Category: தூள். podi
வத்தல் சாதப்பொடி/Vathal Rice mix
வத்தல் சாதப்பொடி
சுண்ட வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தல் சேர்த்து செய்யும் அற்புதமான, ஆச்சரியமூட்டும் சத்துக்கள் அடங்கிய சாதப்பொடி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகிட நம் முன்னோர்கள் பின்பற்றிய அற்புத சக்தி, இயற்க்கை உணவு வகை இந்த பொடி செய்வதும் சுலபம், சேர்க்கும் பொருட்களும் குறைவே. சாதாரணமாக வத்தல் குழம்பில் சேர்க்கும் பொது பெரும்பாலும் அதை அகற்றி விட்டே உட்கொள்கிறோம் வத்தலின் முழுமையான சத்து நமக்கு உள்ளே சேருவது இல்லை இதன் அருமை தெரியாமல் நாம் அதன் சுவை கருதி அகற்றி விடுகிறோம் ஆனால் இதன் உண்மையான சத்துக்கள் நாம் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது சில குறிப்புகள் இங்கே,
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைத் தவிர, உயர்தர புரதங்கள், இதன் உணவு இழைகள் அடர்த்தியாக நிரம்பியுள்ளன. இது இயற்கையாகவே கார்ப்ஸ், கலோரிகள், கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது, இது எடை இழப்பு உணவுகளில் இணைவதற்கு ஏற்றதாக அமைகிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது
இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது
நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது
மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது
இதய ஆரோக்கியம் தருகிறது
காய்ச்சலை திறம்பட எதிர்த்து நிற்கிறது
சிறுநீரக செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது
நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு சக்தியை கொடுக்கிறது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சக்தியாகும். சூப்கள், கறி, பருப்பு போன்ற பல உணவுகளை சமைப்பதில் இதைப் பயன்படுத்தலாம், மேலும் உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் சுவையூட்டப்பட்ட உலர்ந்த வகையாகவும் உட்கொள்ளலாம். உங்கள் வழக்கமான உணவில் சேர்க்கவும், அது வழங்கும் அற்புதமான ஆரோக்கிய சலுகைகளை முழுமையாக பெறலாம்.
சாதப்பொடி :
பொடி வகையாக செய்யும் பொது உட்கொள்ளும் அளவு சற்று அதிகமாகும், முழுமையான சக்திகளையும் பெற உதவும் சற்று கசப்பு சுவைத்தான், எனினும் நெய்யோடு சேர்த்து உண்ணும் போது அதிகம் தெரியாது பாவற்காய் போன்றே இருக்கும், தேவைப்பட்டால் இங்கு குறிப்பிட்ட அளவிற்கு சற்று அதிகமாக பருப்பு சேர்த்துக்கொள்ளலாம் கசப்புத்தன்மையை குறைக்க உதவும். இதோ கீழே செய்முறை.
செய்யத்தேவையான பொருட்கள்:
சுண்ட வத்தல் – 50 கிராம் பக்குவமான முறையில் செய்த வத்தல் பெற்றிட
Https://www.chettinadsnacksonline.com/collections/vathal/products/sundakkai-vathal
- (மிளகு தக்காளி வத்தல்)-25 கிராம்
- மணத்தக்காளி வத்தல்-25கிராம்
- உளுத்தம் பருப்பு-50 கிராம்
- மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்-3,4
- மிளகு-1/2 தேக்கரண்டி
- சீரகம் ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை ஒரு பிடி
- பெருங்காயம்-1/4 தேக்கரண்டி
- உப்பு சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.
செய்முறை:
வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்
பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம், வறுக்கவும் இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் வருத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடி யாக அரைத்துக்கொள்ளவும்.
சூடான சாதத் தோடு நெய்சேர்த்து கலந்து சாப்பிடவும், ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திடவும்.
