின் சுவை அரும்புகள் மலரும் வண்ணம் சமைத்து மகிழ்வோம்.
அசத்தும் ருசிச்சிறப்பு இந்த கூட்டுக்காய் பிரட்டலுக்கு உண்டு, சுவை மட்டுமன்றி அனைத்து காய் சேர்க்கையின் சத்தும் கலந்தது இதன் முக்கியச்சிறப்பு. சிறந்த சேர்க்கை ரொட்டி அல்லது சாதம், ரசம்.

கூட்டுக்காய் பிரட்டல்/ Mixed Vegetable Masala
கூட்டுக்காய் பிரட்டல்/ Mixed Vegetable Masala

செய்யத்தேவையான பொருட்கள்:
காய் வகை- 500 கிராம்
காலிஃளார் , பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீட்ரூட்,குடைமிளகாய் மற்றும் காரட்.
வெங்காயம் -1
தக்காளி -1
இஞ்சிபூண்டு விழுது -2 தேக்கரண்டி
மசாலா பொடி-1 தேக்கரண்டி
மிளகாய் பொடி-2 தேக்கரண்டி
உப்பு -1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
சோம்பு -1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
செய்முறை:
காய் வகையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும், இரண்டு நிமிடத்தில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெட்டிய உருளைக்கிழங்கு,பீட்ரூட் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்னர் இதர காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அல்லது அனைத்து காய்களையும் பக்குவமாக வேகவைத்தும் சேர்க்கலாம்.
உப்பு, மசாலாபொடி, மிளகாய்ப்பொடி சேர்த்து கிளறவும், 1/2 கோப்பை தண்ணீர் சேர்த்து
மூடி இட்டு பூப்போன்று வேகவிடவும்.
தேவைக்கேற்ப தேங்காய்ப்பால் அல்லது 2 மேஜைக்கரண்டி தேங்காய், சீரகம் அரைத்த விழுது சேர்த்து சுருளவிடவும், இது சுவைகூட்டுவதோடு விருந்துக்கு அளவும் அதிகமாகும்.

சத்து நிறைந்த கூட்டுக்காய் பிரட்டல் தயார்

பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry

பூக்கோசு மிளகு வறுவல் :

Cauliflower pepper fry  recipe in English:  http://wp.me/p1o34t-5Y

பூக்கோசு (காலிபிளவர் ) சுவையான பூக்கோசு மிளகு வறுவல் அனைவருக்கும் ஏற்றது, செய்முறையும் எளிமையானது. காரக்குழம்பு, சாம்பார் போன்றவற்றிற்கு இணையாகும். உடன் தயாரித்த மிளகுத்தூள் இதன் சுவைச்சிறப்பு.

பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry
                                   பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry

 செய்யத்தேவையான பொருட்கள்:
பூக்கோசு -500 கிராம்
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-1
மிளகுத்தூள்-1 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
கடுகு-1/2
கறிவேப்பிலை-1 கொத்து
மிளகுத்தூள்:
மிளகு-1 தேக்கரண்டி
சீரகம் -1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு -1 1/2 தேக்கரண்டி
மேலேகூறிப்பிட்டுள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து, சூடு ஆறியது பொடித்துவைத்துக்கொள்ளவும்.

13900984_1166014326773509_160560941_n
செய்முறை:
பூக்கோசை வெந்நீரில் உப்பு சேர்த்து அதில் போட்டு 3 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் நீரை வடித்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
மேல்கூறியபடி மிளகுத்தூள் தயாரித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பிறகு பூக்கோசு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில், சிறிது நீர் தெளித்து, மூடிவைத்து வேகவிடவும்.
மிதமான தீயில், பொறுமையாக வேகவைத்தால் நிறம் வெண்மையாக இருக்கும்.

