பூண்டு ஊறுகாய் :செட்டிநாட்டின் சுவையில்
ஊறுகாய்க்கு சுவையும் மனமும் அதிகரிக்க கடைகளில் விற்கும் பொடிகளை விட புதிதாக அரைத்த மசாலா கலவையே சிறந்தது. சுவையான பூண்டு ஊறுகாய் சாதம், சப்பாத்தி, என அனைத்திற்கும் ஏற்றது.
பூண்டு – 1/4 கிலோ
எலுமிச்சை சாறு -150 மில்லி
நல்லெண்ணெய்- 150 மில்லி
உப்பு – 1/4 கோப்பை ( 3-4 மேஜைக்கரண்டி )
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
வெல்லம் – 1 மேஜைக்கரண்டி
வறுத்து பொடிக்க:
வரமிளகாய்-30
வரமல்லி – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
செய்முறை :
பூண்டை தோலுரித்து நீளவாக்கில் வெட்டிவைத்துக்கொள்ளவும்.
எலுமிச்சை சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வறுத்து பொடிக்க பொருட்களை தனித்தனியாக வறுத்து பொடித்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து கடுகு தாளித்து, பூண்டை வதக்கவும்.
பூண்டு நன்கு வதங்கியதும், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், வருத்தரைத்த மசாலாபொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர், வெல்லம், எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான பூண்டு ஊறுகாய் தயார்.
அசல் சுவையுடன் பெற்று மகிழ சொடுக்கவும் காரைக்குடியில் இருந்து உங்களை வந்தடையும்.
To Buy https://www.chettinadsnacksonline.com/collections/pickle/products/garlic-pickle