கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa

கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa:

செட்டிநாட்டு சிறப்பு மிக்க கவுனிஅரிசி இப்போது அல்வா சுவையோடு உங்கள் விருந்து சிறக்க, நா சுவைக்க.

சத்து நிறைந்த கவுனி அரிசி உடல் சூட்டை தவிர்ப்பதோடு, நார் சத்து மிகுதியானதால் மலசிக்கல் விலகும். கருப்பு அரிசி ஒரு பசையம் இல்லாத தானியமாகும். ஒவ்வாமை மற்றும் செலியக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்ல மாற்றாகும்.
உடலில் உள்ள குளுக்கோஸ் உறிஞ்சுதலில் உதவுகிறது, இந்த அரிசி தவிடு நிறைந்த நார்சத்து கொண்டிருக்கும், நீரிழிவு நோயை சமாளிக்க உதவுகிறது. இது வகை 2 நீரிழிவு ஆபத்தை குறைக்கிறது.

கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa:
கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa:

செய்யத்தேவையான பொருட்கள் :
கவுனி அரிசி -1 கோப்பை
சீனி – 1 1/4 கோப்பை
ஏலக்காய் -3
நெய் – 1/2 கோப்பை
முந்திரி 10
திராட்சை 1 மேஜைக்கரண்டி
கவுனி அரிசியை நன்கு ஊறவைத்து நல்ல விழுதாக அரைத்துக்கொள்ளவும்.


வானலியில் சிறிது நெய் காய வைத்து , முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அதே வானலியில் அரைத்த கவுனிஅரிசி, தண்ணீர் 2 கோப்பை சேர்த்து கிளறவும்

கெட்டியான பிறகு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.


நன்கு திரண்டு, உருண்டு வரும் சமயம் முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.


நெய்விட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம் அடுப்பை விட்டு இறக்கி ஆறவிடவும்.
சூடான கவுனிஅரிசி ஆல்வா தயார்.

 

கோதுமை தோசை / Wheat Dosa

கோதுமை தோசை / Wheat Dosa:

கோதுமை தோசை:
கோதுமை தோசையில் இரண்டு வகையுண்டு உடனடி கோதுமை தோசை, ஆட்டி புளிக்கவைத்து செய்யும் கோதுமை தோசை.
1. உடனடி கோதுமை தோசை ஆட்டா மாவில், அதாவது சப்பாத்தி, பூரி செய்யும் மாவில் உடனடியாக செய்யும் தோசை இது பஞ்சாபி கோதுமையில் செய்வது, கரைத்தவுடன் எளிதாக செய் யலாம்.
2.ஆட்டி செய்யும் முறை இன்னும் சுவையானது உடலுக்கு சுகமானது, இதை ஊறவைத்து ஆட்டி புளிக்கவைத்து செய்யவேண்டும். மிருதுவாக இருக்கும். சம்பா கோதுமையில் செய்யும் இந்த தோசை மிகவும் நன்மை பயக்கும், நார்ச்சத்து நிறைந்தது.

கோதுமை தோசை / Wheat Dosa
கோதுமை தோசை / Wheat Dosa

உடனடி கோதுமை தோசை:
கோதுமை-2 கோப்பை
அரிசி மாவு 1/2 கோப்பை
உப்பு-1/2 தே.க
நீர்த்த மோர் -1 டம்ளர்
செய்முறை:
மேல் கூறிய அனைத்தையும் சேர்த்து கடிகள் இல்லாமல் கரைத்துகொள்ளவும், தோசை மாவு சற்று நீர்க்க கரைத்துக்கொள்ள வேண்டும்.
தோசைக்கல் நன்கு காயும் பொது ஒரு கரண்டி மாவு எடுத்து லேசாக ஊற்றி இருபுறமும் வேகவிடவும்.
கோதுமை தோசை வேக கூடுதல் நேரமாகும், கவனமாக வார்க்கவும்.

