கவுனி அரிசி அல்வா / Kavuni Arisi Halwa:
செட்டிநாட்டு சிறப்பு மிக்க கவுனிஅரிசி இப்போது அல்வா சுவையோடு உங்கள் விருந்து சிறக்க, நா சுவைக்க.
சத்து நிறைந்த கவுனி அரிசி உடல் சூட்டை தவிர்ப்பதோடு, நார் சத்து மிகுதியானதால் மலசிக்கல் விலகும். கருப்பு அரிசி ஒரு பசையம் இல்லாத தானியமாகும். ஒவ்வாமை மற்றும் செலியக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்ல மாற்றாகும்.
உடலில் உள்ள குளுக்கோஸ் உறிஞ்சுதலில் உதவுகிறது, இந்த அரிசி தவிடு நிறைந்த நார்சத்து கொண்டிருக்கும், நீரிழிவு நோயை சமாளிக்க உதவுகிறது. இது வகை 2 நீரிழிவு ஆபத்தை குறைக்கிறது.

செய்யத்தேவையான பொருட்கள் :
கவுனி அரிசி -1 கோப்பை
சீனி – 1 1/4 கோப்பை
ஏலக்காய் -3
நெய் – 1/2 கோப்பை
முந்திரி 10
திராட்சை 1 மேஜைக்கரண்டி
கவுனி அரிசியை நன்கு ஊறவைத்து நல்ல விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வானலியில் சிறிது நெய் காய வைத்து , முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதே வானலியில் அரைத்த கவுனிஅரிசி, தண்ணீர் 2 கோப்பை சேர்த்து கிளறவும்
கெட்டியான பிறகு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
நன்கு திரண்டு, உருண்டு வரும் சமயம் முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும்.
நெய்விட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் சமயம் அடுப்பை விட்டு இறக்கி ஆறவிடவும்.
சூடான கவுனிஅரிசி ஆல்வா தயார்.