மாங்காய் தொக்கு :
சத்து நிறைந்த மாங்காய், பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும் அது மாங்காயின் குணம்.”மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்” என்பது பழமொழி. உணவில் பல விதமாக இந்த மாங்காயைப் பயன்படுத்தலாம். மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான். இவ்வகையில் சுவையான மாங்காய் தொக்கு இன்று காண்போம்.
தொக்கு செய்யத்தேவையான பொருட்கள்:
மாங்காய்-2
உப்பு -2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 மேஜைக்கரண்டி
வெந்தயத்தூள்-1 1/2 தேக்கரண்டி,. 1 தேக்கரண்டி வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
சுத்தமான நல்லெண்ணெய் -4 மேஜைக்கரண்டி
பொடித்த வெல்லம் -1 1/2 மேஜைக்கரண்டி
கடுகு-1 தேக்கரண்டி
பெருங்காயம் -1/2 தேக்கரண்டி
செய்முறை:
மாங்காயை நன்கு கழுவி சுத்தமான துணியால் துடைத்து பின்னர் துருவிக்கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளிக்கவும், பெருங்காயம் சேர்க்கவும்.
துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும்.
மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள், உப்பு, வெந்தயப்பொடி மற்றும் வெல்லம் சேர்த்து இளந்தீயில் வதக்கவும்.
மாங்கை நன்கு ஒன்று சேர்ந்து எண்ணெய் விட்டு வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
நன்கு ஆரிய பின்னர் கொள்கலனில் வைத்து பயன்படுத்தவும்.
