கத்தரிக்காய் கொத்சு:
ஆடலரசன் நடராஜர் வீற்றிருக்கும், சிதம்பரத்தின் உணவுச்சிறப்பு இந்த கத்தரிக்காய் கொத்சு. அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றுமொரு பெருமை, இதைத்தொடர்ந்து நம் நகரத்தார் அதிகம் வாழும் இடம் சிதம்பரம் ஆயிற்று. நான் ருசித்து விரும்பிய இந்த “கொத்சு” அங்கு வசித்துவரும் மக்களிடம் கேட்டறிந்த செய்முறை இங்கு உங்களுக்காக.
வறுத்து பொடித்த மல்லி, மிளகாயின் மண ம் இதன் தனிச்சிறப்பு. இது நமது பிரதான உணவான இட்லி ,தோசைக்கு நல்ல சுவை கூட்டும் .

செய்யத்தேவையான பொருட்கள்:
வறுத்து பொடிக்க :
சிவப்பு மிளகாய் -4
மல்லி-1 மேஜைக்கரண்டி
1 தேக்கரண்டி எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து, இடித்து, போடி செய்து, தயாராக வைத்துக்கொள்ளவும்.
கத்திரிக்காய் – 1/2 கிலோ
வெங்காயம்-1 பெரியது
தக்காளி -1 பெரியது
கறி வேப்பிலை
உப்பு -1 தேக்கரண்டி
புளி -1 மேஜைக்கரண்டி சாறு
செய்முறை:
கத்தரிக்காய், வெங்காயம் , தக்காளி பச்சை மிளகாய் வெட்டிவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிதம் செய்யவும்.
நறுக்கிய. கத்தரிக்காய், வெங்காயம் , தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் ,
2 கோப்பை நீர் சேர்த்து நன்கு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
பிறகு, மையாக கடைந்து கொள்ளவும், வறுத்து பொடித்த மிளகாய், மல்லி போடி சேர்த்து,
உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
மல்லி இல்லை தூவி பரிமாறவும்.

குறிப்பு:
கத்தரிக்காய் மட்டும் வேகவைத்து கடைந்து கொண்டு, தக்காளி வெங்காயம் வதக்கியும், பொடி கலந்து செய்யலாம்.