சுறா மீன் புட்டு :
For English please click: chettinadcookbook.org/2015/04/13/sura-puttu/
சுறா, சிறப்பான மீன்களில் ஒன்றான சுறா மீனில் முட்கள் குறைவு, சதைப்பிடியான இந்த மீன் சுவையானது, பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்தது, மீன்புட்டு குழந்தைகள் மிகவும் விரும்பி உட்கொள்வர். குறிப்பாக இந்த புட்டு வகையில் முட்கள் அகற்றப்பட்டு, ஆவியில் அல்லது நீரில் வேகவைத்து சத்தாக சமைக்கபெற்றது. மிகவும் ஆரோக்கியமான இந்த மீன் புட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக சாப்பிடலாம். சப்பாத்தி, சாதம் இரண்டுக்கும் பொருத்தமானது.

செய்யத்தேவையான பொருட்கள்:
சுறா மீன்-1/2 கிலோ
உப்பு 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
வெங்காயம் 1 பெரியது, அதிகம் சேர்க்க இன்னும் சுவை கூடும்
இஞ்சி-2 அங்குலம் பொடியாக நறுக்கியது
எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
பச்சைமிளகாய் -2
கறிவேப்பிலை 2 கொத்து சீரகம் தாளிக்க
செய்முறை:
1. மீனை கழுவி, கொதிக்கும் நீரில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
2. வேகவைத்த மீனை தோல் உரித்து, முள் நீக்கி வைத்துக்கொள்ளவும்.
3. பின்னர் அதை ஒன்றிரண்டாக உதிர்த்து தயாராக வைக்கவும்.
4. வெங்காயம், பச்சைமிளகாய்,,இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
5. வாணலியில் எண்ணெய் காய வைத்து வும்.
6. பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
7. நன்கு வதங்கியதும், கறிவேப்பிலை,உதிர்த்த மீன், மிளகாய்த்தூள், உப்பு, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 3 நிமிடம் மூடி வைக்கவும். இடையிடையே கிளறிவிடவும்.
8. நன்கு ஒன்றுசேர்ந்து 5 நிமிடம் வரை வதங்கியதும் சப்பாத்தியுடனோ, சூடான சாதத்ததுடனோ பரிமாறலாம்.
9 சுவையும் மனமும் பசியைத்தூண்டும்.