கருப்பட்டி காபி / Karuppatti Coffee:
தேகத்துக்கு உற்சாகமும், பரவசமும் ஊட்டும் கருப்பட்டி காப்பியின் சுவையோ அலாதி. இதுவரை சுவைத்திராவிட்டால் இன்றே பருகுங்கள் அதன் சுவையும் குணமும் புரியும். நம் முனோர்கள் எதையும் காரணம் இன்றி உட்கொள்ள வில்லை, தினம் எழுந்தவுடன் காப்பி அருந்தினர், காரணம் அன்றைய வேலைகளை சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செய்து முடிக்க இது நம்மை தயார் படுத்துகிறது. கருப்பட்டியில் உள்ள இயற்கையான இனிப்பு வெள்ளை சர்கரையை விட அதிக நன்மை வாய்ந்தது. வெள்ளை சர்க்கரையோடு ஒப்பிடும் போது எந்த இரசாயனமும் கலக்காமல், அல்லது செயற்கை பொருட்கள் இல்லாமல் பதப்படுத்தப்பட்டது எனவே, இது ஒரு ஆரோக்கியமான மற்றும் இயற்கையாக இனிக்கும் தன்மை உடையது.
வெள்ளை சர்க்கரையில் மற்ற சத்துக்கள் அகற்றப்பட்டு, இனிப்பு சுவை மட்டுமே உள்ளது.
கருப்பட்டியில் மருத்துவ குணமும் அதிகம்:
1.எந்த காலத்திற்கும் ஏற்றது, குளிர் காலம், வெய்யில் காலம் என எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்.
2. வரட்டுஇருமல் மற்றும் சளி தொந்தரவுக்கு நல்ல மருந்தாக பயன்படுத்தலாம்.
3.சுவாசக்குழாய் சுத்தம் செய்யும் தன்மையுடையது. ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் பனை வெல்லம் எடுக்க அது குணமடையும்.
4.கால்சியம், இரும்பு மற்றும் மற்ற பயனுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.
5.நீரழிவால் அவதியுறும் மக்கள் போதுமான அளவு பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
அது காபி, டீ, முதலியன தயாரிப்பில் சர்க்கரைக்கு ஒரு மாற்றாக பயன்படுத்தப்படும்
6.மலச்சிக்கல் நிவாரணம் மற்றும் ஒற்றைத்தலைவலியை குறைக்க உதவுகிறது
7.எடை குறைக்க உதவுகிறது, உடலில் பருவகால விளைவுகள், மாற்றங்களை சீர் படுத்த உதவுகிறது.
8.இயற்கை சுத்தப்படுத்தி என்றும் கூறப்படுகிறது.
செய்யத்தேவையான பொருட்கள்:
கருப்பட்டி-1 மேஜைக்கரண்டி
சுக்கு -1/4 தேக்கரண்டி
காப்பித்தூள் -3/4 தேக்கரண்டி அல்லது புதிய காபி டிக்காசன் 1 மேஜைக்கரண்டி
காய்ச்சிய பால் 1/4 கோப்பை, தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை:
1 கோப்பை தண்ணீரில் கருப்பட்டி சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தயாராக வைக்கவும்.
அதில் சுக்குப்பொடி, காப்பி பொடி சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் காய்ச்சிய பால் சேர்த்துக்கொள்ளலாம்.