கத்தரிக்காய் கொத்சு / Brinjal Kothsu

கத்தரிக்காய் கொத்சு:

ஆடலரசன் நடராஜர் வீற்றிருக்கும், சிதம்பரத்தின் உணவுச்சிறப்பு இந்த கத்தரிக்காய் கொத்சு. அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றுமொரு பெருமை, இதைத்தொடர்ந்து நம் நகரத்தார் அதிகம் வாழும் இடம் சிதம்பரம் ஆயிற்று. நான் ருசித்து விரும்பிய இந்த “கொத்சு” அங்கு வசித்துவரும் மக்களிடம் கேட்டறிந்த செய்முறை இங்கு உங்களுக்காக.

வறுத்து பொடித்த மல்லி, மிளகாயின் மண ம் இதன் தனிச்சிறப்பு. இது நமது பிரதான உணவான இட்லி ,தோசைக்கு நல்ல சுவை கூட்டும் .

கத்தரிக்காய் கொத்சு / Brinjal Kothsu
கத்தரிக்காய் கொத்சு / Brinjal Kothsu

செய்யத்தேவையான பொருட்கள்:
வறுத்து பொடிக்க :

சிவப்பு மிளகாய் -4
மல்லி-1 மேஜைக்கரண்டி
1 தேக்கரண்டி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து, இடித்து, போடி செய்து, தயாராக வைத்துக்கொள்ளவும்.


கத்திரிக்காய் – 1/2 கிலோ
வெங்காயம்-1 பெரியது
தக்காளி -1 பெரியது
கறி வேப்பிலை
உப்பு -1 தேக்கரண்டி
புளி -1 மேஜைக்கரண்டி சாறு
செய்முறை:
கத்தரிக்காய், வெங்காயம் , தக்காளி பச்சை மிளகாய் வெட்டிவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிதம் செய்யவும்.
நறுக்கிய. கத்தரிக்காய், வெங்காயம் , தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் ,

2 கோப்பை நீர் சேர்த்து நன்கு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.


பிறகு, மையாக கடைந்து கொள்ளவும், வறுத்து பொடித்த மிளகாய், மல்லி போடி சேர்த்து,

உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
மல்லி இல்லை தூவி பரிமாறவும்.

கத்தரிக்காய் கொத்சு / Brinjal Kothsu
கத்தரிக்காய் கொத்சு / Brinjal Kothsu

குறிப்பு:
கத்தரிக்காய் மட்டும் வேகவைத்து கடைந்து கொண்டு, தக்காளி வெங்காயம் வதக்கியும், பொடி கலந்து செய்யலாம்.

நவரத்தினக்குருமா / Navarathina kuruma

நவரத்தினக்குருமா :
நவரத்தினமாய், வண்ணமயமான காய்கறிகளுடன் பக்குவமாய் மசாலாக்களை சேர்த்து சுவையோடு, மனமும் கலந்து, பார்த்தவுடன் சாப்பிடத்தோன்றும் அருமையான நவரத்தின குருமா. இதற்கு இணையாக சப்பாத்தி, பூரி, பரோட்டா மற்றும் இடியப்பம் பரிமாறலாம்.

Recipe in English click link – http://wp.me/p1o34t-hf

நவரத்தினக்குருமா / Navarathina kuruma
நவரத்தினக்குருமா / Navarathina kuruma

தேவையான பொருட்கள்: 4 to 6 servings
கேரட் -1/2 கோப்பை
காலிபிளவர் (பூக்கோசு)-1 கோப்பை
பீன்ஸ் -1/2 கோப்பை
உருளைக்கிழங்கு-1
தக்காளி -1
வெங்காயம்-1
பச்சை பட்டாணி-1/2 கோப்பை
மக்காச்சோளம் -1/2 கோப்பை
தயிர்-1 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
உப்பு-1 1/2 தேக்கரண்டி
கரம்மசாலாதூள்-1/2
அரைக்க:
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
தேங்காய் -1 மூடி
பொட்டுக்கடலை -2 தேக்கரண்டி
பாதாம் பருப்பு-4
பச்சை மிளகாய்-5

தாளிக்க:
எண்ணெய்- 2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2
பட்டை,
லவங்கம்,
கிராம்பு

