பருப்பு மாவத்தால் குழம்பு/Dal Curry

பருப்பரைத்து கொதிக்க விடுதல்: 

அதன் பெயரிலேயே முறை விளங்கிவிடும் அவ்வளவு எளிய சுவையான ஒரு குழம்பு வகை. இது கேழ்வரகு கூழ், கம்பங்கூழ் மற்றும் சாதத்திற்கு ஏற்றது .

எந்தெந்த சூழ்நிலையில் எப்படி வாழ்வது என்பதை வாழ்ந்து காட்டி உள்ளனர் நம் முன்னோர்கள். சூழ்நிலைக்கேற்ப வாழக் கற்றுக்கொள்வது சிறப்பு, வசதியான சமயத்தில் சிறிது சுகமாகவும், சிக்கனம் கையாளவேண்டிய தருணத்தில் சாமர்த்தியமாகவும் எப்படி வாழ்வது என்பதை நாம் உட்கொள்ளும் உணவு வழியாகத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
எளிமையான உணவுமுறையிலும், சிக்கனம் சோறு போடும் என்பதற்கு ஏற்ப, பருவகால காய்கறிகளை பதப்படுத்ததி வத்தல் வகை, பருப்பு, தானியம், உப்புக்கண்டம் போன்றவற்றை ஆரோக்கியமானதாகவும் சூழ்நிலைக்கேற்ப சமைத்து நமக்கு வாழ்கை முறையை செவ்வனே வாழ வழி வகுத்திட்ட நம் முன்னோர்களின் திட்டமிட்ட வாழ்க்கையைக் கண்டு பெருமைப்படுவோம்.
அப்படி ஒரு எளிய வகையான பருப்பு குழம்பு அனைவரும் பயன் பெரும் வகையில் இங்கு பகிரப்பட்டுள்ளது

செய்யத்தேவையான பொருட்கள்:
அரைக்க:
துவரம்பருப்பு-2 மேஜைக்கரண்டி (4 பேருக்கு பரிமாறும் அளவு)
வர மிளகாய்-1
சீரகம்-1/4 தேக்கரண்டி
பூண்டு -3 பல்


தாளிக்க:
கடுகு-1/4 தேக்கரண்டி பெருங்காயம்-2 சிட்டிகை
மாங்காய் வத்தல்-4 (அல்லது தக்காளி-1)
மாவதால் நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
சிறிய வெங்காயம்-5

செய்முறை:
பருப்பு 30 நிமிடம் ஊறவைத்து ஊறியதும், பூண்டு, சீரகம் மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.


வானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயம், தாளித்து கறிவேப்பிலை,வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இப்போது ஊறிய மாவத்தல் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கொதிக்கும் சமயம் அரைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்க விடவும் பருப்பு மாவத்தல் குழம்பு தயார். இது கேழ்வரகு கூழ், கம்பங்கூழ் மாற்றும் சாதத்திற்கு ஏற்றது.

தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு/Kuzhambu

தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு :
காய்கறி சுருக்கமான சமயத்தில் சுவையான குழம்பு வகை செய்ய எண்ணினால் இதை செய்யலாம்.
அதிக சிரமம் தேவையில்லை, உடன் காய் செய்யாமலே!!! சுட்ட அப்பளம் சுவை கூட்டும் ரகசியம்.

drumstick

இந்த தட்டை பயறு வைத்தே சாப்பிடலாம், பருப்பு துவையலோ, தக்காளி பச்சடியோ செய்து சுலபமாக பரிமாறலாம்.