அல்லது பூக்கோசை ஆவியில் வேகவைத்தும் எடுத்துக்கொள்ளவும்.
பூக்கோசு நன்கு வெந்ததும் பொடித்துவைத்துள்ள மிளகு பொடியை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry
                                               பூக்கோசு மிளகு வறுவல் / Cauliflower pepper fry

வாழைக்காய் மீன் வறுவல் / Vazhaikkai Varuval

வாழைக்காய் மீன் வறுவல் :For English please click: http://wp.me/p1o34t-o0
பெருமை வாய்ந்த வாழை மரம் முழுமையான மகத்துவம் நிறைந்தது, அதன் அடி முதல் நுனி வரை பயன் தரக்கூடியது. முக்கியமாக நாம் சமையலில் பயன்படுத்தும். வாழைக்காய்,வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், முறையே சமைத்த இவை அனைத்தையும் வைத்து உட்கொள்ள உதவும் வாழை இலை. அற்புதம், இதன் மருத்துவ குணம் நிறைந்த படைப்பு.
வாழைக்காயின் மிக எளிய, ருசியான குறிப்பு வாழைக்காய் வறுவல், இது ரசம் சாதம், சாம்பார் சதம், தயிர் சாதம் என எல்லாவற்றுடனும் பொருந்தும்.

வாழைக்காய் வறுவல் / Vazhaikkai Varuval
வாழைக்காய் வறுவல் / Vazhaikkai Varuval
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் 2
சோம்பு-1 தே .க
சீரகம் 1/2 தே .க
தக்காளி-1 சிறிய
பூண்டு-5 பல்
மிளகாய்த்தூள்-1 தே .க
மஞ்சள்தூள்-1/4 தே .க
உப்பு-1/2 தே .க12166657_971440276230916_1201587656_nசெய்முறை:
1. வாழைக்காயை படத்தில் காண்பது போல் தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும். (தண்ணீரில் போட்டு வைக்கவும் நிறம் கருக்காமல் இருக்கும்.)12167478_971440296230914_854210863_n2.வாழைக்காய்த்தவிர அனைத்து பொருட்களையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
3.நறுக்கிய வழைக்கயுடம் அரைத்த விழுதை சேர்த்து பிசறவும்.12165970_971440246230919_1919881796_n4. அடி கனமான பத்திரத்தில், 4 தேக்கரண்டி எண்ணெய் காய வைத்து கறிவேப்பிலை சேர்த்து பிசறிய வாழைக்காயை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். த ண்ணீர் சேர்க்காமல் வேகும் வரை வதக்கவும்.12164505_971440196230924_99228743_oவாழைக்காய் வறுவல் ரெடி.
வாழைக்காய் வறுவல் / Vazhaikkai Varuval
வாழைக்காய் வறுவல் / Vazhaikkai Varuval

காளான் மிளகு வறுவல் / Mushroom Pepper Fry

காளான் மிளகு வறுவல் / Mushroom Pepper Fry :

For recipe in English click here:   http://wp.me/p1o34t-60

சுலபமான சமையல் கலையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி எளிமையான, சத்து நிறைந்த, சமையல் குறிப்புகளை இந்த செட்டிநாடு குக் புக் தேர்ந்தெடுத்து உங்களுக்காக இந்தப்பதிவில் வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று மிக எளிய காளான் மிளகு வறுவல் செய்முறை பார்க்க உள்ளோம் .

மருத்துவ குணம் நிறைந்த இந்தக்காளான் பற்றி அனைவரும் அறிந்ததே, சுவையும், மனமும், கூடவே சத்தும் நிறைந்த இந்த காளான் உடலுக்கு பலத்தையும், தெம்பையும் கொடுக்கவல்லது. இவ்வளவு அறிந்தும் ஏன் காளான் மாத்திரைகள்? நேரடியாக காளான் சமைத்து அதன் லாபத்தை பெறுவோமே!

காளான் மிளகு வறுவல்
காளான் மிளகு வறுவல்

தேவையான பொருட்கள் மிக குறைவு:
காளான் -200 கிராம், சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்

11911448_943838362324441_1558583106_n
உப்பு-1/2 தேக்கரண்டி
மிளகு போடி-1/2 தேக்கரண்டி
எண்ணெய் -2 தேக்கரண்டி
செய்முறை:
கடாயைக்காய வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய காளான் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
உப்பு சேர்த்து கிளறவும்,இப்பது வேகத்தேவையான நீர் அதிலிருந்தே சுரக்கும் ஆகையால் தண்ணீர் சேர்க்கத்தேவையில்லை.

11911788_943838312324446_1916700743_n
சில நொடிகளில் வெந்துவிடும் குணம் உடையது காளான். இப்போது முனுக்கிய மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

11937923_943838315657779_1127008395_n

இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது ப்ரெட்டுடன் சேர்த்தும் பரிமாறலாம்

குறிப்பு : இதனுடன் முட்டை சேர்த்து கிளறலாம் காலை உணவிற்க்கு  ஏற்றது.