வெங்காய சாம்பார் / Pearl Onion Sambar:
Click link below for English recipe:
வெங்காய சாம்பார் :
தென்னிந்திய உணவான சாம்பார் தினம் நாம் உண்ணும் உணவில் முக்கிய பங்கு பெற்றுள்ளது. இந்த வெங்காய சாம்பார் மணமும், சுவையும் நிறைந்தது. சின்ன வெங்காயம் மருத்துவ குணங்கள்அதிகம் நிறைந்தது, இதை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள இரத்த அழுத்தம் குறையும், புற்றுநோய் வராமல் தடுக்கும் என பல மருத்துவ குணங்கள் கொண்டது.
எளிதாக சமைக்கக்கூடியது, காய்கறி சாம்பார் செய்வது போன்ற பக்குவத்தில் சின்ன வெங்கயத்தின் சுவையைச் சேர்க்கிறோம். இது சாதம், இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றிக்குப் பொருந்தும்.

தேவையான பொருட்கள்:
வேகவைத்த துவரம் பருப்பு-1 கோப்பை
தோலுரித்த உரித்த சின்ன வெங்காயம் -1 கோப்பை
தக்காளி -1 நறுக்கியது
உப்பு -1தே.க
புளிச்சாறு -1/4 கோப்பை
மஞ்சள்த்தூள் -1/4 தே.க
பெருங்காயம் -1/4 தே.க
சாம்பார்பொடி- 1 1/2 தே.க
தாளிக்க:
எண்ணெய் -1 மே .க
கடுகு -1/2 தே.க
சீரகம் -1/4 தே.க
வெந்தயம் -1/4 தே.க
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை:
தக்காளியை நறுக்கி, வெங்காயம் தோலுரித்து, துவரம் பருப்பு ஒரு கைப்பிடி வேகவைத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும், சின்ன வெங்காயத்தை சேர்த்து லேசாக சிவந்து வரும் வரை வதக்கவும்.
தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து, தக்காளி தோல் விட்டு வரும் வரை வதக்கவும். தாளிப்பு வாசனையோடு வெங்காயம் சேர்ந்து வதங்கும் போதே அதன் மணம் அக்கம் பக்கம் வரை எட்டும்.
இப்போது வேகவைத்த பருப்பு, புளிச்சாறு, சாம்பார் பொடி, 2 கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு 3லிருந்து 4 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.