தேங்காய் சாதம் / Coconut fried rice

தேங்காய் சாதம் :
உடனடி தயாரிப்பில் மிக எளிமையாகவும், குறுகிய நேரத்தில் சுவையாக மற்றும் ஆரோக்கியமாகவும் இந்த தேங்காய் சாதம் தயாரித்து விடலாம். தேங்காய் தேகத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியது, தோல் மெருகேற்றவும், வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறவும் உதவுகிறது.

தேங்காய் சாதம் / Coconut fried rice
தேங்காய் சாதம் / Coconut fried rice

செய்யத்தேவையான பொருட்கள் :
வடித்த சாதம் 2 கோப்பை
தேங்காய் துருவியது – 1 கோப்பை
உப்பு-1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு-1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு -1/2 தேக்கரண்டி
வேர்க்கடலை- 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு- 2 தேக்கரண்டி
வர மிளகாய்-3
கறிவேப்பிலை
செய்முறை:
1. ஒரு கோப்பை அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து, பாதி தேங்காய் பால், பாதி தண்ணீர், உப்பு சேர்த்து சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். விருப்பத்திற்கு ஏற்ப
(தேங்காய்ப்பால் சேர்க்காமல் வெறும் தண்ணீரிலும் வடிக்கலாம்)
2. வடித்த சாதத்தை ஆறவைக்கவும். இது கிளறும்போது சாதம் உடைந்துவிடாமல் இருக்க உதவும்.
3. வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, வரமிளகாய் தாளிதம் செய்யவும்.
4.முதலில் வேர்க்கடலை, பிறகு, கடலைப்பருப்பு, முந்திரி, உளுத்தம்பருப்பு, என ஒன்றொன்றாக சேர்த்து வறுக்கவும்.
5. பிறகு கறிவேப்பிலை, தேங்காய், மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும்.(தேங்காய் அதிகநேரம் வதக்கினால் எண்ணெய் வாடை வரும் கவனம் தேவை)
6. வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.


சுவையும் மனமும் நிறைந்த தேங்காய் சாதம்  நொடியில் தயார்

வரகு அரிசி தயிர் கலவை / Kodo millet curd rice

வரகு அரிசி தயிர் கலவை : “செய்வதை திருந்தச்செய் சேரிடம் அறிந்து சேர்”, என்ற பொன்மொழிக்கு ஏற்ப சுலபமான தயிர் சதமாக இருந்தாலும் அதை அதிக அக்கறையோடு, சுவைகூடும் வண்ணம் செய்து அசத்துவது தனிக்கலை, அது சேருமிடத்தில் பெருமையும் கூடும்.
வெகுவாகவும், பிரபலமாகவும், பரவி வரும் சிறுதானிய உணவு, அனைத்து வயதினருக்கும் பயனளிக்கக்கூடியது. அற்புத சுவையும், ரகசியமான ஆரோக்கியமும் நிறைந்து காணப்படும் இந்த சிறு தானய வகைகள், பல ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர் அதன் தோற்றம் மீண்டும் அறியவந்துள்ளது. இது ஒரு பொக்கிஷமான பயிரக கருதப்பட்டு வந்தது.
அரிசியுடன் ஒப்பிடும் போது சிறு தானியங்களில் வரகு உயர்வானதாக கருதப்படுகிறது. சிறு தானியங்கள் அனைத்துமே உடலுக்கு மிகவும் அருமையானது
வரகு அரிசி புரதம், கால்சியம் , நார்ச்சத்து மற்றும் கனிமங்கள்(மினரல்ஸ்) உயர் ஆதாரமாக உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவும். வரகு அரிசியின் சத்தோடு நாம் சேர்க்கும் மாதுளம் முத்துக்கள், தயிர் ஜீரணத்திற்கு ஆதாரமான பெருங்காயம், சீரகம், சுவையை அதிகரிக்க பால், உப்பு சேர்ந்த கலவை சுவையும் மனமும் நிறைந்த ஒரு முழு உணவாக பரிமாறலாம்.

அரிசியை பிரிய மனமில்லையா!!! கவலை வேண்டாம் சுவையும் சத்தும் மிகவும் அதிகம், செய்வதும் சுலபமானது ,   பக்கவிளைவுகள் இல்லை தைரியமாக சமைக்கலாம்.

வரகு அரிசி தயிர் கலவை / Kodo millet curd rice
வரகு அரிசி தயிர் கலவை / Kodo millet curd rice

தேவையான பொருட்கள்
வரகு அரிசி-1/2 கோப்பை
தண்ணீர்-1 1/2 கோப்பை
உப்பு-1/2 தேக்கரண்டி
பால்-1/2 கோப்பை தயிர்-1/4 கோப்பை
மாதுளம் பழம் முத்துக்கள் -2 மேஜைக்கரண்டி
இஞ்சி பொடியாக நறுக்கியது-1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை-1 கோது
கொத்தமல்லி இல்லை- சிறிது

11914203_945417312166546_731861243_n
தாளிக்க:
எண்ணெய் -2 தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
கடுகு-1 தேக்கரண்டி
சீரகம்-1/4 தேக்கரண்டி
செய்முறை:
வரகு அரிசியை நன்கு கழுவி, நீர் சேர்த்து மென்மையாக வேகவைக்கவும்.
பின்னர் சிறிது ஆற வைக்கவும் பிறகு, பால் தயிர் உப்பு சேர்த்து கிளறவும்.
பிறகு தாளிதம் செய்து இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், பிசைந்த வரகு தயிர் கலவையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
மாதுளம் முத்துக்கள் கொத்தமல்லி இல்லை சேர்த்து பரிமாறவும்.