கல்கண்டு வடை / Sugar Candy Vadai

கல்கண்டு வடை:

Kalkandu Vadai for English recipe please click link below:

http://wp.me/p1o34t-h1
இனிப்பில் பல வகையுண்டு வடையிலும் பல…. கல்கண்டு வடை தோற்றம் நகரத்தார்கள் வாழும் செட்டிநாட்டில். உணவு வகைகளில் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள் பெருமைக்குரியது. அசத்தும் சுவைகொண்ட இந்த கல்கண்டு வடை முக்கிய விருந்துகளில் சிறப்புப்பலகரமாக பரிமாறப்படும்.
முக்கிய பொருட்கள் உளுந்து கல்கண்டு.

Chettinad Kalkandu vada
Chettinad Kalkandu vada

தேவையான பொருட்கள்: 15 வடைகள் பெறலாம்.
உளுந்து-1 கோப்பை- (110 கிராம் அல்லது அரை உலக்கு)
பச்சரிசி 1/4 கோப்பை
கல்கண்டு- 3/4 கோப்பை
உப்பு ஒரு சிட்டிகை
எண்ணெய் – வடை பொரித்தெடுக்க-250 மில்லி                                                   துவரம் பருப்பு 1 தே .க
செய்முறை:
கல்கண்டைத் தட்டி தூளாக்கிகொள்ளவும், அல்லது ஆச்சு கல்கண்டும் பயன்படுத்தலாம்.
உளுந்தையும், அரிசியையும் அளந்து, நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

12285837_991022470939363_433006285_n
பின்னர் தண்ணீரை நன்கு வடித்துவிட்டு ஆட்டுரலில் போட்டு அரைக்கவும், சிறிது கூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. தண்ணீருக்கு பதிலாக பொடித்த கல்கண்டை இடை இடையே சேர்த்து அரைக்கவும்.

12312118_991022477606029_1431785051_n
நல்ல பந்து போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.

12305540_991022460939364_1001260817_n
மாவை சிறு சிறு வடைகளாக தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வேகவுடவும்.

12285768_991022444272699_1644606218_n
கல்கண்டு வடை தயார்.

Chettinad Kalkandu vada
Chettinad Kalkandu vada

கவனம்:

1.இனிப்பு சேர்த்துள்ளதால் தீ குறைவாக வைத்து வேகவிடவும், இல்லையேல் வடை சிவந்து விடும்.
2. வடையை சிறிதாகத் தட்டவும் இந்த வடை உப்பி பெரிதாக வரும்.
3. உப்பை அரைத்து எடுத்த பிறகு சேர்த்துக்கலக்கவும் ஆட்டும் போது சேர்க்க வேண்டாம்.                                                                                                                        4. எண்ணெய் அதிகம் காயக்கூடாது

அவல் பொங்கல்

அவல் காரப்பொங்கல்:

தினமும் தொடர்ந்து காலையில் இட்லி, சட்னி செய்து சலித்துவிட்டதா? அடுத்த படியாக சுலபமாக செய்யும் பலகாரம் உப்புமா, பொங்கல் தான். சாதாரணமாக பொங்கல் பச்சரிசியைய் வேகவைத்து செய்வோம். இங்கு இன்னும் சுலபமாக குறைவான நேரத்தில் மிக வேகமாகவும், சுவையாகவும், செய்யக்கூடிய அவல் பொங்கல் செய்முறையைக்காண்போம்.தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் ஏதுவாகும்.

அவல் காரப்பொங்கல்
அவல் காரப்பொங்கல்

செய்யத்தேவையான பொருட்கள் :

அவல் -1 கோப்பை
பாசிப்பருப்பு- 1/4 கோப்பை
நெய்-2 மேஜைக்கரண்டி 1+1 அல்லது 1 மேஜைக்கரண்டி நெய் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்
இஞ்சி துருவியது-2 தே .க 1+1 (பத்தி வேகவைக்க பாதி தளிக்க).
சீரகம்-1/4 இரண்டும் பங்காக்கிக்கொள்ளவும் (பத்தி வேகவைக்க பாதி தளிக்க).
மிளகுதூள்-1/4 தே .க
தளிக்க:
மிளகு-1/4 தே .க
சீரகம் -மேற் கூறியதில் பாதி அளவு
முந்திரிப்பருப்பு-1 மேஜைக்கரண்டி
பச்சைமிளகாய்-2 கீரியது
கறிவேப்பிலை-1 கொத்து

12071496_963808973660713_640400087_n
செய்முறை:
1.பாசிப்பருப்பை வானலியில் ஒரு நிமிடம் வரை வறுத்து, தண்ணீர் விட்டு,பாதி அளவு துருவிய இஞ்சியையும், ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து பூப்போன்று வேகவைத்துக்கொள்ளவும்.