இதில் சேர்க்கும் தட்டிய பூண்டு, சோம்பு, சீரகம் இவை அனைத்தும் வாய்வுத் தொல்லை குறைக்கும் குணமுடையது
செய்யத்தேவையான பொருட்கள்:
தட்டை பயறு-1/2 கோப்பை கத்திரிக்காய் 2 அல்லது 3
தக்காளி-1
வெங்காயம்-1
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
புளி கரைத்த சாறு-2 மேஜைக்கரண்டி (சிறி எலுமிச்சை அளவு புளி எடுத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்)
சாம்பார் மிளகாய் போடி-2 தேக்கரண்டி
(மசாலா அரைத்தும் செய்யலாம் குழம்பு அதிக கனிசமான அளவு கிடைக்கும்-குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
தாளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி                                                                                        சோம்பு-1/2
சீரகம்-1/4
கறிவேப்பிலை, தட்டிய பூண்டு பூண்டு- 3 பல், கடைசியாக சேர்க்கவும்
செய்முறை:
தட்டை பயறு வாணலியில் சிறிது வெதுப்பி (வறுத்து) பின் சிறிது மலர வேகவைத்துக்கொள்ளவும். (3/4 பதம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்)
வெந்ததும், உப்பு, கரைத்த புளி, மஞ்சள் தூள், மசாலா போடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
3 நிமிடம் கொதித்ததும் தாளிதம் செய்யவும், வெங்காயம், கறிவேப்பிலை, வெட்டிய கத்தரிக்காய், தக்காளி, சேர்த்து வதக்கவும்.
தாளித்து,  குழம்பை சேர்த்து 3-5 நிமிடம் இளந்தீயில் கொதிக்க விடவும் நன்கு கொதித்து காய் வெந்ததும் தட்டிய பூண்டு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

குறிப்பு:
அரைக்க-சோம்பு-1/4 தேக்கரண்டி
சீரகம் -1/4 தேக்கரண்டி, மிளகாய்-5
மல்லி விதை -1 மேஜைக்கரண்டி
தேங்காய் -1 மேஜைக்கரண்டி
சிறு துண்டு இஞ்சி
நல்ல விழுதாக அரைத்து வெந்த பயறு சேர்த்து கொதிக்க விடவும்.
தட்டை பயறு குழம்பு ரெடி.

முட்டைக்குழம்பு /Muttai kulambu/ Egg curry

முட்டை க்குழம்பு:

முட்டைக்குழம்பு, பார்க்கும்போதே பசியைத்தூண்டும் அவித்தமுட்டை காரக்குழம்பு. பெரும்பாலும் முட்டையை விரும்பி உண்ணுபவர்கள் அதிகம் சிலருக்கு அவித்தமுட்டை, சிலருக்கு பொரித்த முட்டை இன்னும் சிலர் தோசை வகையில் விருப்பாம் காட்டுவார்கள். இந்த முட்டைக்குழம்பு சுவையும் மனமும் நிறைந்த ஒன்று, அவித்தமுட்டையோடு, குழம்பு கொதிக்கும் பொது ஒரு முட்டையை உடைத்து நடுவில் ஊற்றி கொதிக்கவைத்து செய்வது இன்னும் சுவையைக் கூட்டும். இதன் முறை விளக்கம் காண்போம்.

முட்டை க்குழம்பு
முட்டை க்குழம்பு

தேவையான பொருட்கள்:
முட்டை-4(3+1)
வெங்காயம்-1
பூண்டு 7 பல்
தக்காளி-1
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
சாம்பார் மிளகாய்த்தூள்-2 1/2 தேக்கரண்டி, அல்லது மிளகாய்த்தூள்-1 மல்லித்தூள் 1 என்னும் விகித்தில் எடுத்துக்கொள்ளவும்.
புளிச்சாரு -2 மேஜைக்கரண்டி
செய்முறை:
1.முட்டை 3 அவித்துக்கொள்ளவும்.அவித்த முட்டையின் மேல் சிறிய கீறல்கள் போடவும் இதனால் குழம்பு உள்ளே சென்று முட்டயின் சுவயைக்கூட்டும். ஒரு முட்டையை  குழம்பு கொதிக்கும்போது ஊற்றவேண்டும்.
2.வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
3.வானலியில் எண்ணெய் காயவைத்து சோம்பு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும்.
4.பிறகு, வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும் தக்காளி சிறிது உப்பு சேர்த்து, தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.
5.இப்போது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைச்சல் சேர்க்கவும்.
6.இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வரைகொதிக்கவிடவும்.