செய்முறை :
1.காரட், பீன்ஸ், காலிபிளவர்,உருளைக்கிழங்கு, இவற்றை சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்.
2.தக்காளி மாற்று வெங்காயம், வெட்டி வைத்துக்கொள்ளவும்.
3.அரைக்கும் பொருட்களை நல்ல விழுதாக அரைத்துவைத்துக்கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
5. இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும், வெட்டிய வெங்காயம் மாற்று காய் கறிகள் சேர்த்து 2 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
6.பிறகு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
7.சிறிது நேரம் வதங்கிய பின்னர் பச்சை பட்டாணி, மக்காச்சோளம் சேர்த்து, தண்ணீர் இரண்டு கோப்பை சேர்த்து நன்கு வேக விடவும்.
8. காய் வெந்ததும், தயிர், அரைத்த விழுது சேர்த்து மிதமானத்தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
9. மசாலா வாடை மாறியதும் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
10. சப்பாத்தி, பூரி, பரோட்டா இவைகளுக்கு ஏற்ற பதார்த்தம் நரத்தின குருமா.

13672356_1148028208572121_461237785_n

தெறக்கி கோசுமல்லி / Therakki kosumalli

தெறக்கி கோசுமல்லி:
செட்டிநாடு ஸ்பெஷல் கோசுமல்லி ஒரு இதமான சுவையுடைய  இட்லி, தோசைவகை தொட்டுக்கொள்ளும் பதார்த்தம் என்று சொல்லலாம். உப்பு, புளிப்பு, காரம் என எல்லா சுவையும் மிதமாக இருக்கும். அதில் இரண்டு வகையுண்டு, ஒன்று கத்தரிக்காயை அவித்து தோலுரித்து அல்லது நேரடியாக சுட்டு தோலகற்றி செய்வது மற்றொரு முறை சிறு துண்டுகளாக நறுக்கி தெறக்கி செய்வது. நாம் இங்கு காண இருப்பது இரண்டாவது முறை தெறக்கி கோசுமல்லி. ஒப்பிடும் போது இதில் சுவை கொஞ்சம் கூடுதலாகும் ஏனெனில் நறுக்கிய காய்கள் எண்ணெயில் வதக்குகிறோம் 🙂 . அவித்து செய்யும் முறை முன்பே பதிவு செய்துள்ளோம் . இது இட்லி, தோசைவகை, ஆப்பம் இவற்றிற்கு ஏதுவாகும்.

தெறக்கி கோசுமல்லி / Therakki kosumalli
தெறக்கி கோசுமல்லி / Therakki kosumalli

செய்யத்தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்-1/4 கிலோ
தக்காளி-1
பச்சைமிளகாய்-4 லிருந்து 7 வரை
கறிவேப்பிலை 1 கொத்து
சின்ன வெங்காயம்-10
புளிகரைத்தது – 1 மேஜைக்கரண்டி அளவு
தாளிக்க:
எண்ணெய் -5 தேக்கரண்டி
கடுகு-1/2 தே .க
உளுத்தம்பருப்பு-1/2 1/2 தே .க
செய்முறை:
1. கத்திரிக்காய் சிறு துண்டுகளாக (கூட்டுக்கு நறுக்குவது போல்) நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
2.வெங்காயம் தோலுரித்து, தக்காளி பச்சை மிளகாயையும் வெட்டி தயாராக வைக்கவும்
3.எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்து, வெங்காயம், கத்திரிக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.(நறுக்கிய கத்திரிக்கயை நீர் வடித்து, எடுத்து வதக்கவும்).

12939147_1074791755895767_686246781_n
4. நன்கு வதங்கி தோல் நிறம்மாறி வரும்போது கறிவேப்பிலை, வெட்டிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

12939539_1074791749229101_163981261_n
5. தக்காளி வதங்கியதும், உப்பு, கரைத்த புளி சேர்த்து 3 கோப்பை தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
குக்கரில் வைத்தால் தண்ணீரை குறைத்துக்கொள்ளவும் ஒரு விசில் வரும்வரை விட்டு எடுக்கவும்.
6. கத்திரிக்காய் வெந்ததும் கடைந்துவிடவும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்,

தெறக்கி கோசுமல்லி ரெடி

12939374_1074791732562436_1180797678_n

கடலைக்கறி / Kadalaikkari

கடலைக்கறி :
நம் நாட்டில் சுவையான புட்டு வகை – இனிப்புப்புட்டு, மோர் புட்டு தாளித்தல், புட்டு கொழுக்கட்டை, இன்னும் பலவகைசெய்வதுண்டு. கேரளத்தில் மிகவும் பிரபலமான உணவு இந்த புட்டு கடலைகறி, கேரள மக்களால் விரும்பி உண்ணும் உணவு இந்த புட்டுக்கு இணையாக கடலைக்கறி நம்மில் பலரும் விரும்பி செய்வதுண்டு ஆகையால் இந்த செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளோம்.