12087361_963808930327384_964171546_n
2.அவலை நன்கு அலசி 5 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.

12077333_963808886994055_1723434226_n
வானலியில் நெய் விட்டுமேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வறுத்துக்கொள்ளவும்.
பா தி துருவிய இஞ்சி, கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

12067091_963808946994049_813899453_n
3.இப்போது ஊறவைத்த அவல், உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு அதன் தண்ணியோடு சேர்த்து நன்கு கிளறவும்.

12041942_963808900327387_1096563663_n
4.மிதமான தீயில் பொங்கல் பதம் வரும்வரை சமைத்து,சிறிது மிளகுத்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து இறக்கவும். சுவையான அவல் பொங்கல் தயார்.

12071785_963808863660724_1156882785_n

12084079_963808876994056_52492168_n

எருக்கங்கொழுக்கட்டை / Kozhukkattai

பூர்ண கொழுக்கட்டை அல்லது எருக்கங்கொழுக்கட்டை :

For English please click link:     http://wp.me/p1o34t-hu
எருக்கம் பூவின் மென்மையும் வடிவமும் உடையதால் இது எருக்கம் கொழுக்கட்டை என்று அழைக்கப்படுகிறது.எருக்கம் பூ விநாயகருக்கு சூட்டுவோம், அதன் வடிவத்தில் கொழுக்கட்டையாக பிரசாதம் படைக்கப்படுகிறது.

download (11)கொழுக்கட்டை ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது ஏனெனில் முக்கியமாக இது ஆவியில் வேகவைக்கிறோம் அதனால் சத்துக்கள் குறையாமல் கிடைக்கிறது. இனிப்பு, உப்பு, காரம் போன்ற சுவையும் இதனுள் அடக்கம்.

Erukkam Kozhukkattai
செய்முறை :
மாவு பிசைய
பச்சரிசி மாவு – 1 கோப்பை
உப்பு-1/4 தே .க
நெய் அல்லது எண்ணெய் -1/4 தே க
இனிப்பு கலவை உள்ளடக்க:
தேங்காய் துருவல்-1 கோப்பை
வெல்லம் பொடித்தது 1/4 கோப்பை
முந்திரி (உடைத்தது) -1 மே .க
நெய்-1 தே .க
செய்முறை:
வாணலியில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து, உடைத்த முந்திரியை வறுத்துக்கொள்ளவும், துருவிய தேங்காயை 1 நிமிடம் வதக்கவும்.
அதில் வெல்லம், ஏலக்காய், சேர்த்து கலக்கவும் வெல்லம் கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும்.

11999884_957488120959465_689168403_nஉப்பு கலவை உள்ளடக்க:
உளுந்து 1 கை
உப்பு-1/4 தே .க
வரமிளகாய்-3
சீரகம்-1/2 தே .க
தளிக்க-எண்ணெய் -2 தே .க
கடுகு-1
கறிவேப்பிலை-1 கொத்து
செய்முறை:
உளுந்தை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
நீரை நன்றாக வடித்து மிக்சியில், உளுந்து,சீரகம், வரமிளகாய் உப்பு சேர்த்து குருணையாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து,தாளிதம் செய்து அரைத்த கலவையுடன் தேங்காய் சேர்த்து வதக்கவும் வெந்ததும் ஆறவைக்கவும்.
இந்தககலவைகளை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.

12033318_957488134292797_238691250_n

மாவு கலக்க:
1. தண்ணீர் கொதிக்கவைக்கவும்.
2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவைப்போட்டு கொதிக்கும் வெந்நீர் சேர்த்து கரண்டியால் கலக்கவும்.
3. மாவு கெட்டியாக உருட்டும் அளவிற்கு கலக்கிக்கொள்ளவும்.
4. எலுமிச்சம்பழம் அளவிற்கு மாவை உருட்டிக்கொள்ளவும்.
5. பிறகு ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில், நெய் அல்லது தண்ணீர் உதவியுடன், தட்டையாக தட்டி, தேவையான கலவையை உள்ளடைத்து மூடி, தேவையான வடிவத்தில் தயார் செய்து வைக்கவும்.