கோதுமை தோசை ரெடி, தொட்டுக்கொள்ள பொதினா சட்னி, தேங்காய் சட்னி, பொடித்த வெல்லம் நல்ல சுவைதரும்.

குறிப்பு:
பொடியாக வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி தூவியும் தோசை வேகவைக்கலாம்.
மாவுடன் கலந்தும் தோசை வார்க்கலாம்.

மொச்சை கத்திரிக்காய் குழம்பு

மொச்சை கத்திரிக்காய் குழம்பு:

மொச்சை கத்திரிக்காய் குழம்பு, பாரம்பரிய சமையல் முறையில் நம் முன்னோர் கற்றுத்தந்த ஒரு நல்ல ருசியான கலவை. மொசைக்கு குறிப்பான ஒரு நல்ல சுவையுண்டு. புரதச்சத்து, கால்சியம், அமினோ அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்தது மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டது.
இந்த மொச்சை கத்திரிக்காய் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை மற்றும் கொழுக்கட்டைக்கு நல்ல பொருத்தமானது.

மொச்சை கத்திரிக்காய் குழம்பு
மொச்சை கத்திரிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:
மொச்சை-1/2 கோப்பை கத்திரிக்காய் பிஞ்சாக-5
பூண்டு-7 பல்
சின்ன வெங்காயம்- 9
கறிவேப்பிலை-1 கொத்து
தக்காளி-1
உப்பு-1 1/2 தே.க
மஞ்சள் தூள்-1/4
புளிச்சாறு -2 மேஜைக்கரண்டி
சாம்பார் மிளகாய்ப்பொடி-2 1/2 தேக்கரண்டி
அல்லது
தனி மிளகாய்த்தூள் -1 1/2, மல்லித்தூள்-1 தேக்கரண்டி
தளிக்க :
எண்ணெய் -1 1/2 மேஜைக்கரண்டி
சோம்பு-1 தே.க
சீரகம்-1/2 தே.க
வெந்தயம்-1/4 தே.க
செய்முறை:
மொச்சையை 6 மணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் 2 விசில் வேக வைத்துக்கொள்ளவேண்டும்.

12231137_986288861412724_1007953525_n
கத்திரிக்காயை நான்காக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம் பூண்டு தோலுரித்து நறுக்கிக்கொள்ளவும்.                           தக்காளியை சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
கறிவேப்பிலை,வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும், பின்னர் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் பொது தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

12272737_986288821412728_486010876_n
பின்னர் புளிச்சாறு , மிளகாய்த்தூள் மற்றும் 2 கோப்பை தண்ணீர் செர்த்துக்கொதிக்கவிடவும். கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த மொச்சை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
குழம்பு கெட்டியானதும் சூடான சாதத்துடன் பரிமாற மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரெடி.

மொச்சை கத்திரிக்காய் குழம்பு
மொச்சை கத்திரிக்காய் குழம்பு

குறிப்பு:

மொச்சை ஊறியதும், மறுநாள் காலை தோலுரித்தும் பயன்படுத்தலாம்.
ஆள்காட்டி விரல் ,கட்டை விரல் கொண்டு லேசாக அழுத்தினால் தோல் அகன்றுவிடும்.
சிறு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கி தளிக்கும் பொது சேர்க்கலாம்.

பொடி / தொக்கு இட்லி Podi Idli

பொடி / தொக்கு இட்லி: Podi Idli

For English please click:   http://wp.me/p1o34t-ER
சுவை மிகுந்த பொடி அல்லது தொக்கு இட்லி செய்வது மிக சுலபம். இது பள்ளிக்குசெல்லும் குழந்தைகள் , அலுவலகம் செல்பவர்கள், பயணத்திற்கும் கூட இதை தயார் செய்து கொடுக்கலாம், கெடாமல் இருக்கும், உட்கொள்வதும் எளிது .