கடலைக்கறி / Kadalaikkari
கடலைக்கறி / Kadalaikkari

செய்யத் தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை( கருப்பு ) -1 கோப்பை
வெங்காயம்-1
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது-2 தேக்கரண்டி
சிவப்புமிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் -1/2தேக்கரண்டி
அரைக்க :
வர மிளகாய்-5, மிளகு -1/2 தே .க
மல்லி-11/2 தேக்கரண்டி
பட்டை-1 சிறியது
கிராம்பு-2
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
தேங்காய்-2 மேஜைக்கரண்டி
இவற்றை வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய் ந்ததும் வறுத்துக்கொள்ளவும்.
ஆறியதும் விழுதாக அரைத்துவைத்துக்கொள்ளவும்.
வேங்காயம் தக்காளியைப்பொடியாக வெட்டிவைத்துகொள்ளவும்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை-2 கொத்து
வரமிளகாய்-2
செய்முறை:
1. கொண்டைக்கடலை 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 3 விசில் வேகவைத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் காயவைத்து, மேலே தளிக்க பொருட்களை தாளிதம் செய்துகொள்ளவும்.
3. வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பிறகு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நல்லமனம் வரும் வரை வதக்கவும்.
4. தக்காளி, உப்பு சேர்த்து தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.
வேகவைத்த கொண்டைக்கடலை, அரைத்த விழுது, 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள்,சிவப்புமிளகாய்த்தூள் சேர்த்து 10 நிமிடம் இளந்தீயில் கொதிக்கவிடவும்.
5.கொத்தமல்லி இலை தூவி புட்டுடனோ, சப்பாத்தி உடனோ பரிமாறலாம்.

கடலைக்கறி / Kadalaikkari
கடலைக்கறி / Kadalaikkari

குறிப்பு: 

மல்லி, பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் இதற்கு பதிலாக கரம் மசாலா தூள் சேர்த்துக்கொள்ளலாம் .       http://wp.me/p6uzdK-3P

வரமிளகாய்த்தொக்கு / Milagaai thokku

வரமிளகாய்த்தொக்கு :

For English please click here:     http://wp.me/p1o34t-vr
வர மிளகாய்த்தொக்கு மிக விரைவாகத்தயார் செய்து விடலாம் தேவையான பொருட்களோ குறைவு. சில நிமிடங்களில் தயாராகிவிடும் இந்த தொக்கு நல்ல காரமாக இருக்கும். இது இட்லி, தோசை காரப்போடிக்கு பதிலாக பரிமாறலாம். எப்போதும் சதா இட்லி பொடி போர் அடித்து விட்டதா? முயற்சி செய்யுங்கள் சூடான இட்லியோடு இது சுவையாக இருக்கும். சிறு துளி தொட்டு சாப்பிட்டால் போதும் பச்சைப்பூண்டுடன் வருத்த மிளகாய், நல்லெண்ணெய் சேர்ந்து அற்புதமான சுவையாக இருக்கும்.இது 10 இருந்து 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

Red Chilli Thokku
தேவையான பொருட்கள்: இந்த அளவு 20திலிருந்து 30 இட்லி வரை தொட்டு சாப்பிடலாம்.
வரமிளகாய்-10
பூண்டு-4 பல் தோல் உரித்து வைத்துக்கொள்ளவும்.
உப்பு -1/2 தேக்கரண்டி

DSC09132
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, மிதமான தீயில் வரமிளகாயை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
இத்துடன் உரித்த பூண்டு , உப்பு சேர்த்து கரகரப்பாக இடிதுக்கொள்ளவும்.
மிளகாய்த்தொக்கு ரெடி.அரைத்தவுடன் இது காரமாக இருக்கும் அடுத்தநாள் காரம் குறைந்துவிடும்.
பரிமாறும்போது இதில், நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துகொள்ளவும்.

