முருங்கை காம்பு சூப் / Drumstick stem soup

முருங்கை காம்பு சூப் :
முருங்கை மரம் நமக்கு இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். முருங்கை மரத்தில, இலை, பூ, காம்பு, காய் என அனைத்துமே அதிகமான பயன் தரக்கூடியது. 1 மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை இயற்கை வைத்திய மூலிகையாக பயன்படுத்தலாம்.
உதாரணமாக இதில் இரும்பு சத்து
பாஸ்பரஸ்.
புரதம்
கொழுப்பு
கால்சியம்
கார்போஹைட்ரேட்
வைட்டமின் ஏ, சி போன்ற உடலுக்கு முக்கியத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதன்,காய், பூ, கீரை பற்றிய செய்முறை நாம் அறிந்ததே இங்கு அதன் கம்பு சமையலில் எப்படி பயன் படுத்தலாம் என்பது பற்றி காண்போம்.


முருங்கை காம்பு சூப்:
தேவையான பொருட்கள்:
முருங்கை கம்பு 2 கோப்பை சுத்தம் செய்து, சிறியதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

பாசி பருப்பு ;1 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம்-5
பூண்டு 3 பல்
பச்சை மிளகாய் 1
தக்காளி பாதி அளவு அல்லது சிறியது
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்
சீரகம்-1/4 தேக்கரண்டி
செய்முறை:
மேல் கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக, குக்கரில் 3 அல்லது 4 விசில் வேகவைத்துக்கொள்ளவும்.


ஆறியதும் நன்கு கடைந்து ஒரு வடிகட்டி வைத்து வடித்துக்கொள்ளவும்.


வாணலியில் 1 தேக்கரண்டி நெய், சீரகம் சிறிது கறிவேப்பிலை ஒரு சிட்டிகை கரம் மசாலா தூள் சேர்த்து தாளிதம் செய்யவும் .
சத்தான, சுவையான முருங்கை காம்பு சூப் தயார்.

Advertisements