முட்டை க்குழம்பு
முட்டை க்குழம்பு

7.நன்கு கொதிக்கும் பொது தீயை சிம்மில் வைத்து உடைத்த முட்டயை நிதானமாக நடுவில் ஊற்றவும்.                                                                                         8.இரண்டு நிமிடம் இளந்தீயில் கொத்திதபின் தீயை கூட்டவும், நன்கு கொதிவரும்போது அவித்த முட்டையை சேர்த்து இன்னும் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

smar
9. சுவையான முட்டை குழம்பு தயார்.
குறிப்பு:
மிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலே மிதந்து வரும்.
உடைத்தமுட்டை ஊற்றும் பொது கண்டிப்பாக தீயை குறைக்கவேண்டும் இல்லாவிட்டால் முட்டை பிரிந்துவிடும்.
ஊற்றிய முட்டை வேகும்வரை கரண்டி போட்டு கிளறக்கூடாது.(3 நிமிடம் )

சாம்பார் மிளகாய்த்தூள் / Sambar milagaithool

சாம்பார் மிளகாய்த்தூள் :
தென் இந்தியாவில் புகழ் பெற்றது சாம்பார், பாரம்பரிய உணவான இந்த சாம்பார் அன்றாட உணவில் முக்கிய இடம்வகிக்கிறது. சாம்பாரின் சுவை ரகசியம் சாம்பார் பொடி, இந்த சாம்பார் பொடி கூடுதல் சுவையும், மனமும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தேர்தெடுக்கப்பட்ட மசாலா பொருட்களை குறிப்பான விகிதத்தில் கலந்து பக்குவமாய் வறுத்து அரைப்பதே இந்த செட்டிநாடு சாம்பார் மசாலாவின் தனிச்சிறப்பு. கடைகளில் கூடுதல் விலைக்கு வாங்கும் சாம்பார் பொடியை விட பல மடங்கு பயனளிக்கக்கூடியது, கணிசமும் அதிகம். இதை ஆறு மாதம் வரை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். இது சாம்பார், காரக்குழம்பு கூட்டு, மசாலா வகை, பொரியல்,பச்சடி,மற்றும் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஏற்றது.

சாம்பார் மிளகாய்த்தூள் / Sambar milagaithool
சாம்பார் மிளகாய்த்தூள் / Sambar milagaithool

தேவையான பொருட்கள்:
சிவப்பு மிளகாய் – 1 கிலோ
மல்லி – 1 கிலோ
சோம்பு -200 கிராம்
சீரகம் – 200 கிராம்
வெந்தயம்- 100 கிராம்
பெருங்காயம் – 50 கிராம்
மஞ்சள் -50 கிராம்
மிளகு – 50 கிராம்
கடலை பருப்பு-100 கிராம்
துவரம் பருப்பு- 50 கிராம்
பச்சரிசி – 50 கிராம்.Untitled
செய்முறை :
ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
பொன்னிறமாக வறுத்தபின் அதை ஒன்று கலந்து ஆறவிடவும்.
ஆறியபின் மில்லில் கொடுத்து நைசாக அரைக்கவும்
பிறகு அரைத்த் பொடியை மறுபடியும் ஆற விடவும்.
செட்டிநாட்டு சாம்பார் மசாலா பொடி தயார்.

12666516_1032977600077183_512226781_n
குறிப்பு:
காரம் குறைவாக பயன்படுத்துபவர்கள் மல்லியை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
(சமமாக அளந்து வறுக்கவும் 1கிலோ மிளகாய்,1 கிலோ மல்லி )

வெண்டைக்காய் மோர் குழம்பு / Ladiesfinger buttermilk Curry

 

வெண்டைக்காய் மோர் குழம்பு:

Vendaikaai Mor Kuzhambu for English please click below link,

http://wp.me/p1o34t-dw

குழம்பு வகைகளில் தனிச்சுவை பெற்றது இந்த மோர் குழம்பு வகை.
அளவான புளிப்பு, காரம் செரிமான சக்தியை த்தூண்டும் இஞ்சி, மிளகு,சீரகம் போன்ற மருத்துவ குணம் நிறைந்த பொருட்களுடன் செயப்படும் இந்த மோர்குழம்பு சுவையும் மணமும் நிறைந்தது. செய்முறை எளிதானது, உட்பொருளும் குறைவு.தென்னிந்திய விருந்துகளில் இது முக்கியமாக இடம் பெரும்.

