பூண்டு தொக்கு / Garlic Thokku

பூண்டு தொக்கு :
மருத்துவ குணம் நிறைந்த பூண்டு, அதன் முழுமையாhttps://wp.me/p6uzdK-ghன சுவையுடன் சுலபமாக தயாரித்த தொக்கு 10 முதல் 15 நாட்கள் வரை வைத்து சுவைக்கலாம். இது இட்லி, தோசை சாதம் என அனைத்துடனும் ஒத்து சுவைதரும்.


செய்யத்தேவையான பொருட்கள்:
பூண்டு 100கிராம்
எலுமிச்சை சாறு -1 மேஜைக்கரண்டி
உப்பு -1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி
வறுத்த  வெந்தயத்தூள்- ஒரு சிட்டிகை ஒரு சிட்டிகை
பொடித்த வெல்லம் -1/2 தேக்கரண்டி

தாளிக்க
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
தாளிக்க -:
(தேங்காய் எண்ணெய் )
செய்முறை:
பூண்டை தோல் உரித்து சிறிது எண்ணெய் விட்டு லேசாக சிவக்கும் வரை வதக்கிக்கொள்ளவும்.


அதை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.


வானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்துக்கொள்ளவும்.
அரைத்தப்பூண்டு விழுது சேர்த்து உடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் கிளறிவிடவும்.


சுருண்டு வந்ததும், இறுதியாக பொடித்த வெல்லம், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
சுவையான பூண்டு தொக்கு தயார்.