மாங்காய் பச்சடி/ Mango Pachadi

மாங்காய் பச்சடி:
அனைவருக்கும் செட்டிநாடு குக் புக்கின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அறுசுவையுடனும் பெரியோர்களின் நல் ஆசிபெற்று இனிதே துவங்குவோம்.
தமிழ் புத்தாண்டின் சிறப்பு உணவு மாங்காய் பச்சடி, அறுசுவையும் கலந்து சமைக்கப்படும் இந்த பச்சடியின் கருத்து: இதில் சேர்க்கப்படும் ஆறு சுவையும் ஆறு குணங்களாக இனிதே இவ்வருடத்தில் கையாள இறைவனிடம் வேண்டி இந்தப் பச்சடியை உட்கொள்கிறோம். இனிப்பிற்கு வெல்லம்: புளிப்பு, துவர்ப்பிற்கு கொட்டையுடன் சேர்க்கும் மாங்காய்; கசப்பிற்கு வேப்பம்பூ; சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் துளி உப்பு; காரத்திற்கு தாளிதம் செய்யும் வரமிளகாய் என அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கி செய்யப்படுகிறது. சுவையோ அலாதி !

 

மாங்காய் பச்சடி:
                                                             மாங்காய் பச்சடி

செய்முறை விளக்கம்:
தேவையான பொருட்கள் :
மாங்காய்-2
வெல்லம் -1/2 கோப்பை
உப்பு-1 சிட்டிகை
வேப்பம்பூ-1 கொத்து
தளிக்க:
எண்ணெய் அல்லது நெய்-1 தேக்கரண்டி
கடுகு-1/2
வரமிளகாய்-1
கறிவேப்பிலை-1 கொத்து.
செய்முறை:
1. மாங்காய் தோல், கொட்டையுடன் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். (தோல்,கொட்டையுடன் சமைத்தல் முழுமையான சுவைடனும் மற்றும் ஜாம் போலாகிவிடாமல் இருக்கும்)
விருப்பத்திற்கு ஏற்ப, தேவையெனில் தோல் அகற்றியும் செய்யலாம்.


2. 1/2 கோப்பை தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.மாங்காய் சில மணித்துளிகளில் எளிதாக வெந்துவிடும்.
3. நன்கு வெந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
4. நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும் உப்பு,வேப்பம்பூ சேர்த்து கிளறிவிடவும்.
5. மேலே கூறிப்பிட்டுள்ள பொருட்கள் கொண்டு தாளிதம் செய்யவும்.
அறுசுவையுடைய மாங்காய் பச்சடி ரெடி

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி / Cucumber Raitha

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி :
உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி தருக்கூடியது வெள்ளரிக்காய். இதை நாம் நமது அன்றாட உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடும் வெய்யிலின் தாக்கத்திலிருந்து தங்களை பதுகத்து கொள்வது மிகவும் அவசியம். வேலைக்கு செல்பவர்கள் இதை எடுத்துச்செல்லாம். பச்சை மிளகாய் சேர்ப்பதால் இது நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை புளிக்காதிருக்கும்.
வெள்ளரிக்கையின் நற்குணங்கள் பற்றி சில கருத்துக்கள், வரும்முன் காப்போம் என்பதற்கு ஏற்ப:

1.வெள்ளரிக்காய் ஒரு குளிர்ச்சியூட்டி, உடல் சூட்டைத்தனித்து ஆரோக்கியமாக வைக்கும்.
2. வியர்வையின் துர் நாற்றத்தை குறைக்கும்.
3. வெய்யிலின் காரணமாக, வயிற்றுப்போக்கு, வாயிற்று வலி, வியர்கூரு, கண் எரிச்சல், நீர் கடுப்பு போன்ற உபாதைகளில் இருந்து தங்களை பாதுகத்துக்கொள்ள உதவுகிறது.
சில மணித்துளிகளில் செய்யக்கூடிய வெள்ளரிக்காய் பச்சடி ஓர் எளிய அருமையான சுவையுடையது, சிறியவர் முதல் பெரியவர் வரை தாராளமாக உட்கொள்ளலாம்.
வெள்ளரிக்காயை பச்சையாக துருவி செய்வதால் எல்லோரும் எளிதாக சாப்பிடலாம். சப்பாத்தி, பூரி, சாதம் என எல்லா வகையோடும் இணையாக்கலாம்.

12946927_1070321879676088_154141302_o
செய்முறை:
வெள்ளரிக்காய்-100கிராம்
காரட் துருவியது 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை-1 கொத்து
உப்பு=1/4 தேக்கரண்டி
கெட்டி தயிர்-2 மேஜைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -1 தேக்கரண்டி
கடுகு-1/4 தேக்கரண்டி
பெருங்காயம்-1/4 தேக்கரண்டி
1. வெள்ளரிக்காயைக்கழுவி தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
2.காரட் துருவிக்கொள்ளவும்

12935432_1070321919676084_1050986769_n
3.துருவிய இரண்டையும் உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும்.

12935383_1070321899676086_885384448_n
4..எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்து பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதன் மேலே கொட்டவும்.

12939168_1070321896342753_1084189941_n
5. கலக்கி பரிமாறவும்.