அன்னாசிப்பழ கேசரி:
For English recipe please click: http://wp.me/p1o34t-16H
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை இந்தக் கேசரி, சில நிமிடங்களில் தயார் செய்து பரிமாரிவிடலாம். உள்ளடங்கும் பொருட்களும் அன்றாடம் நம் அடுப்பங்கரையில் உபயோகப்படுத்துவது என்பதால் நினைத்ததும் தயங்காது செய்துவிடலாம். கேசரியில் பல வகை உண்டு, முறை ஒன்றே மூலப்பொருள்தான் மாறுபடும். இந்த வகையில் ஒரு சிறிய மாற்றமாகவும், மாறுபட்ட சுவையுடன் இந்த அன்னசிப்பழ கேசரி தயாரிப்போம்.

செய்யத்தேவையான பொருட்கள்:
வெள்ளை ரவை -1 கோப்பை
அன்னாசிப் பழம் நறுக்கியது-1 கோப்பை
சீனி-1 1/4 கோப்பை
ஏலக்காய் பொடி -1/4 தேக்கரண்டி
நெய்-3 மேஜைக்கரண்டி
மஞ்சள் வண்ணப் பொடி ஒரு சிட்டிகை
முந்திரி, திராட்சை 2 மேஜைக்கரண்டி
செய்முறை:
1. வாணலியில் நெய் சூடேற்றி முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
2. அதே நெய்யில் நறுக்கிய அன்னசிபழத்தை 3 நிமிடம் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
3. பின்னர் இன்னும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து ரவையை 5 நிமிடம் வரை கருகிவிடாமல் மிதமான தீயில் கவனமாக சற்று நிறம் மாறும் வரை வறுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
4. ஒரு பானில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும், கொதித்ததும் வண்ணப் பொடி, ஒரு மேஜைக்கரண்டி நெய் மற்றும் வறுத்த அன்னாசிப்பழத்தை சேர்க்கவும், பின்னர் வறுத்து ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
5. ரவை வெந்ததும் தீயைக் குறைத்துக்கொள்ளவும், அளந்து வைத்துள்ள சீனியை சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிவிடவும்.
6. நன்கு ஒன்று சேர்ந்து வந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும்.
7. வறுத்த முந்திரி, திரட்சி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான அன்னாசிப்பழக் கேசரி தயார்.