மோர் குழம்பு, நம் விருப்பத்திற்கு ஏற்ப பரங்கிக்காய், பூசனிக்காய், சேப்பங்கிழங்கு போன்ற காய்களை வைத்தும் செய்யலாம்.

வெண்டைக்காய் மோர் குழம்பு / Ladies finger curd curry
வெண்டைக்காய் மோர் குழம்பு / Ladies finger butte milk curry

தேவையான பொருட்கள்: 4 அல்லது 5 பேருக்கு பரிமாறலாம்.
தயிர் -3/4 கோப்பை அல்லது 150 மில்லி
உப்பு-1 தே.க
மஞ்சள்த்தூள்-1/4 தே.க
தக்காளி-1/2
வெண்டைக்காய்-5

12285713_990551840986426_827204786_n
அரைக்கத்தேவயான பொருட்கள்:
துவரம் பருப்பு-1 தே.க
பச்சரிசி-1 தே.க
இஞ்சி-1 அங்குலம் பச்சைமிளகாய்-3
சீரகம்-1/2 தே.க
மிளகு-1/2 தே.க
தேங்காய்-1 1/2 மேஜைக்கரண்டி துருவியது அல்லது 3 கீற்று

12308931_990551800986430_1763690643_n
தாளிக்க:
எண்ணெய் -1தே.க
கடுகு-1/2தே.க
வரமிளகாய்-1
சீரகம்-1/4 தே.க
செய்முறை:
அரிசி, பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து, அரைக்கும் பொருட்களுடன் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
தயிரை சம அளவு நீர் சேர்த்து மோராக்கிக்கொள்ளவும்.
வெண்டைக்காய் தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்க வேண்டும்.

12277325_990551764319767_1970810982_n
நன்கு வதங்கி வரும் பொது தக்காளி, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும், தக்காளி தோல்விட்டு வரும் போது அரைத்த கலவையில் சிறிது நீர் கலந்து வதக்கிய காயுடன் சேர்த்துக் கிளறவும்

12277257_990551744319769_351202901_n
கொதித்து வரும் சமயம் கலந்த மோரை சேர்க்கவும், ஒன்றாக கொதி நிலையை அடைந்த பொது அடுப்பிலிருந்து இறக்கவும். அதிகம் கொதிக்கக்கூடது கவனமாக செய்ய வேண்டும்.

12305770_990551740986436_807509274_n

12309237_990551704319773_348522485_n
இப்போது கடுகு, வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து பரிமாறவும்.
மோர் குழம்பு தயார்.

வெண்டைக்காய் மோர் குழம்பு / Ladies finger curd curry
வெண்டைக்காய் மோர் குழம்பு / Ladies finger curd curry

சோயா குழம்பு / Soya chunks Gravy

சோயா குழம்பு / Soya chunks Gravy:

சோயா குழம்பு:
சிறந்த கால்சியம் சத்து நிறைந்த சோயா அல்லது மீல் மேக்கரில், மசாலா பொடிமாஸ், பிரயாணி என பலவகை செய்வதுண்டு.இந்த குழம்பு வகை ஒரு நல்ல சுவை நிறைந்தது, பொது வாக இந்த சோயாவில் நாம் சேர்க்கும் உப்பு, காரம் போன்ற பதார்த்தங்களளை ஈர்க்கும் தன்மை குறைவு, அனால் இந்த குழம்பு வகையில் நன்றாக சார்ந்து சுவைகூட்டும் வண்ணம் அமைவது சிறப்பு. சைவர்கள் விரும்பி ஏற்பது இந்த சோயா செய்முறை.

சோயா குழம்பு / Soya chunks Gravy
சோயா குழம்பு / Soya chunks Gravy

தேவையான பொருட்கள்:
சோயா -1 கோப்பை
இஞ்சி பூண்டு விழுது-1தே.க
தக்காளி-1
மிளகாய்த்தூள்-1 1/2
மஞ்சள் தூள்-1/4 தே.க
வெங்காயம்-1
மல்லித்தழை -சிறிது
அரைக்க:
சோம்பு-1தே.க
சீரகம் 1/2தே.க
பாதாம்-4
தேங்காய்-2 மேஜைக்கரண்டி
மிளகு-1/2தே.க