DSC07981
6. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

12041668_957488104292800_586789441_n

7. எருக்கம் கொழுக்கட்டை, பூர்ண கொழுக்கட்டை தயார்.

மோதகம் / Mothagam

பிள்ளையார் பட்டி சிறப்பு மோதகம்:

For English please click:            http://wp.me/p1o34t-hI
மோதகம் என்றாலே உடனே நினைவிற்கு வருவது விநாயகர் சதுர்த்திதான். பிள்ளையாருக்கு மோதகப்பிரியன் என்றொரு பெயரும் உண்டு. அதனாலேயே விநாயகர் சதுர்த்தி அன்று இந்த மோதகம் சிறப்பான நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. இது மிகவும் ருசியானதாகவும், எளிமையாக செய்யக்கூடிய ஒரு முக்கியமான ரெசிப்பி, இது மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். இது குறிப்பாக சதுர்த்தி காலத்தில் பிள்ளையார் பட்டியில் செய்யக்கூடிய மோதகம் என்பதால் இது இன்னும் சிறப்பு பெறுகிறது.

modhagam

 
செய்யத்தேவையான பொருட்கள் :
பச்சரிசி-1 கோப்பை,                                                                                                                                                                                                                               தண்ணீர் -2 கோப்பை

பாசிப்பருப்பு- 1/4 கோப்பை
வெல்லம் பொடியாக- 1 கோப்பை
தேங்காய் துருவியது -1/4 கோப்பை
ஏலக்காய் போடி-1/4 தே க
நெய் – 1 மே க
செய்முறை:
1.அரிசியையும், பருப்பையும் ஒன்று சேர்த்து நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும், பிறகு நீரை நன்றாக வடித்து சுத்தமான துணியில் 1 மணி நேரம் உலர்த்தவும்.
2.அரிசி நீரின்றி உலர்ந்ததும் மிக்சியில் போட்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பத்திரத்தில் வெள்ளம் சேர்த்து 1/4 கோப்பை நீர் தெளித்து அடுப்பில் வைத்துக கட்டிகள் இன்றி கரைத்துக்கொள்ளவும். கரைத்த பாகை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
4. வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து, காய்ந்ததும் உடைத்த அரிசியை சேர்த்து வறுக்கவும், கைபொறுக்கும் சூடு வந்ததும் எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.
5. அதே பாத்திரத்தில் 2 கோப்பை நீர் விட்டு கொதித்ததும், வறுத்த மாவைப்போட்டு இடைவிடாது கிளறவும்.

12032552_957979784243632_1860515566_n
6. மாவு நன்றாக வெந்து,கெட்டியானதும், வடிகட்டிய வெல்லப்பாகை சேர்த்து கிளறவும், நன்கு ஒன்று சேர்ந்ததும், ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

12026484_957979750910302_546753664_n
6,ஆறியதும் உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில், ஆவியில் வேகவைக்கவும்.
மோதகம் தயார்.

வெள்ளப்பனியாரம்

வெள்ளப்பனியாரம்:

செட்டிநா ட்டிற்கே உரித்தான மகத்துவம் நிறைந்தது வெள்ளப்பனியாரம்.விருந்து என்றாலே முதலில் நினைவிற்கு வருவது வெள்ளைவெளேர் வெள்ளப்பனியாரம்தான். நம் முன்னோர் நமக்கு கற்றுத்தந்த கலை என்று கூடச் சொல்லலாம் இந்த பலகாரம் செட்டி நாட்டு பலகாரங்களுக்கெல்லாம் கிரீடமாக அமையப்பெற்றுவிட்டது. செட்டி நாட்டு கல்யாணங்களில் சிறப்பாகவும், பெருமையுடனும் பரிமாறப்படும் இந்தப்பலகாரம் வெள்ளப்பனியாரம், இனையாகத் தொட்டுக்கொள்ள டாங்கர்.