பொடி / தொக்கு இட்லி
பொடி / தொக்கு இட்லி

செய்யத்தேவை :
மினி இட்லி-1 கோப்பை அல்லது 4 இட்லி சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்
நல்லெண்ணெய் -1 மேஜைக்கரண்டி
பொடி -1 மேஜைக்கரண்டி அல்லது தொக்கு-1 தேக்கரண்டி                        http://wp.me/p6uzdK-3D
கறிவேப்பிலை-1 கொத்து

Podi Idly
செய்முறை:
வாணலியில் எண்ணெய் காய வைத்து கறிவேப்பிலை சேர்க்கவும் உடனே மிதமான தீயில் இட்லி பொடி அல்லது தொக்கு சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்.

11021485_858383387536606_8243610442548687637_o
உடன் இட்லியை சேர்த்து பொடி அல்லது தொக்கு, இட்லியில் நன்கு ஓட்டும் வரை கிளறவும்.
தேவைப்பட்டால் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

பொடி / தொக்கு இட்லி
பொடி / தொக்கு இட்லி

ஆடி கும்மாயம். / ஆடிக்கூழ் / Aadikummayam

ஆடி கும்மாயம். / ஆடிக்கூழ் :
ஆடிக்கும்மயம் இனிப்பு வகையைச்சேர்ந்தது. நகரத்தார் விருந்துகளில் முக்கிய இடம் பெற்றது. இது மிதமான இனிப்புடன் சுவைமிகுந்தது, தொண்டைக்கும் நாக்கிற்கும் இதமான ஒரு அற்புத இனிப்பு வகை. இதன் மூலப்பொருள் உளுந்து, கருப்பட்டி, நெய். நம் முன்னோர்கள் தந்து சென்ற அதிசய மருத்துவ குணம் நிறைந்த உணவில் இதுவும் ஒன்று.

Aadi kummayam
இதை இனிப்பாக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் அறிவோம்;
1. பொதுவாக உளுந்து நம் அன்றாட உணவான இட்லியில் நாம் பயன்படுத்துகிறோம், ஏனெனில் இது புரதச்சத்து நிறைந்தது. புரதம் தசை கட்டிடம் மற்றும் ஒட்டுமத்த உடல் கட்டமைப்பிற்கு பெரிதும் உதவுகிறது.
2.ஆடி கும்மயம் இரும்புச்சத்து நிறைந்தது காரணம் நாம் சேர்க்கும் கருப்பட்டி.
3.சூடைத்தனிக்கவும் சுவயைக்கூட்டவும் நெய்.
4.மாதவிடாய் சமயத்தில் ரத்தப்போக்கில் இரும்புச்சத்து குறைய வாய்ப்பு உள்ளதால், இது பெண்களுக்கு மிக உன்னதமான உணவாகக்கூறப்படுகிறது.
5.இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் குறிப்பாக பூப்படைந்த குழந்தைகளுக்கு இதை தினம் செய்து கொடுப்பார்கள்.
செய்யத்தேவையான பொருட்கள்: இந்த மாவை, மொத்தமாக வறுத்து அரைத்து 6 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம் அல்லது சிறு அளவாக வறுத்து மென்மையாக அரைத்தும் செய்யலாம்.

செய்முறை:
உளுந்து-1 கிலோ, அல்லது 1 கோப்பை
பாசிப்பருப்பு- 1/4 கிலோ, அல்லது-1/4
பச்சரிசி-1/4கிலோ, அல்லது 1/4 கோப்பை
இவற்றை வெறும் வானலியில் பொன்னிறமாக வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
கும்மாயம் செய்யத்தேவையான பொருட்கள்:
கும்மயமாவு-1 கோப்பை
கருப்பட்டி-1/2 கோப்பை
வெள்ளம் -1/2 கோப்பை
தண்ணீர்- 3 அல்லது-4 கோப்பை
நெய் -1/4 கோப்பை அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ப

Aadi kummayam/Aadi kool

1. வானலியில் – 1 தேக்கரண்டி நெய் சேர்த்து மாவை 3 நிமிடத் வரை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். வறுத்த மாவை ஆற விடவும்.

