வெண்டைக்காய் மோர் குழம்பு:
Vendaikaai Mor Kuzhambu for English please click below link,
குழம்பு வகைகளில் தனிச்சுவை பெற்றது இந்த மோர் குழம்பு வகை.
அளவான புளிப்பு, காரம் செரிமான சக்தியை த்தூண்டும் இஞ்சி, மிளகு,சீரகம் போன்ற மருத்துவ குணம் நிறைந்த பொருட்களுடன் செயப்படும் இந்த மோர்குழம்பு சுவையும் மணமும் நிறைந்தது. செய்முறை எளிதானது, உட்பொருளும் குறைவு.தென்னிந்திய விருந்துகளில் இது முக்கியமாக இடம் பெரும்.
மோர் குழம்பு, நம் விருப்பத்திற்கு ஏற்ப பரங்கிக்காய், பூசனிக்காய், சேப்பங்கிழங்கு போன்ற காய்களை வைத்தும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்: 4 அல்லது 5 பேருக்கு பரிமாறலாம்.
தயிர் -3/4 கோப்பை அல்லது 150 மில்லி
உப்பு-1 தே.க
மஞ்சள்த்தூள்-1/4 தே.க
தக்காளி-1/2
வெண்டைக்காய்-5
அரைக்கத்தேவயான பொருட்கள்:
துவரம் பருப்பு-1 தே.க
பச்சரிசி-1 தே.க
இஞ்சி-1 அங்குலம் பச்சைமிளகாய்-3
சீரகம்-1/2 தே.க
மிளகு-1/2 தே.க
தேங்காய்-1 1/2 மேஜைக்கரண்டி துருவியது அல்லது 3 கீற்று
தாளிக்க:
எண்ணெய் -1தே.க
கடுகு-1/2தே.க
வரமிளகாய்-1
சீரகம்-1/4 தே.க
செய்முறை:
அரிசி, பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து, அரைக்கும் பொருட்களுடன் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
தயிரை சம அளவு நீர் சேர்த்து மோராக்கிக்கொள்ளவும்.
வெண்டைக்காய் தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்க வேண்டும்.
நன்கு வதங்கி வரும் பொது தக்காளி, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும், தக்காளி தோல்விட்டு வரும் போது அரைத்த கலவையில் சிறிது நீர் கலந்து வதக்கிய காயுடன் சேர்த்துக் கிளறவும்
கொதித்து வரும் சமயம் கலந்த மோரை சேர்க்கவும், ஒன்றாக கொதி நிலையை அடைந்த பொது அடுப்பிலிருந்து இறக்கவும். அதிகம் கொதிக்கக்கூடது கவனமாக செய்ய வேண்டும்.
இப்போது கடுகு, வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து பரிமாறவும்.
மோர் குழம்பு தயார்.
