இனிப்பு சீடை:
Krishna jayanthi special Sweet Seedai, for recipe in English please click : http://wp.me/p1o34t-XO
கிருஷ்ண ஜெயந்தி / கோகுலாஷ்டமி சிறப்பு சீடை. இனிப்பு சீடை வெளிப்பகுதி மொறுமொறுப்பாகவும் உள்பகுதி சிறிது மென்மையானதாகவும், இதமான இனிப்பும், பச்சரிசியின் பால் போன்ற சுவையும் சுவைக்க சுவாரஸ்யமானது.பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை கெடாமல் பயன்படுத்தலாம். குறிப்பிட்டுள்ள முறையை கவனமாக பின்பற்றி பயனடைவீராக.
செய்முறை:
பச்சரிசி மாவு வீட்டில் தயாரித்த பச்சரிசி -1 கோப்பை
வறுத்த உளுந்து மாவு-1 மேஜைக்கரண்டி
வெல்லம் -1/2 கோப்பை பொடித்தவைத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவியது-1 மேஜைக்கரண்டி
எள்ளு-1 தேக்கரண்டி
ஏலப்பொடி -1/4 தேக்கரண்டி
மாவு தயாரிக்க:
பச்சரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு தண்ணீரை சுத்தமாக வடித்துவிடவும், சுத்தமான துணியில் உலர்த்தவும்.
தண்ணீர் முற்றிலும் உலர்ந்ததும், (அரை ஈரப்பதம் ), மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரே மாதிரியான அமைப்புக்கு சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.
சீடை தயாரிக்க:
அரைத்து சலித்த மாவுடன், அரைத்தமாவில் பொடித்த வெல்லத்தை சேர்த்து (10 நொடி) அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில்உளுந்தமாவு, தேங்காய், எள்ளு மற்றும் ஏலப்பொடி சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும்.
பின்னர் சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி பொறிக்க தயாராக வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து (கவனம் அதிகம் காயவிடக்கூடாது) மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
சுவையான இனிப்பு சீடை தயார்.
குறிப்பு:
1.வெல்லம் சேர்த்து கவனமாக அரைக்கவும், நன்கு கட்டிகள் இல்லாமல் கலவை ஒன்று சேரும் வண்ணம் பிசைந்துகொள்ள வேண்டும்.
மிதமான தீயில் பொரித்தெடுக்க வேண்டும், இல்லையேல் வெல்லம் சேர்த்தமையால் எளிதில் வெளிப்புறம் கருகி விடும் உள்புறம் வேகாமல் இருக்கும்.