இது 10 இருந்து 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்

DSC09138
குறிப்பு:
மிளகாயை சிறிது இடித்துக்கொண்டு, பிறகு உப்பு, பூண்டு சேர்த்து இடிக்கவும்.
தொக்குடன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பரிமாறவும்.
பச்சைப்பூண்டு வாடை பிடிக்காவிட்டால் சிறிது வதக்கிக்கொள்ளலாம்

கத்திரிக்காய் தெரக்கல் / Brinjal Therakkal

கத்திரிக்காய் தெரக்கல் / Brinjal Therakkal:

For English please click:        http://wp.me/p1o34t-k4

கத்திரிக்காய் தெரக்கல் :
செட்டிநாட்டுப்பகுதியில் இதை, கத்திரிக்காய் தெரக்கல், கத்திரிக்காய் அவியல் அல்லது கள்ள வீட்டுக்கதிரிக்காய் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
பெயர் காரணம்: குறிப்பிட்ட மக்கள், பொதுவாக இதை அடிக்கடி தங்கள் காலை உணவிற்கு தயாரிப்பார்கள். காரணம் தங்கள் துறையில் கடின உழைப்பைச் செய்யவும், அவர்களுக்கு முழு நாள் சுறுசுறுப்பக செயல்படவும், ஆற்றல் மிக்க பூர்த்தியான முழு உணவாக இது அமையும். மேலும் இதன் உள்ளீடு குறைவு அனால் அதிக அளவு கிடைக்கும். அதனால் தாராளமாக உண்ணவும், விருந்தளிக்கவும் எளிதாகச்செய்து விடலாம்.
தெரக்கல் என்றால் எண்ணெயில் வதக்குதல் என்று பொருள், ஆகையால் இதன் சுவையும் அதிகம்.பொதுவாக செட்டிநாட்டு கல்யாணங்களில் சிறப்பாக பரிமாறப்படும்.

பொருளடக்கம்:
கத்திரிக்காய்-1/4 கி
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் – 1
தக்காளி-2

அரைக்க :
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
பூண்டு-4 பல்
தேங்காய்- 3 மேஜைக்கரண்டி
பொட்டுக்கடலை – 1 மேஜைக்கரண்டி
வர மிளகாய்-7 அல்லது மிளகாய் பேஸ்ட்
அனைத்து பொருட்களையும் நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

தளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2 தேக்கரண்டி
உளுந்து-1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை-2 கொத்து
செய்முறை:
1.கத்திரிக்காய், வெங்காயம், உருளைகிழங்கு, மற்றும் தக்காளியை கன வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் காயவைத்து மேற்கூறிய “தளிக்க” பொருட்களை தாளிதம் செய்யவும்.
3.கறிவேப்பிலை வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் 2 நிமிடங்களுக்கு பிறகு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. தக்காளி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து தக்காளி தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.
5. இப்போது அறைத்த விழுது, 2 கோப்பை தண்ணீர் சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
சூடான இட்டலி தோசையுடன் பரிமாறவும்.

 

DSC08193

மிளகாய் துவையல் / Red chilli chutney

மிளகாய் துவையல் :
கவர்ச்சிகரமான வண்ணக்கலவை, மல்லிகைப்பூ இட்டலியும் காரசாரமான மிளகாய் துவையலும் ஈடில்லா இணையாகும். எளிதாக இருந்தாலும் சுவையோ அலாதி. மிளகாய் துவையல் இட்டலி தோசை, உத்தப்பம் போன்றவற்றிற்கு இணையாகும் .

மிளகாய் துவையல்
மிளகாய் துவையல்

தேவையான பொருட்கள் :
வரமிளகாய்-5 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
வெங்காயம் -1 பெரியது
சிவப்பு தக்காளி-1 பெரியது
புளி சிறிது, தேவைப்பட்டால் பூண்டு 5 பல் சேர்த்துகொள்ளலாம்
உப்பு-1/2 தேக்கரண்டி
தளிக்க:
எண்ணெய் -3 தேக்கரண்டி
கடுகு-1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு-1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் -1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை :
1. வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
2. தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
3. வெங்காயம், தக்காளி, உப்பு, புளி, மிளகாய் அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக அரைக்கவும். குறிப்பு : மற்றொரு விதம் இந்தக்கலவையை வதக்கியும் அரைக்கலாம்.
4. வானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். கறிவேப்பிலை, அரைத்த துவயலையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
5. சுவையான காரசாரமான மிளகய்த்துவயல் தயார். இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.

11910641_941450342563243_1275661493_n

குறிப்பு: மற்றொரு விதம் இந்தக்கலவையை வதக்கியும் அரைக்கலாம்.