கோதுமை அல்வா / Wheat Halwa:
கோதுமை அல்வா :
கோதுமை அல்வா மிகவும் எளிதான முறையில் தினம் நாம் உபயோகிக்கும் கோதுமை மாவு கொண்டு அருமையான சுவையில் செய்திடலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைக்கக்கூடியது, வாயில் வைத்தாலே உருகி, மனம் மகிழும் தனிச்சிறப்பு கொண்டது இந்த அல்வா. வீட்டில் செய்தால் இன்னும் சிறப்பு.

செய்யத்தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு-1 கோப்பை
சீனி – 2 கோப்பை / அல்லது வெல்லம்
முந்திரி 1 மேஜைக்கரண்டி
நெய் – 3/4 கோப்பை
தண்ணீர்-5 அல்லது 6 கோப்பை
1. கோதுமை மாவைத் தண்ணீர் விட்டு கலந்து 3 மணி நேரம் வைக்கவும் .
2.பிறகு அதை நன்கு கட்டிகல்லில்லாமல் கரைத்து வடிகட்டி பால் போல் வைத்துக்கொள்ளவும்.
3. வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரியை பொன் நிறமாக வறுத்துக்கொள்ளவும்.
4. அதே கடாயில் கரைத்த கோதுமை பாலை ஊற்றி மிதமான தீயில் இடை விடாது கிளறவும்.
5 மாவு கூழ் போல் வரும் சமயம் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
6. தொடர்ந்து கண்ணாடி போல் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை நெய் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும்.
7. அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரியைத்தூவி ஆறவிடவும்.
8. சுடச்சுட கோதுமை அல்வா ரெடி.
குறிப்பு:
தேவைப்பட்டால் கலர் சேர்க்கலாம்.
வாசனைக்கு பச்சை கற்பூரம் சேர்க்கலாம்.
அல்வா அடடுப்பில் ஏற்றியதிலிருந்து இறக்கு வரை மிதமான தீயில் கை விடாது கிளறவேண்டும்.
இடை இடையே நெய் சேர்த்து கிளறவும்.