12282990_989151337793143_1936985255_n
தளிக்க:
எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
பட்டை-1இன்ச்
கிராம்பு-1 2
லவங்க இலை
கறிவேப்பிலை-1 கொத்து
செய்முறை:
சோயாவை 20 நிமிடம் வரை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து இரண்டு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

12278258_989151281126482_1702109403_n
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யாவும்.
கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் வெட்டி வைத்துள்ள சோயாவை சேர்த்து சிறிது வதக்கி, உப்பு மிளகாய்ப்பொடி, மஞ்சள் போடி, அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

12278089_989151254459818_1996006505_n
குக்கரில் ஓரிரு சவுண்ட் விட்டு இறக்கவும்.

11910970_989151211126489_898804953_n
ஆறியதும் மல்லி இல்லை சேர்த்து பரிமாறவும்.
இது சாதம், சப்பாத்தி, பூரிக்கு கூட பரிமாறலாம்.பிரியாணிக்கு சால்னா போன்றும் சேர்த்துக்கொள்ளவும்.

சோயா குழம்பு / Soya chunks Gravy
சோயா குழம்பு / Soya chunks Gravy

மொச்சை கத்திரிக்காய் குழம்பு

மொச்சை கத்திரிக்காய் குழம்பு:

மொச்சை கத்திரிக்காய் குழம்பு, பாரம்பரிய சமையல் முறையில் நம் முன்னோர் கற்றுத்தந்த ஒரு நல்ல ருசியான கலவை. மொசைக்கு குறிப்பான ஒரு நல்ல சுவையுண்டு. புரதச்சத்து, கால்சியம், அமினோ அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்தது மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டது.
இந்த மொச்சை கத்திரிக்காய் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை மற்றும் கொழுக்கட்டைக்கு நல்ல பொருத்தமானது.

மொச்சை கத்திரிக்காய் குழம்பு
மொச்சை கத்திரிக்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:
மொச்சை-1/2 கோப்பை கத்திரிக்காய் பிஞ்சாக-5
பூண்டு-7 பல்
சின்ன வெங்காயம்- 9
கறிவேப்பிலை-1 கொத்து
தக்காளி-1
உப்பு-1 1/2 தே.க
மஞ்சள் தூள்-1/4
புளிச்சாறு -2 மேஜைக்கரண்டி
சாம்பார் மிளகாய்ப்பொடி-2 1/2 தேக்கரண்டி
அல்லது
தனி மிளகாய்த்தூள் -1 1/2, மல்லித்தூள்-1 தேக்கரண்டி
தளிக்க :
எண்ணெய் -1 1/2 மேஜைக்கரண்டி
சோம்பு-1 தே.க
சீரகம்-1/2 தே.க
வெந்தயம்-1/4 தே.க
செய்முறை:
மொச்சையை 6 மணிநேரம் ஊறவைக்கவும். குக்கரில் 2 விசில் வேக வைத்துக்கொள்ளவேண்டும்.

12231137_986288861412724_1007953525_n
கத்திரிக்காயை நான்காக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம் பூண்டு தோலுரித்து நறுக்கிக்கொள்ளவும்.                           தக்காளியை சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
கறிவேப்பிலை,வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும், பின்னர் வெட்டிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் பொது தக்காளி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

12272737_986288821412728_486010876_n
பின்னர் புளிச்சாறு , மிளகாய்த்தூள் மற்றும் 2 கோப்பை தண்ணீர் செர்த்துக்கொதிக்கவிடவும். கத்திரிக்காய் வெந்ததும் வேகவைத்த மொச்சை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
குழம்பு கெட்டியானதும் சூடான சாதத்துடன் பரிமாற மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரெடி.

மொச்சை கத்திரிக்காய் குழம்பு
மொச்சை கத்திரிக்காய் குழம்பு

குறிப்பு:

மொச்சை ஊறியதும், மறுநாள் காலை தோலுரித்தும் பயன்படுத்தலாம்.
ஆள்காட்டி விரல் ,கட்டை விரல் கொண்டு லேசாக அழுத்தினால் தோல் அகன்றுவிடும்.
சிறு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கி தளிக்கும் பொது சேர்க்கலாம்.