இட்லி தோசை காரப்பொடி / Idli Dosa Kara Podi
இட்லி தோசை காரப்பொடி:
For English please click: http://wp.me/p1o34t-6s
அன்றாடம் இட்லி தோசையில் கண்விழிப்பது நமது தென்னிந்திய கலாச்சாரம். பல வகை சைடு டிஷ்கள் தொட்டுக்கொள்ள செய்தாலும் இட்லி பொடியின் சுவையை தினமும் ஒரு இட்லிக்கவது வைத்து சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும். காரசாரமான, கரகரப்பான இட்லிபொடியின் சுவை மிகவும் ருசியானது. விடுமுறை நாட்களில் சிலநிமிடம் ஒதுக்கி வீட்டிலேயே மணமான இட்லி போடி செய்து அசத்துங்கள். கடையில் வாங்குவதை விட இது போதுமான அளவு கிடைக்கும்.
செய்யத்தேவையான பொருட்கள்: அளவு 1 கோப்பை – 250 gms
வரமிளகாய்-1 கோப்பை அல்லது-20
கலைப்பருப்பு-1/2 கோப்பை அல்லது-60 கி.ம்
துவரம்பருப்பு 1/2 கோப்பை அல்லது-60 கி.ம்
உளுத்தன்பருப்பு-1 கோப்பை அல்லது 110 கிராம்
கறிவேப்பிலை 25 கி ம்
பெருங்காயம் 1 தேக்கரண்டி
உப்பு 1 தேக்கரண்டி
செய்முறை:
பருப்பு மிளகாய் எலாவற்றையும் தனித்தனியே பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
சிறிது என்னை விட்டு பெருங்காயம், உப்பு இரண்டையும் மிதமான தீயில் பொரித்துக்கொள்ளவும்.
1 தேக்கரண்டி என்னை விட்டு கறிவேப்பிலையை சரசர என்ற வரும் வரை பொரித்தெடுக்கவும்.
எல்லாவற்றையும் ஆற வைத்து, மிளகாய் கறிவேப்பிலை முதலில் அரைத்து பின்னர் வறுத்த பருப்பு வகைகளை சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும் பின்னர் உப்பு பெருங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
காற்றுப்புகாத கொள்கலனில் வைத்து 20 25 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
மிளகு பொடி / Milagu Podi
மிளகு பொடி :
For English please click: http://wp.me/p1o34t-hV
பசியைத்தூண்டும் மிளகுபொடி தோற்றம்- செட்டிநாடு. மிளகு பொடி, சூடான சாதத்தில் நெய்யுடன்சேர்த்து சாப்பிட நன்று. இது சுவையுடன் ஜீரண சக்தியைத்தூண்டும் குணமுடையது. இது விருந்துகளிலும் அன்றாட உணவிலும் பருப்பு நெய்க்கு மாறுதலாக பரிமாறப்படும். மேலும் இந்த பொடியை சமையலில் பல விதமாக பயன்படுத்தலாம் உதாரணமாக,
கத்திரிக்காய், அவரைக்காய் , போன்ற பொரியலிலும் தேங்காய்க்கு பதிலாக தூவி கிளறிவிடலாம்,சுவைகூடுதலாக இருக்கும்.
கூட்டு வகையிலும் சேர்க்கலாம் இது கெட்டித்தன்மையை அதிகரிக்கும்.
இதன் செய்முறை மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள்:
உளுந்து – 1/2 கோப்பை
பச்சரிசி-1 தே .க
மிளகு -1 தே .க
சீரகம்- 1/2 தே .க
உப்பு-1/2 தே .க
மோர் மிளகாய்- 4
செய்முறை:
மேல் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியே, பொன்னிறமாக வறுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் நைசாக அரைத்து போடி செய்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் சமயத்தில் பயன்படுதிக்கொள்ளலாம். இது 3 லிருந்து 4 மாதம் வரை பயன் படுத்தலாம்.
