பால் பாயசம்:
எளிய சுவையான பால் பாயாசம் செய்வது மிகவும் சுலபம். ஆனால், நம்மில் பலர் இதை பெரிய வேலையாக நினைத்து செய்வதில்லை. குழந்தைகளும் இதை விரும்பி உட்கொள்ளுவார்கள். சத்தான பால், பாதாம், முந்திரி என அனைத்து சிறப்புகளும் உள்ளடங்கியது பால் பாயசம்!!! இன்றே செய்து தாருங்கள்.

செய்யத்தேவையான பொருட்கள் :
கெட்டியான பால்-1 லிட்டர, மில்க்மைட் 2 மேஜைக்கரண்டி சேர்த்துக்கொள்ளலாம் சுவை கூடுதலாக இருக்கும்.
சர்க்கரை-50கிராம்
பச்சரிசி-1/4 கோப்பை
பாதாம் பருப்பு -5
ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி
முந்திரி திராட்சை -2 மேஜைக்கரண்டி
நெய் -1 மேஜைக்கரண்டி
குங்குமப்பூ சிட்டிகை
செய்முறை:
1. பச்சரிசியையும், பாதாம் பருப்பையும், 1 /2 மணிநேரம் ஊற வைக்கவும் ,பிறகு மிக்சியில் குருணையாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
2. முந்திரி திராட்சையை 1 தேக்கரண்டி நெய்யில் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
3. அரைத்த அரிசியை, பாலில் கலந்து அடுப்பில் வைத்து இளம் தீயில் கைவிடாது கிளறவும்.
4.கலவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
5.நன்கு ஒன்று சேர்ந்து கொதிக்கும்போது, மில்க்மைட், வறுத்த முந்திரி, திராட்சை, குங்குமப்பூமற்றும் ஏலக்காய்தூள் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான நாவூறும் பால் பாயசம் சில நிமிடங்களில் தயார்.
Super
LikeLike