வெள்ளப்பனியாரம்:
வெள்ளப்பனியாரம்:

தேவையான் பொருட்கள் :

பச்சரிசி-1 கோப்பை மேலே சம அளவு
உளுந்து அரிசியின் மேல் கோபுரமாக
உப்பு-1 மேஜைக்கரண்டி
சீனி-1/2 மேஜைக்கரண்டி
பால் -1 மேஜைக்கரண்டி
எண்ணெய் சுட்டெடுக்க

vellai_pa_mesaring-300x2251

செய்முறை:
அரிசியும் பருப்பும் கழுவி ஊறவைக்கவும் சுமார் 2 மணிநேரம், பின்னர் மென்மையாக அரைக்கவும்.
பிரிட்ஜில் 10 அல்லது 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.உப்பு ,சீனி, பால் சேர்த்து கலக்கவும்.
மாவு கெட்டியாகவோ தண்ணியாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.தோசை மாவைவிட சிறிது நீர்க்க வைத்துக்கொள்ளவும்

vellai_pa_mavu-300x2251
கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.எண்ணெய் காய்ந்ததும் அகல கரண்டியால் நிதானமாக நடுவில் ஊற்றவும்.
சில நிமிடங்களில் பணியாரம் கிளம்பி மேலே வரும்போது திருப்பவும் 1/2 நிமிடத்தில் எடுக்கவும்.
இவ்வாறு ஒன்றொன்றாக சுட்டெடுக்கவும், டாங்கருடன் பரிமாறவும்.

.

Viellai Paniyaram Video:

மசால் சீயம்


மசால் சீயம்

மசால் சீயம்
மசால் சீயம்

செட்டிநாட்டின் சுவை மிகுந்த மசாலா சீயம் திருமணங்கள் மற்றும் அணைத்து விருந்துகளிலும் பரிமாறப்படும் ஒரு முக்கியமான

பலகாரம். இதன்  வெளியே மொருமொருப்பாகவும் உட்புறம் மிருதுவாகவும், கூடு கூடாகவும் அமைந்தால் அதுவே முறையான பக்குவம். மசாலா சீயம் சிற்றுண்டியகவும், இடைப்பலகரமகவும் தேநீருடன் பரிமாறலாம். செய்முறை மிகவும் எளிமையானது பெரிய அளவில் தயாரிக்க இது கனிசமான அளவு கிடைக்கும்.இதன் மாவு முந்தைய நாளில் அரைத்து வைத்துக்கொள்ளலாம். மசாலா சீயத்துடன் பொதினா சட்னி அல்லது தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.

மசால் சீயம்
மசால் சீயம்

 

தேவையான் பொருட்கள் :
பச்சரிசி -1/2 கப்
உளுந்து-1/2 கப்
உப்பு-1/2 தசப்
எண்ணெய் -பொரிக்க
ஜவ்வரிசி-1மேஜைக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் -1
கடுகு-1/2
சீரகம்-1/4
வெங்காயம்
பச்சைமிளகாய்
கருவேப்பிலை
கோத்தமல்லி இலை,தேங்காய்

செய்முறை :
1. பச்சரிசியையும் உளுந்தையும் நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
2. ஆட்டுரலில் (கிரைண்டரில்) போட்டு சிறிது தண்ணீர் தெளித்து மென்மையாக அரைக்கவும்,உப்பு சேர்த்து எடுத்துக்கொள்ளவும் .
3.மாவு கெட்டியாகவும் அல்லாமல் தண்ணியாகவும் அல்லாமல் வடை மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.

1012901_669665866408360_806758694_n
4. கருவேப்பிலை, பச்சை மிளகாய் ,வெங்காயத்தையும் பொடியாக வெட்டிவைதுக்கொள்ளவும்.
5. வானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, சீரகத்தை பொரிக்கவும்,வெட்டிய வெங்காயம், கருவேப்பிலை,தேங்காய் போட்டு 1 நிமிடம் வரை வதக்கவும்.

11106067_874160789292199_379186581_o
6.வதக்கிய பொருட்களை அரைத்தமாவில் சேர்த்து நன்கு கலக்கவும்.

images (30)
7.வானலியில் எண்ணெய் காயவைத்து நன்கு காய்ந்த உடன், படத்தில் கட்டியதுபோல் சிறு சிறு உருண்டையாக போட்டு பொண் நிரமாக பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் பொரிக்கவும்.

11094701_874160519292226_925073792_n
திருப்பி நன்கு வேகவைத்து எடுக்கவும், சட்னியுடன் சூடாக பரிமாறவும்

 குறிப்பு : ஜவ்வரிசி சிறிது 1 மேஜைக்கரண்டி சேர்த்தால் முத்து முத்தாக சீயம் பார்க்க அழகாக இருக்கும்.

ஊர வைத்து மாவுடன் கலக்கவும்.