கரம் மசாலா பவுடர் / Garam Masala Powder
Garam Masala Powder, கரம் மசாலா பவுடர்:
For English please click link: http://wp.me/p1o34t-6k
சிறிய முயற்சியால் பெரிய லாபம் ! உடல் ஆரோக்கியத்துடன் சேர்ந்து பணமும் மிச்சம் மனநிறைவு அதிகம் . விடுமுறை நாட்களில் சில நிமிடம் ஒதுக்கி இந்த மசாலாவை எளிதாக வீட்டிலேயே செய்து வைத்துக்கொள்ளுங்கள்
அற்புதமான இந்தியன் மசாலா பொருட்களால் செய்த கரம் மசாலா பவுடர், மனமும், மருத்துவ குணமும் நிறைந்தது. செட்டிநாட்டு சமையலுக்கு சிறப்பு சேர்க்கிறது இந்த மணமான தயாரிப்பு. சைவம் அசைவம் என்ற எல்லா சமையலுக்கும் உகந்தது.
தேவையான பொருட்கள்:
பட்டை – 5 கி ம
கிராம்பு -5 கி ம (10 , 12)
ஜாதிப்பத்திரி -5 கி ம
நட்சத்திர சோம்பு – 5 கிம்
மிளகு -1 தே.க
ஏலக்காய் -10 அல்லது 12
சோம்பு -1/4 கோப்பை அல்லது 1 1/2 மே .க
சீரகம்-1/4 கோப்பை அல்லது 1 1/2 மே .க
மல்லி -1/2 கோப்பை
மராட்டி மொக்கு -5 கி ம்
லவங்க இலை -3, 5
செய்முறை:
வாணலியில் தனித் தனியாக எல்லாவற்றையும் வறுத்துக்கொள்ளவும்.
ஆறியதும் மிக்சியில் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
காற்றுப்புகாத கொள்கலனில் வைத்து,தேவைப்பட்டபோது பயன்படுத்த உதவும்.
வரமிளகாய்த்தொக்கு / Milagaai thokku
வரமிளகாய்த்தொக்கு :
For English please click here: http://wp.me/p1o34t-vr
வர மிளகாய்த்தொக்கு மிக விரைவாகத்தயார் செய்து விடலாம் தேவையான பொருட்களோ குறைவு. சில நிமிடங்களில் தயாராகிவிடும் இந்த தொக்கு நல்ல காரமாக இருக்கும். இது இட்லி, தோசை காரப்போடிக்கு பதிலாக பரிமாறலாம். எப்போதும் சதா இட்லி பொடி போர் அடித்து விட்டதா? முயற்சி செய்யுங்கள் சூடான இட்லியோடு இது சுவையாக இருக்கும். சிறு துளி தொட்டு சாப்பிட்டால் போதும் பச்சைப்பூண்டுடன் வருத்த மிளகாய், நல்லெண்ணெய் சேர்ந்து அற்புதமான சுவையாக இருக்கும்.இது 10 இருந்து 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்: இந்த அளவு 20திலிருந்து 30 இட்லி வரை தொட்டு சாப்பிடலாம்.
வரமிளகாய்-10
பூண்டு-4 பல் தோல் உரித்து வைத்துக்கொள்ளவும்.
உப்பு -1/2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, மிதமான தீயில் வரமிளகாயை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
இத்துடன் உரித்த பூண்டு , உப்பு சேர்த்து கரகரப்பாக இடிதுக்கொள்ளவும்.
மிளகாய்த்தொக்கு ரெடி.அரைத்தவுடன் இது காரமாக இருக்கும் அடுத்தநாள் காரம் குறைந்துவிடும்.
பரிமாறும்போது இதில், நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துகொள்ளவும்.
இது 10 இருந்து 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்
குறிப்பு:
மிளகாயை சிறிது இடித்துக்கொண்டு, பிறகு உப்பு, பூண்டு சேர்த்து இடிக்கவும்.
தொக்குடன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பரிமாறவும்.
பச்சைப்பூண்டு வாடை பிடிக்காவிட்டால் சிறிது வதக்கிக்கொள்ளலாம்