சைவ ஆம்லேட் / Vegetarian omelette

சைவ ஆம்லேட் – Vegetarian omelette :

For recipe in English click,   http://wp.me/p1o34t-be

முட்டையில்லாத ஆம்லெட் !!! ஆச்சரியமாக உள்ளதா? உண்மை, சுவையோ மாற்றமில்லை.
விருந்தாளி சுத்த சைவம், என்ன சிறப்பாக செய்வது என்று குழப்பமா? இதோ உங்களை மகிழ்விக்க ஒரு அற்புதமான, நொடியில் தயாரிக்க கூடிய செய்முறை சைவ ஆம்லேட். ஆரோக்கியமானது, கீரையின் சத்து நிறைந்தது, சுவை மிகுந்தது செய்து பாருங்கள்.

சைவ ஆம்லெட்
சைவ ஆம்லெட்

தேவையான பொருட்கள்:
கீரை முளைக்கீரை-1/2 கட்டு (அல்லது 1 கோப்பை இறுக்கமாக அளந்துகொள்ளவும்)
சின்ன வெங்காயம்-15, அல்லது ஒரு பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்-4
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
கடலை மாவு – 5- 7 மேசைக்கரண்டி
பால்-2 தேக்கரண்டி
மிளகாய்ப்போடி-1/4 தேக்கரண்டி
செய்முறை:

1. ஒரு வாயகன்ற பத்திரத்தில் கடலை மாவு, உப்பு, பால், மஞ்சள்தூள், மிளகாய்ப்பொடி, சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
2. சின்ன வெங்காயம் தோல் உரித்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும். (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ).
3. முளைக்கீரை நன்கு கழுவி நீர் வடித்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.( 1கோப்பை இறுக்கமாக அளந்துகொள்ளவும்)
4. பச்சை மிளகாய், சின்னவெங்காயம், கீரை எல்லாவற்றையும் கரைத்த மாவில் சேர்த்துக்கலக்கவும்.
5. தோசைக்கல்லை காய வைத்து சிறிய அம்லேட்டாக ஒரு கரண்டி அளவு மாவெடுத்து வட்டமாக ஊத்தி, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சுற்றிலும் விடவும்.
6. திருப்பி மறுபக்கம் வேக வைத்து எடுக்கவும், சைவ ஆம்லேட் தயார் சூடாக பரிமாறி மகிழவும்.

குறிப்பு:
1. வெங்காயம், கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மாவை சிறிது நீர்க்க கரைத்துக்கொள்ளவும் இல்லாவிட்டால் அடை போல் ஆகிவிடும்