Aadi kummayam/Aadi kool
2. மற்றொரு பத்திரத்தில் கருப்பட்டி, வெள்ளம்,1/2 கோப்பைத்தண்ணீர், சேர்த்து அடிப்பில் வைத்துக்கரைத்துக்கொள்ளவும்.
3. பாகை வடிகட்டி ஆறியதும் வருத்தமாவையும் மீதமுள்ள தண்ணீரையும் சேர்த்து கையால் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

DSC09198
4. இப்போது அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும். இடை இடையே நெய் சேர்த்துக்கொள்ளவும்.
5. கும்மாயம் நன்கு வெந்து முட்டை முட்டையாக, பத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயத்தில் மீதமுள்ள நெய்யை சேர்த்து கிளறி இறக்கவும்.சுவையான கும்மாயம் ரெடி.

DSC09201
கும்மாயம் 2 லிருந்து 3 நட்டகல் வரை கடாமல் இருக்கும்.

Aadi kummayam/Aadi kool

 

அவல் பொங்கல்

அவல் காரப்பொங்கல்:

தினமும் தொடர்ந்து காலையில் இட்லி, சட்னி செய்து சலித்துவிட்டதா? அடுத்த படியாக சுலபமாக செய்யும் பலகாரம் உப்புமா, பொங்கல் தான். சாதாரணமாக பொங்கல் பச்சரிசியைய் வேகவைத்து செய்வோம். இங்கு இன்னும் சுலபமாக குறைவான நேரத்தில் மிக வேகமாகவும், சுவையாகவும், செய்யக்கூடிய அவல் பொங்கல் செய்முறையைக்காண்போம்.தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் ஏதுவாகும்.

அவல் காரப்பொங்கல்
அவல் காரப்பொங்கல்

செய்யத்தேவையான பொருட்கள் :

அவல் -1 கோப்பை
பாசிப்பருப்பு- 1/4 கோப்பை
நெய்-2 மேஜைக்கரண்டி 1+1 அல்லது 1 மேஜைக்கரண்டி நெய் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்
இஞ்சி துருவியது-2 தே .க 1+1 (பத்தி வேகவைக்க பாதி தளிக்க).
சீரகம்-1/4 இரண்டும் பங்காக்கிக்கொள்ளவும் (பத்தி வேகவைக்க பாதி தளிக்க).
மிளகுதூள்-1/4 தே .க
தளிக்க:
மிளகு-1/4 தே .க
சீரகம் -மேற் கூறியதில் பாதி அளவு
முந்திரிப்பருப்பு-1 மேஜைக்கரண்டி
பச்சைமிளகாய்-2 கீரியது
கறிவேப்பிலை-1 கொத்து

12071496_963808973660713_640400087_n
செய்முறை:
1.பாசிப்பருப்பை வானலியில் ஒரு நிமிடம் வரை வறுத்து, தண்ணீர் விட்டு,பாதி அளவு துருவிய இஞ்சியையும், ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து பூப்போன்று வேகவைத்துக்கொள்ளவும்.

12087361_963808930327384_964171546_n
2.அவலை நன்கு அலசி 5 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவும்.

12077333_963808886994055_1723434226_n
வானலியில் நெய் விட்டுமேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வறுத்துக்கொள்ளவும்.
பா தி துருவிய இஞ்சி, கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

12067091_963808946994049_813899453_n
3.இப்போது ஊறவைத்த அவல், உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு அதன் தண்ணியோடு சேர்த்து நன்கு கிளறவும்.

12041942_963808900327387_1096563663_n
4.மிதமான தீயில் பொங்கல் பதம் வரும்வரை சமைத்து,சிறிது மிளகுத்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து இறக்கவும். சுவையான அவல் பொங்கல் தயார்.

12071785_963808863660724_1156882785_n

12084079_963808876994056_52492168_n