நவரத்தினக்குருமா :
நவரத்தினமாய், வண்ணமயமான காய்கறிகளுடன் பக்குவமாய் மசாலாக்களை சேர்த்து சுவையோடு, மனமும் கலந்து, பார்த்தவுடன் சாப்பிடத்தோன்றும் அருமையான நவரத்தின குருமா. இதற்கு இணையாக சப்பாத்தி, பூரி, பரோட்டா மற்றும் இடியப்பம் பரிமாறலாம்.
Recipe in English click link – http://wp.me/p1o34t-hf

தேவையான பொருட்கள்: 4 to 6 servings
கேரட் -1/2 கோப்பை
காலிபிளவர் (பூக்கோசு)-1 கோப்பை
பீன்ஸ் -1/2 கோப்பை
உருளைக்கிழங்கு-1
தக்காளி -1
வெங்காயம்-1
பச்சை பட்டாணி-1/2 கோப்பை
மக்காச்சோளம் -1/2 கோப்பை
தயிர்-1 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
உப்பு-1 1/2 தேக்கரண்டி
கரம்மசாலாதூள்-1/2
அரைக்க:
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
தேங்காய் -1 மூடி
பொட்டுக்கடலை -2 தேக்கரண்டி
பாதாம் பருப்பு-4
பச்சை மிளகாய்-5
தாளிக்க:
எண்ணெய்- 2 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2
பட்டை,
லவங்கம்,
கிராம்பு
செய்முறை :
1.காரட், பீன்ஸ், காலிபிளவர்,உருளைக்கிழங்கு, இவற்றை சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்.
2.தக்காளி மாற்று வெங்காயம், வெட்டி வைத்துக்கொள்ளவும்.
3.அரைக்கும் பொருட்களை நல்ல விழுதாக அரைத்துவைத்துக்கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் காய வைத்து தாளிதம் செய்யவும்.
5. இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும், வெட்டிய வெங்காயம் மாற்று காய் கறிகள் சேர்த்து 2 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.
6.பிறகு, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
7.சிறிது நேரம் வதங்கிய பின்னர் பச்சை பட்டாணி, மக்காச்சோளம் சேர்த்து, தண்ணீர் இரண்டு கோப்பை சேர்த்து நன்கு வேக விடவும்.
8. காய் வெந்ததும், தயிர், அரைத்த விழுது சேர்த்து மிதமானத்தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
9. மசாலா வாடை மாறியதும் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
10. சப்பாத்தி, பூரி, பரோட்டா இவைகளுக்கு ஏற்ற பதார்த்தம் நரத்தின குருமா.